Sunday, December 27, 2009

அமெரிக்கா தாக்கப்படும்! இஸ்ரேல் உளவாளி பரபரப்பு தகவல்


டெல் அவிவ், டிச. 28ஜுவல் அவிவ் இஸ்ரேல் பிரதமர் கோல்டா மெய்ராவின் மெய்க்காப் பாளராக இருந்தவர், இவர் முனிச் என்ற படத்தில் வருவதைப் போன்ற இஸ்ரேலின் நிஜ உளவாளி.முனிச்சில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற சமயம் பாலஸ்தீன பிணைக் கைதிகளால் இஸ்ரேலிய தடகள வீரர்கள் கொல்லப்பட்டனர்.அந்த சம்பவத்தை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக கோல்டா மெய்ராவால் நியமிக்கப் பட்டவர். தடகள வீரர் களின் படுகொலைக்கு சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனையையும் வாங் கித் தந்தவர். இந்தப் படுகொலைக்கான கண்டனத்தையும், விசாரணையையும் இஸ்ரேல் தன் நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்த மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என இஸ்ரேல் உளவாளி குறிப்பிடுகிறார்.ஜுவல் அவிவ் லண்டன் ரயில்வே சுரங்கப்பாதை வெடி குண்டு சம்பவத்தை முன் கூட்டியே கணித்தார். லண்டன் மாநகர போலீசார் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தி ருந்தபோதும் லண்டன் சுரங்க வெடிகுண்டு சம்பவம் நடந்தது. ஜுவல் அவிவ் முன்னரே கண்டுபிடித்து கூறியபோது கேலியும், கிண்டலும்

அமெரிக்கா தாக்கப்படும்...செய்தியை வெளியிட்டது பில்ஓரெய்லி நிறுவனம். ஆனால் சம்பவம் நடந்து முடிந்த பிறகு ஜுவல் அவிவை தன் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள அழைத்தனர். ஜுவல், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளிலிருந்து இரட்டை கோபுரம் தாக்கப்படலாம் என்ற செய்தியை அமெரிக்க அராசங்கத்திடம் (புஷ்) கொடுத்தார்.ஆனால் இந்தக் கணிப்பையொட்டி அமெரிக்க அரசாங்கம் பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை செய்யவில்லை. இதன் விளைவாக இரட்டை கோபுரம் ஒரு மாதத்திற்கு பிறகு தகர்க்கப்பட்டது.ஜுவல் தனது அறிக்கையில் தீவிரவாதிகள் விமானம் அல்லது குண்டுகளின் உதவியுடன் அமெரிக்காவின் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களையோ அல்லது நினைவுச் சின்னங்களையோ தாக்கலாம் என விவரமாக கூறியுள்ளார். அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்ட மாதிரியாகவே இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்றதிலிருந்து தனது நாட்டு பாதுகாப்புக்காக ஓரு தொகையை வாடகையாக பாதுகாப்பு ஆலோசனை நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கி வருகிறது.இந்நிலையில் அமெரிக்காவின் மீது தீவிரவாதிகளால் மற்றுமொரு தாக்குதல் அடுத்த சில மாதங்களில் நடத்த வாய்ப்பு இருப்பதாக ஜுவல் அவிவ் கூறியுள்ளார்.2001 விமான கடத்தலையே மக்கள் மறக்க முடியாத நிலையில், தீவிரவாதிகள் மீண்டும் ஒரு விமான கடத்தலை நடத்த நினைக்கமாட்டார்கள். அதையும் மீறி விமானம் கடத்தப்படுமானால் தீவிரவாதிகள் மக்களால் தாக்கப்படும் நிலைக்கு உள்ளாவார்கள்.நமது விமானப் பாதுகாப்பு என்பது நகைப்புக் குரியதாகவும், மோசமானதாகவும் உள்ளது எனக் கூறியுள்ளார். அதாவது நமது விமான தொழில்நுட்பம் காலம் கடந்தவையாக உள்ளது. நாம் வெடிகுண்டுகளில் உலோகம் இருக்கும் என நம்புகிறோம். ஆனால் தீவிரவாதிகள் அதிக திறன் வாய்ந்த பிளாஸ்டிக் தொழில் நுட்பத்துடன் கூடிய வெடிகுண்டுகளை பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், முட்டாள்தனமாக தீவிரவாதிகள் சிலர் தங்களது காலணிகள் மூலம் திரவ வெடிப்பொருட்களை கடத்தி அதன் மூலம் நாசவிளைவுகளை ஏற்படுத்த முயற்சி செய்து தோல்வியுற்றனர். எனவே தற்போது விமான நிலையத்தில் திரவம் அல்லது திரவத்திலான பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தீவிரவாதிகள் எந்த வகையான தாக்குதல் நடத்தினாலும் அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கவேண்டும். விமான நிலையத்தின் முதல் நுழைவு வாயில் வரைதான் பாதுகாப்புத்துறை பாதுகாப்பை கவனத்தில் கொள்கிறது.வருங்காலத்தில் தீவிரவாதிகள் தாக்குவார்களேயானால் அது விமான நிலையத்தில் பயணிகளை சோதனையிடும் நேரத்தில் தாக்குவார்கள் அல்லது தாக்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.இது போன்ற பரபரப்பான சமயங்களில் தாக்குதல் நடத்துவது என்பது எளிது. அதாவது ஒரு தீவிரவாதி வெடிகுண்டு நிரப்பப்பட்ட பெட்டியுடன் சோதனையிடும் இடத்திற்கு வந்து வரிசையில் நின்று கொண்டு, பிறகு அருகில் உள்ள பயணியிடம் தான் கழிவறைக்கு அல்லது வேறு ஒரு இடத்திற்கோ சென்று மீண்டும் ஒரு சில நொடிகளில் வந்து விடுவேன் என்று பொய் சொல்லிவிட்டுச் சென்று அதன் மூலம் வெடிகுண்டு விபத்தை நிகழ்த்தலாம் என்றும் கூறியுள்ளார். இஸ்ரேலில் முதலில் பயணிகளின் உடமைகளை சோதனையிட்ட பிறகுதான் பயணிகள் விமான நிலையத்தினுள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.தீவிரவாதிகளின் அமெரிக்கா மீதான அடுத்த தாக்குதல் வெடிகுண்டுகளுடன் கூடிய தற்கொலைப் படையினராலோ அல்லது வேறு வகை மூலமாகவோ தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் இந்த தாக்குதல் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கிறார்.டிஸ்னிலேண்ட், லாஸ் வேகா கேசினோ, நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ போன்ற இடங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் . மேலும் வணிக வளாகங்கள், பரபரப்பான சுரங்கப் பாதைகள், ரயில் நிலையங்கள் ஆகியவையும் தாக்கப்படலாம் என்றும் தெரவித்துள்ளார்.நகரங்களைப் போலவே ஊரகப் பகுதிகளையும் (வியாமிங், மன்டானா) தாக்க முயற்சிக்கலாம். இந்த தாக்குதலானது 5 முதல் 8 இடங்களில் நடக்கலாம் எனவும் இந்த தாக்குதல் தற்கொலைப் படையினரை பயன்படுத்தி நாசம் விளைவிக்க முயற்சிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலே உள்ள தகவல்கள் பற்றி அமெரிக்கா உளவுப் பிரிவு போலீசாருக்கு தெரியும். ஆனாலும் இதுகுறித்து தன் நாட்டு மக்களுக்கு முன்கூட்டியே சொல்லமாட்டார்கள். தற்போது அமெரிக்காவின் கவனம் குளோபல் வார்மிங் மற்றும் அதன் அரசியல் நிலைப்புத்தன்மையிலும் தான் இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.தீவிரவாதிகள் அமெரிக்காவை மீண்டும் தாக்கினால் எளிமையாக கையாளக்கூடிய ஆயுதங்களால் தாக்குவார்கள்.மேலும் விமான நிலையத்தின் முகப்பு பகுதியும், பயணிகளை சோதிக்கும் இடங்களையும் தாக்க முயற்சிக்கலாம். ஏனெனில் இது அதிக சேதங்களை ஏற்படுத்துவதாக இருக்கும் என குறிப்பிடுகிறார்.அடுத்த தாக்குதலை நடத்தும் திவிரவாதிகள் அமெரிக்காவை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். தீவிரவாதிகள் பெரும்பாலும் அமெரிக்காவின் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்த அல்லது படிக்கின்ற மாணவர்களாக இருக்கலாம். அவர்களால் தான் கல்விக்காக என்று எளிதாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு செல்லமுடியும். அப்படி செல்லும்போது அவர்களை தீவிரவாத செயலுக்கு நன்றாக தயார்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்ட மாணவ தீவிரவாதிகள் தான் மிகப்பெரிய நாசவேலையை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் அமெரிக்காவின் மொழி மற்றும் அமெரிக்கர்களின் பழக்க வழக்கங்களையும் நன்றாக தெரிந்து வைத்திருப்பார்கள். அதனால் அமெரிக்கா நாட்டு மக்களால் தீவிரவாதிகளை எளிதில் அடையாளம் காணமுடியாது.மேலும் அமெரிக்கா உளவுப்பிரிவு போலீசார் அரபி மற்றும் பார்சி மொழி பேசும் மக்களை மட்டுமே கண்காணித்து வருகிறார்கள். எனவே அமெரிக்காவின் மீதான தாக்குதல் மிக விரைவில் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்.அமெரிக்கா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, செயற்கை கோள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை மட்டும் சார்ந்து இல்லாமல், தன் நாட்டு மக்களை பாதுகாக்க இஸ்ரேல், அயர்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் பாதுகாப்பு தீவிரவாத தடுப்பு மற்றும் ஊடுறுவல் தடுப்பு என்ற முறையில் இணைந்து செயல்படவேண்டும். அமெரிக்கா தன்நாட்டு மக்களுக்கு தீவிரவாதத்தைப் பற்றிய எந்த ஒரு விழிப்புணர்வும் ஏற்படுத்தாமல் அவர்களை குழந்தைப் போலவே பாவிக்கிறது. அப்படியில்லாமல் மக்களுக்கும் தீவிரவாதத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அவிவ் சமீப காலத்தில் பாதுகாப்பு சம்பந்தமாக அமெரிக்காவில் ஒரு சோதனை முயற்சி செய்துள்ளார். அதாவது ஒரு வெற்றுப் பெட்டியை முக்கியமான 5 நகரங்களில் வைத்துள்ளார். விளைவு அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் உள்ள ஒரு நபர் கூட அந்தப் பெட்டியைப் பற்றி காவல் துறையினரிடம் புகார் கூறிவில்லை, இருந்தபோதிலும் கேவலமாக சிகாகோ நகரில் அந்தப் பெட்டியை திருடிச் சென்று விட்டனர். நான் இஸ்ரேலில் செய்து இருந்தால் அந்தப் பெட்டியைப் பற்றி உடனே புகார் கூறியிருப்பார்கள். அந்த அளவுக்கு பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.பெட்டியைக் கண்டுபிடித்த அந்த இடத்தில் சில நிமிடங்களில் மயான அமைதியும் ஏற்பட்டு அந்தப் பகுதியிலிருந்தே மக்கள் வெளியேறி விடுவார்கள்.துரதிஷ்டவசமாக அமெரிக்கா தன் மக்களுக்கு தீவிரவாதத்தைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவில்லை எனக்குறிப்பிடுகிறார்.மேலும் அவர் இரட்டைக் கோபுர (9/11) தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் இருக்கும் குழந்தைகளைப் பற்றி தான் பெரும் கவலைகொள்வதாகவும், ஏனெனில் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை எனில், பள்ளி நிர்வாகம் அந்தக் குழந்தைகளை பாதுகாப்பாக தங்க வைப்பது மாதிரியான திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லையென கவலை கொள்கிறார்.மேலும் தீவிரவாதத் தடுப்பதற்கான திட்டம் மற்றும் அது தொடர்பான சம்பவங்களைப் பற்றிய ஒரு தெளிவை மக்களும் குழந்தைகளும் தெரிந்து கொள்ள வலியுறுத்துகிறார்.அமெரிக்கப் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் என்ன வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளது என தெரிந்து கொள்ள வேண்டும், போதுமான பாதுகாப்பு இல்லையெனில், இல்ரேலில் உள்ளது மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வலியுறுத்த வேண்டும் எனவும் கூறுகிறார்.மேலும் தீவிரவாத தாக்குதலுக்குள்ளாகும் நேரங்களில் பள்ளிக்கூடத்தில் என்ன நடக்கிறது, எப்படி பேசுவது, எப்படி நம் குழந்தைகளை காப்பாற்றுவது போன்ற செயல்களை முன்கூட்டியே கணித்து அதன் படி தொடர்ந்து செயல்படவேண்டும் எனக் கூறுகிறார்.தீவிரவாதிகள் கைபேசிகளின் வழியாகவும் வெடிகுண்டை வெடிக்க முயற்சிக்கலாம் என்பதனால் அமெரிக்காவில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால், அடுத்த சில நிமிடங்களிலேயேஅனைவரது தொலைபேசி இணைப்பும் துண்டிக்கப்படலாம். எனவே இது போன்ற சமயங்களில் ஒருவர் மற்றொருவருடன் எப்படி தொடர்பு கொள்வது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என கூறுகிறார். செய்தியை வெளியிட்டது பில்ஓரெய்லி நிறுவனம். ஆனால் சம்பவம் நடந்து முடிந்த பிறகு ஜுவல் அவிவை தன் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள அழைத்தனர். ஜுவல், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளிலிருந்து இரட்டை கோபுரம் தாக்கப்படலாம் என்ற செய்தியை அமெரிக்க அராசங்கத்திடம் (புஷ்) கொடுத்தார்.ஆனால் இந்தக் கணிப்பையொட்டி அமெரிக்க அரசாங்கம் பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை செய்யவில்லை. இதன் விளைவாக இரட்டை கோபுரம் ஒரு மாதத்திற்கு பிறகு தகர்க்கப்பட்டது.ஜுவல் தனது அறிக்கையில் தீவிரவாதிகள் விமானம் அல்லது குண்டுகளின் உதவியுடன் அமெரிக்காவின் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களையோ அல்லது நினைவுச் சின்னங்களையோ தாக்கலாம் என விவரமாக கூறியுள்ளார். அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்ட மாதிரியாகவே இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்றதிலிருந்து தனது நாட்டு பாதுகாப்புக்காக ஓரு தொகையை வாடகையாக பாதுகாப்பு ஆலோசனை நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கி வருகிறது.இந்நிலையில் அமெரிக்காவின் மீது தீவிரவாதிகளால் மற்றுமொரு தாக்குதல் அடுத்த சில மாதங்களில் நடத்த வாய்ப்பு இருப்பதாக ஜுவல் அவிவ் கூறியுள்ளார்.2001 விமான கடத்தலையே மக்கள் மறக்க முடியாத நிலையில், தீவிரவாதிகள் மீண்டும் ஒரு விமான கடத்தலை நடத்த நினைக்கமாட்டார்கள். அதையும் மீறி விமானம் கடத்தப்படுமானால் தீவிரவாதிகள் மக்களால் தாக்கப்படும் நிலைக்கு உள்ளாவார்கள்.நமது விமானப் பாதுகாப்பு என்பது நகைப்புக் குரியதாகவும், மோசமானதாகவும் உள்ளது எனக் கூறியுள்ளார். அதாவது நமது விமான தொழில்நுட்பம் காலம் கடந்தவையாக உள்ளது. நாம் வெடிகுண்டுகளில் உலோகம் இருக்கும் என நம்புகிறோம். ஆனால் தீவிரவாதிகள் அதிக திறன் வாய்ந்த பிளாஸ்டிக் தொழில் நுட்பத்துடன் கூடிய வெடிகுண்டுகளை பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், முட்டாள்தனமாக தீவிரவாதிகள் சிலர் தங்களது காலணிகள் மூலம் திரவ வெடிப்பொருட்களை கடத்தி அதன் மூலம் நாசவிளைவுகளை ஏற்படுத்த முயற்சி செய்து தோல்வியுற்றனர். எனவே தற்போது விமான நிலையத்தில் திரவம் அல்லது திரவத்திலான பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தீவிரவாதிகள் எந்த வகையான தாக்குதல் நடத்தினாலும் அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கவேண்டும். விமான நிலையத்தின் முதல் நுழைவு வாயில் வரைதான் பாதுகாப்புத்துறை பாதுகாப்பை கவனத்தில் கொள்கிறது.வருங்காலத்தில் தீவிரவாதிகள் தாக்குவார்களேயானால் அது விமான நிலையத்தில் பயணிகளை சோதனையிடும் நேரத்தில் தாக்குவார்கள் அல்லது தாக்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.இது போன்ற பரபரப்பான சமயங்களில் தாக்குதல் நடத்துவது என்பது எளிது. அதாவது ஒரு தீவிரவாதி வெடிகுண்டு நிரப்பப்பட்ட பெட்டியுடன் சோதனையிடும் இடத்திற்கு வந்து வரிசையில் நின்று கொண்டு, பிறகு அருகில் உள்ள பயணியிடம் தான் கழிவறைக்கு அல்லது வேறு ஒரு இடத்திற்கோ சென்று மீண்டும் ஒரு சில நொடிகளில் வந்து விடுவேன் என்று பொய் சொல்லிவிட்டுச் சென்று அதன் மூலம் வெடிகுண்டு விபத்தை நிகழ்த்தலாம் என்றும் கூறியுள்ளார். இஸ்ரேலில் முதலில் பயணிகளின் உடமைகளை சோதனையிட்ட பிறகுதான் பயணிகள் விமான நிலையத்தினுள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.தீவிரவாதிகளின் அமெரிக்கா மீதான அடுத்த தாக்குதல் வெடிகுண்டுகளுடன் கூடிய தற்கொலைப் படையினராலோ அல்லது வேறு வகை மூலமாகவோ தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் இந்த தாக்குதல் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கிறார்.டிஸ்னிலேண்ட், லாஸ் வேகா கேசினோ, நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ போன்ற இடங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் . மேலும் வணிக வளாகங்கள், பரபரப்பான சுரங்கப் பாதைகள், ரயில் நிலையங்கள் ஆகியவையும் தாக்கப்படலாம் என்றும் தெரவித்துள்ளார்.நகரங்களைப் போலவே ஊரகப் பகுதிகளையும் (வியாமிங், மன்டானா) தாக்க முயற்சிக்கலாம். இந்த தாக்குதலானது 5 முதல் 8 இடங்களில் நடக்கலாம் எனவும் இந்த தாக்குதல் தற்கொலைப் படையினரை பயன்படுத்தி நாசம் விளைவிக்க முயற்சிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலே உள்ள தகவல்கள் பற்றி அமெரிக்க உளவுப் பிரிவு போலீசாருக்கு தெரியும். ஆனாலும் இதுகுறித்து தன் நாட்டு மக்களுக்கு முன்கூட்டியே சொல்லமாட்டார்கள். தற்போது அமெரிக்காவின் கவனம் குளோபல் வார்மிங் மற்றும் அதன் அரசியல் நிலைப்புத்தன்மையிலும் தான் இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.தீவிரவாதிகள் அமெரிக்காவை மீண்டும் தாக்கினால் எளிமையாக கையாளக்கூடிய ஆயுதங்களால் தாக்குவார்கள்.மேலும் விமான நிலையத்தின் முகப்பு பகுதியும், பயணிகளை சோதிக்கும் இடங்களையும் தாக்க முயற்சிக்கலாம். ஏனெனில் இது அதிக சேதங்களை ஏற்படுத்துவதாக இருக்கும் என குறிப்பிடுகிறார்.அடுத்த தாக்குதலை நடத்தும் திவிரவாதிகள் அமெரிக்காவை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். தீவிரவாதிகள் பெரும்பாலும் அமெரிக்காவின் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்த அல்லது படிக்கின்ற மாணவர்களாக இருக்கலாம். அவர்களால் தான் கல்விக்காக என்று எளிதாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு செல்லமுடியும். அப்படி செல்லும்போது அவர்களை தீவிரவாத செயலுக்கு நன்றாக தயார்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்ட மாணவ தீவிரவாதிகள் தான் மிகப்பெரிய நாசவேலையை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் அமெரிக்காவின் மொழி மற்றும் அமெரிக்கர்களின் பழக்க வழக்கங்களையும் நன்றாக தெரிந்து வைத்திருப்பார்கள். அதனால் அமெரிக்கா நாட்டு மக்களால் தீவிரவாதிகளை எளிதில் அடையாளம் காணமுடியாது.மேலும் அமெரிக்க உளவுப்பிரிவு போலீசார் அரபி மற்றும் பார்சி மொழி பேசும் மக்களை மட்டுமே கண்காணித்து வருகிறார்கள். எனவே அமெரிக்காவின் மீதான தாக்குதல் மிக விரைவில் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்.அமெரிக்கா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, செயற்கை கோள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை மட்டும் சார்ந்து இல்லாமல், தன் நாட்டு மக்களை பாதுகாக்க இஸ்ரேல், அயர்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் பாதுகாப்பு, தீவிரவாத தடுப்பு மற்றும் ஊடுருவல் தடுப்பு என்ற முறையில் இணைந்து செயல்படவேண்டும். அமெரிக்கா தன்நாட்டு மக்களுக்கு தீவிரவாதத்தைப் பற்றிய எந்த ஒரு விழிப்புணர்வும் ஏற்படுத்தாமல் அவர்களை குழந்தைப் போலவே பாவிக்கிறது. அப்படியில்லாமல் மக்களுக்கும் தீவிரவாதத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அவிவ் சமீப காலத்தில் பாதுகாப்பு சம்பந்தமாக அமெரிக்காவில் ஒரு சோதனை முயற்சி செய்துள்ளார். அதாவது ஒரு வெற்றுப் பெட்டியை முக்கியமான 5 நகரங்களில் வைத்துள்ளார். விளைவு அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் உள்ள ஒரு நபர் கூட அந்தப் பெட்டியைப் பற்றி காவல் துறையினரிடம் புகார் கூறிவில்லை, இருந்தபோதிலும் கேவலமாக சிகாகோ நகரில் அந்தப் பெட்டியை திருடிச் சென்று விட்டனர். நான் இஸ்ரேலில் செய்து இருந்தால் அந்தப் பெட்டியைப் பற்றி உடனே புகார் கூறியிருப்பார்கள். அந்த அளவுக்கு பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.பெட்டியைக் கண்டுபிடித்த அந்த இடத்தில் சில நிமிடங்களில் மயான அமைதியும் ஏற்பட்டு அந்தப் பகுதியிலிருந்தே மக்கள் வெளியேறி விடுவார்கள்.துரதிஷ்டவசமாக அமெரிக்கா தன் மக்களுக்கு தீவிரவாதத்தைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவில்லை எனக் குறிப்பிடுகிறார்.மேலும் அவர் இரட்டைக் கோபுர (9/11) தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் இருக்கும் குழந்தைகளைப் பற்றி தான் பெரும் கவலைகொள்வதாகவும், ஏனெனில் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை எனில், பள்ளி நிர்வாகம் அந்தக் குழந்தைகளை பாதுகாப்பாக தங்க வைப்பது மாதிரியான திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லையென கவலை கொள்கிறார்.மேலும் தீவிரவாதத்தை தடுப்பதற்கான திட்டம் மற்றும் அது தொடர்பான சம்பவங்களைப் பற்றிய ஒரு தெளிவை மக்களும் குழந்தைகளும் தெரிந்து கொள்ள வலியுறுத்துகிறார்.அமெரிக்கப் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் என்ன வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளது என தெரிந்து கொள்ள வேண்டும், போதுமான பாதுகாப்பு இல்லையெனில், இல்ரேலில் உள்ளது மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வலியுறுத்த வேண்டும் எனவும் கூறுகிறார்.மேலும் தீவிரவாத தாக்குதலுக்குள்ளாகும் நேரங்களில் பள்ளிக்கூடத்தில் என்ன நடக்கிறது, எப்படி பேசுவது, எப்படி நம் குழந்தைகளை காப்பாற்றுவது போன்ற செயல்களை முன்கூட்டியே கணித்து அதன் படி தொடர்ந்து செயல்படவேண்டும் எனக் கூறுகிறார்.தீவிரவாதிகள் கைபேசிகளின் வழியாகவும் வெடிகுண்டை வெடிக்க முயற்சிக்கலாம் என்பதனால் அமெரிக்காவில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால், அடுத்த சில நிமிடங்களிலேயேஅனைவரது தொலைபேசி இணைப்பும் துண்டிக்கப்படலாம். எனவே இது போன்ற சமயங்களில் ஒருவர் மற்றொருவருடன் எப்படி தொடர்பு கொள்வது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

No comments:

Post a Comment