Tuesday, May 18, 2010

இங்கிலாந்து அணி சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளதுஸ்ரீநாத்

மும்பை,மே .18

2010ம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சு தான் ஆதிக்கம் செலுத்தியது என்று இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.டி 20 உலக கோப்பை குறித்து ஸ்ரீநாத் மேலும் கூறியதாவது: நடந்த முடிந்த உலக கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வேகப்பந்து வீச்சை இன்னும் சிறப்பாக மேம்படுத்த வேண்டிய சூழ்நிலையை உணர்ந்திருக்குமென்று நம்புகிறேன்.இந்திய ஆடுகளங்களுக்கும்,வெளிநாட்டு ஆடுகளங்களுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை இப்போதாவது இந்திய வீரர்கள் உணர்ந்திருபார்கள்.வேகப்பந்து வீச்சை நன்றாக ஆடத் தெரிந்தவர்களே இந்த தொடரில் சிறந்த வீரர்களாக இருந்தனர்.இந்த தொடரில் ஆஸ்திரேலியா,இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகள் மட்டுமே என்னைக் கவர்ந்தது.இந்த இரண்டு அணிகள் மட்டும் தான் எந்தவித சிக்கலுமின்றி அரையிறுதிக்கு சென்றது.ஆஸ்திரேலிய அணியின் வாட்சனும்,வார்னரும் ஷாட் பிட்ச் பந்துகளை கையாண்ட விதம் என்னை மிகவும் கவர்ந்தது.கடந்த சில மாதங்களாக சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ள இங்கிலாந்து அணி உலக கோப்பை வெல்லும் தகுதியான அணியாக தெரிந்தது.ஏனென்றால் இங்கிலாந்து அணியில் இளமையும், அனுபவும் கலந்த அணியாக இருந்தது என்று கூறினார்.

இரவு நேர பார்ட்டிகள் என்னை பாதிக்கவில்லை சோபர்ஸ்


பார்படாஸ், மே 18

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் கேரி சோபர்ஸ் இரவு நேர மதுபான பார்ட்டிகள் என்னுடைய கிரிக்கெட் ஆட்டத்தை எப்போதும் பாதித்ததில்லை என்று கூறியுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் 35 ஆண்டுகால சாதனையை கடந்த சனிக்கிழமையன்று (15.05.2010) கொண்டாடினார். உலக கோப்பை போட்டியில் தோற்பதற்கு ஐ.பி.எல் பார்ட்டி தான் காரணம் என்ற தோனியின் கருத்து கூறியது முதற்கொண்டு பல்வேறு கண்டனக் குரல் வந்த வண்ணம் இருந்தது. இந்த கருத்து குறித்து சோபர்ஸிடம் கேட்ட போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்கு முதல் நாள் இரவு நான் பல பார்ட்டிகளில் பங்கேற்றாலும் அது என் கிரிக்கெட் ஆட்டத்திறனை பாதிக்காமல் பார்த்துக்கொண்டேன். இதனை உறுதி செய்யும் விதமாக ஆடுகளத்தில் இறங்கி பலமுறை சதம் அடித்து என் ஆட்டத்திறனை உறுதி செய்துள்ளேன். இந்த முறையானது எல்லா வீரர்களுக்கும் பொருந்தாது. அது அவரவர்களின் உடல் திறனைப் பொறுத்தது. எத்தகைய சூழலையும் தாங்கிக் கொள்ளும் தன்மை என் உடலில் இயற்கையாகவே இருந்ததால் இரவு பார்ட்டிகள் என்னை பாதித்ததில்லை. இதற்காக ஆட்டத்திற்கு முதல்நாள் இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வது சிறந்தது என்று சொல்லமாட்டேன். வீரர்களின் உடல் நிலையைப் பொறுத்து இரவு பார்ட்டிகளில் பங்கேற்பதும்,பங்கேற்காமலிருப்பதும். பார்ட்டிகளில் கலந்து கொண்ட நாட்களில் துங்கினால் அடுத்த நாள் சரியான நேரத்திற்கு எழுந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்பதால் பெரும்பாலான நேரங்களில் நான் தூங்கமாட்டேன்.வெற்றி இலக்கை எட்டும் வரை எனக்கு ஓய்வு என்பதே இல்லை. இதனால் என்னைப் பொறுத்தவரை இரவு நேர கட்டுப்பாடு என்பது தேவையில்லாத ஒன்று என கூறினார்.

மதுபான விடுதியில் ரகளை வீரர்கள் மீது நடவடிக்கை பி.சி.சி.ஐ

மும்பை மே.18

உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு மேற்கிந்திய தீவிலுள்ள மதுபான விடுதி ஒன்றில் மது அருந்த சென்ற இந்திய வீரர்கள் அங்கிருந்த ரசிகர்களுடன் ரகளையில் ஈடுபட்டதாக செய்திகள் வந்தன.
மேற்கிந்திய தீவில் மதுபான விடுதியில் ரசிகர்களுடன் ரகளையில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், ரோஹத் சர்மா, ஆசிஷ் நெஹரா, ஜடேஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறப்பட்டது. வீரர்களின் இந்த செயலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இந்த 4 பேர் மீது விரைவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.சி.சி.ஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக நேற்று நடந்த கூட்டத்தின்போது, மேற்கிந்திய தீவில் மதுபான விடுதியில் இந்திய வீரர்கள் ரகளையில் ஈடுபட்டது உண்மைதான் என்று தெரியவந்துள்ளது.

உலககோப்பை டுவென்டி20 ஆஸ்திரேலியா சாம்பியன்

பார்படாஸ், மே.18

மேற்கு இந்திய தீவுகளில் நடைப் பெற்று வந்த பெண்கள் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
வெஸ்ட் இண்டீசில் டுவென்டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பெண்களுக்கான இறுதிபோட்டியில் ஆஸ்திரேலியாநியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன.
டாஸ் வென்று முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20ஓவரில் 8விக்கெட் இழப்பிற்கு 106ரன் எடுத்தது.
பின்னர் 107ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து பெண்கள் அணி இறுதி வரை போராடியது. ஆனால் 20ஓவர் முடிவில் அந்த 6விக்கெட் இழப்பிற்கு 103ரன் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து ஆஸ்திரேலியா பெண்கள் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.