Wednesday, March 3, 2010

சச்சினுக்கு பாரதரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை

டெல்லி, பிப்.28கிரிக்கெட் உலகின் பிதாமகன் என்றழைக்கப்படும் சச்சின் இந்தியாவிற்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவரது சாதனைகளுக்கு மகுடம் சூட்டும் விதமாக இந்தியாவின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என பலமான கோரிக்கை மத்திய அரசுக்கு எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் உலகத்தில் எந்த ஒரு வீரரும் எடுக்காத இரட்டை சதத்தினை அடித்தார். இதனை மேற்கோளாகக் கொண்டும் அவருடைய சாதனைகளை கணக்கில் கொண்டும் அவருக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்று மராட்டிய மாநில அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. சச்சினுடன் சமீபத்தில் மராட்டிய மாநில பிரச்சினையில் கருத்து வேறுபாடு கொண்டுள்ள சிவசேனாவும் சச்சினுக்கு இந்த விருதை வழங்க வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புகழாரத்தில் சச்சின்
கபில்தேவ் : கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார் சச்சின். அவர் பாரதரத்னாவிருதுக்கு பொருத்தமானவர் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. அப்படி அந்த விருதைப் பெற்றால், நாங்கள் மிகவும் சந்தோஷமடைவோம் என்றும் கூறியுள்ளார்.
அஜித் வடேகர் :
கிரிக்கெட் உலகின் கோஹினூர் வைரம் சச்சின். அவரிடம் யாரும் சாதிக்க முடியாத நிறைய திறமைகள் உள்ளன.
பீட்டர் ரோபக் :
கிரிக்கெட் உலகில் முழுமையான அனைத்து திறமைகளையும் கொண்ட வீரர் என்றால் சச்சின் மட்டுமே. கடந்த 60 ஆண்டுகளில் உருவான மிகச் சிறந்த ஆட்டக்காரர். வயது அதிகரிக்க, அதிகரிக்க அவருக்கு கிரிக்கெட் மீதான மோகம் அதிகரிக்கிறது தவிர குறையவில்லை. மிகச் சிறந்த ஆட்டக்காரர்களான பாண்டிங், லாரா, காலிஸ் ஆகியோர்களை விட மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள் என்று கூறினார்.
1994 அர்ஜுனா விருது
1997 விஸ்டன் கிரிக்கெட்டின் ஆண்டு விருது
1997/98 இந்தியாவில் விளையாட்டு துறைக்கு வழங்கும் மிகச் உயர்ந்த விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது
1999 பத்மஸ்ரீ விருது
2008 பத்மவிபூஷன் விருதுமேலும் பாரதரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டால் விளையாட்டுத்துறையில் பாரதரத்னா விருது பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.

பாரத ரத்னா கனவு எனக்கும் உண்டு சச்சின்

மும்பை,மார்ச்3
குவாலியரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதன் முதலாக இரட்டை சதம் அடித்து சச்சின் சாதனை படைத்தார். இதையடுத்து சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என கபில்தேவ்,கவாஸ்கர்,வடேகர் உள்பட பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியிருந்த நிலையில் தனக்கும் ஒவ்வொரு இந்தியரைப் போல பாரத ரத்னா விருது பெறும் கனவு உண்டு என்று சச்சின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பிறந்த எந்தவொரு குடிமகனுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய கௌரவம் பாரத ரத்னா விருதாகும். அதனால் அந்தப் பட்டியலில் தன்னுடைய பெயரும் இருக்கவேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது.பாரத ரத்னா விருது எனக்கு கிடைத்தால் அது ஒரு மிகப்பெரிய கௌரவமாகவே கருதுவேன் என்றும் இப்போதைக்கு, அது பற்றி நான் சிந்திக்கவில்லை என்றும் சச்சின் கூறினார்.

ஆடுகளத்திற்குள் அரசியல் வேண்டாம் ரணதுங்கா

சிட்னி,மார்ச் 3.
நாட்டுக்காக கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் போதுஅரசியலில் நுழையக் கூடாது என்று ஜெயசூர்யாவுக்கு ,ரணதுங்கா கண்டனம் தெரிவித்துள்ளார்.இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜெயசூர்யா. 40 வயதான இவர் 2007ம் ஆண்டு, டெஸ்ட் போட்டியிலிருந்து ஒய்வு பெற்றார். ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டியில் ஆடி வருகிறார். வரும் 2011ம் ஆண்டு உலககோப்பைக்கு பிறகு அவர் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.இந்நிலையில் இவர் தனது ஒய்வுக்கான முன்னோட்டமாக வரும் இலங்கை பாராளுமன்ற தேர்தலில் தமிழின படுகொலைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிபர் ராஜபக்சேயின் சுதந்திரா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவர் தனது சொந்த ஊரான மதரா தொகுதியில் போட்டியிடுகிறார். இது குறித்து ரணதுங்கா கூறும் போது ஜெயசூர்யா தாரளாமாக அரசியலுக்கு வரலாம் என்றும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது அரசியலில் நுழையக் கூடாது என்றும் ஆளும்கட்சிக்காரர் என்பதற்காக அணிக்கு வீரர்களை தேர்வு செய்யக்கூடாது என்று கூறினார்.இவர் 19932003ம் ஆண்டு வரை இலங்கை அணியின் கேப்டனாக பணியாற்றினார். மோசமான ஆட்டம் காரணமாக 2006ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டவர் ராஜபக்சேயின் வற்புறுத்தலினால் தனது முடிவை மாற்றிக் கொண்டு தற்போது கிரிக்கெட் விளையாடி வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஜெயசூர்யா கூறும்போது விளையாட்டு வீரர்கள் அரசியலில் நுழையக்கூடாது என்று சொல்லும் இலங்கை அரசியலமைப்புச் சட்டம் எதுவும் இல்லை என்றார்.

ஐ.பி.எல்.போட்டி பாதுகாப்பு குறித்து கவலையில்லை

சிட்னி,மார்ச் 3.
இந்தியாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.பி.எல்போட்டியில் பல வெளி நாட்டு வீரர்கள் தங்களின் பாதுகாப்புகளை மேற்கோள் காட்டி போட்டியில் பங்கேற்க தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா முன்னால் வீரர் டேமியன் மார்ட்டின் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார்.அவர் செய்தியாள்ர்களிடம் கூறியதாவது .ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்பதா வேண்டாமா என்பதை வீரர்களின் முடிவுக்கு விட்டு விடவேண்டும் என்றும் இது குறித்து அந்தந்த நாடுகள் எடுக்கும் முடிவுகளை அந்நாட்டு வீரர்கள் மீது திணிக்கக் கூடாது என்று கூறினார் மார்டின்.மேலும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட கிரிக்கெட் அமைப்பான்ஐ.சி.எல். கிரிக்கெட்டில் விளையாடிய பிறகு தற்போது ஐ.பி.எல். அணிக்காக முதன் முதலாக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.