Saturday, July 3, 2010

கோல்டன் ஷ விருது

ஜோகனஸ்பர்க், ஜுலை.2
உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்த வீரருக்கு 1982ம் ஆண்டிலிருந்து கோல்டன் ஷý வழங்கப்பட்டு வருகிறது.19வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் இரண்டாவது சுற்று போட்டிகள் முடிந்துள்ளன.இரண்டாவது சுற்று வரை அதிக கோல் அடித்துள்ள வீரர்கள்
1. ஹீகுவான் அர்ஜென்டினா 4 கோல்கள்
2.டேவிட்வில்லாஸ்பெயின் 4 கோல்கள்
3. தாமஸ்முல்லர்ஜெர்மனி 3 கோல்கள்
5. சாரஸ் உருகுவே3 கோல்கள்
6. பேபியானோ பிரேசில்செவில்லா3 கோல்கள்
7. அசமா கியான்கானா 3 கோல்கள்
8. எலானோபிரேசில்2 கோல்கள்
இவர்களில் யார் கோல்டன் ஷý விருதை வாங்கப்போகிறார்கள் என்று இறுதி ஆட்டத்திற்கு பிறகு தெரியும்.

இன்று காலிறுதி ஆட்டம் பிரேசில்நெதர்லாந்து மோதல்

ஜோகனஸ்பர்க், ஜுலை.2
ஆப்பிரிக்க கண்டத்தில் முதன் முறையாக நடைபெறும் 19வது உலக கோப்பை கால்பந்து போட்டி தென்னப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பிறகு இந்த தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் காலிறுதி சுற்றின் முதல் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணியும் ,உலக கால்பந்து தரவரிசையில் 4வது இடத்திலுள்ள நெதர்லாந்து அணியும் மோதுகிறது.கடந்த மாதம் 11ந்தேதி தொடங்கிய உலக கோப்பை போட்டி தற்போது விறுவிறுப்பான நிலைக்கு சென்றுள்ளது. கடந்த 26ந்தேதி தொடங்கி 29ந்தேதி முடிவடைந்தது ரவுண்ட் 16 சுற்று .
காலிறுதி அணிகள்
இந்த சுற்று போட்டிகளின் முடிவில் உருகுவே, கானா, ஜெர்மனி, அர்ஜென்டினா, நெதர்லாந்து, பிரேசில், பராகுவே, ஸ்பெயின் ஆகிய 8 நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.இதுவரை நடந்த 18 உலக கோப்பை
போட்டிக்கும் தகுதி பெற்ற ஒரே அணி பிரேசில் . அந்த அணி 1958, 1962, 1970, 1994, 2002 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பையை கைப்பற்றியது. தற்போது 6வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.இதற்கு வலுவாக பிரேசில் அணியில் பேபினோ, ரோபினோ, ககா, மயக்கான் ஜூயன் போன்ற உலகின் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர்.
அந்த அணியின் கோல்கீப்பர் ஜூலியோ சீசர் சிறப்பாக செயல்படுகிறார்.இந்நிலையில் சிறந்த நடுகள வீரரான இலனோ காயம் அடைந்துள்ளது பிரேசில் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.இதனால் அவர் நெதர்லாந்துக்கு எதிராக ஆடமாட்டார் என்று தெரிகிறது அவர் ஏற்கனவே 2 கோல்கள் அடித்துள்ளார். இதேபோல் பிரேசில் அணிக்கு எல்லா வகையிலும் சவால் விடும் அணியாக நெதர்லாந்து கருதப்படுகிறது.அந்த அணியில் வெஸ்லி சினைடர், ரோபின் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.
இதுவரை....
இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய போட்டியில் பிரேசில் 3 ஆட்டத்திலும், நெதர்லாந்து 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றன. 4 ஆட்டம் ""டிரா'' ஆகியுள்ளது.
சுற்று போட்டிகள்
நெதர்லாந்து அணி லீக் போட்டியில் தோல்வி எதையும் சந்திக்காமல் காலிறுதியில் நுழைந்து உள்ளது. அந்த அணி ""லீக்'' ஆட்டத்தில் டென்மார்க்கையும் (20), ஜப்பானையும் (10), கேமரூனையும் (21) தோற்கடித்தது.
2வது சுற்றில் 21 என்ற கணக்கில் சுலோவாக்கியாவை வீழ்த்தியது.
பிரேசில் அணி லீக் ஆட்டத்தில் வடகொரியாவையும் (21), ஐவேரிகோஸ்டையும் (31) வென்றது. போர்ச்சுக்கலுடன் (00) ""டிரா'' செய்தது. 2வது சுற்றில் சிலியை (30) வென்று காலிறுதி சுற்றுக்கு நுழைந்தது.

வரலாறு படைக்குமா கானா?

ஜோகன்ஸ்பர்க், ஜூலை 2
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதில் 2வது காலிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது.
இந்த போட்டியில் உலக தர வரிசையில் 16வது இடத்திலுள்ள உருகுவே அணியும் கானா அணியும் மோதவுள்ளது .இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும்
தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள உருகுவே ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கானா அணிகள் மோதுவதால் ரசிகர்ளிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய வரலாறு
அதோடு மட்டுமில்லாமல் ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள எந்த ஒரு அணியும் இதுவரை அரையிறுதிக்கு நுழைந்தது இல்லை . இதுவரை 1990ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் கேமரூனும் , 2002ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் செனகல் அணியும் தான் காலிறுதி வரை நுழைந்துள்ளன.இந்த வரலாற்றை உடைத்து கானா அணி புதிய வரலாறு படைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் அசமா ஜியான், கெவன் பிரின்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.கானா அணி தனது லீக் ஆட்டத்தில் செர்பியாவை 10 என்ற கணக்கில் வென்றது. ஆஸ்திரேலி யாவுடன் 11 என்ற நிலையில் டிரா'' செய்தது.வலிமை வாய்ந்த ஜெர்மனியிடம் 01 என்ற கணக்கில் தோற்றது . ரவுண்ட் 16 சுற்று போட்டியில் கூடுதல் நேரத்தை பயன்படுத்தி 21 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்தது.
இதேபோல் 2 முறை உலக கோப்பையை வென்ற (19301934) உருகுவே அணியில் லூயிஸ் சுராஸ், டிகோ போர்லான் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளதால் அந்த அணியும் அரையிறுதிக்கு நுழையும் ஆர்வத்திலுள்ளது. அந்த அணி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவையும் (30), மெக்சிகோவையும் (10) என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது . பிரான்சுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. ரவுண்ட் 16 சுற்று ஆட்டத்தில் 21 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வென்றது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றியடைந்தது

லண்டன்,ஜுலை. 2
ஆஸ்திரேலியா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது.பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகளுக்கு இடையேயான 5 ஒரு நாள் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணி முதல் 3 போட்டியிலும் வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி ஓவலில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக மைக்கேல் கிளார்க் ஆட்டம் இழக்காமல் 106 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் எடுத்தார். ரிக்கி பாண்டிங் 93 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 92 ரன் எடுத்தார்.இந்த ரன்களின் உதவியுடன் பாண்டிங் ஒருநாள் போட்டியில் 13 ஆயிரம் ரன்னை கடந்தார்.
பின்னர் 291 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 42.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் ஆஸ்திரேலியா 78 ரன்னில் அபார வெற்றி பெற்றது. யார்டி அதிகபட்சமாக 57 ரன்னும், மார்கன் 47 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய வீரர் ஹாரிஸ் 32 ரன் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார்.
5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் வென்றுள்ளது.