Saturday, March 13, 2010

விண்டோஸ் 7 ஷார்ட் கட் கீ பட்டியல்:

விண்டோஸ் 7 பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. பலரும் அதனை விரும்பிப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக புதிய கம்ப்யூட்டர் அனைத்திலும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம்தான் பதியப்பட்டு தரப்படுகிறது. இதோ நாம் வழங்கும் அதற்கான முதல் ஷார்ட் கட் கீ பட்டியல்:
முதலில் விண்டோஸ் கீயுடன் உள்ள ஷார்ட் கட் கீகளைப் பார்க்கலாம்.
விண்டோஸ் கீ + மேல் அம்புக் குறி அழுத்த விண்டோ மேக்ஸிமைஸ் செய்யப்படும்.
விண்டோஸ் கீ + கீ ழ் அம்புக் குறி –– விண்டோ மினிமைஸ் ஆகும்.
விண்டோஸ் கீ + இடது அம்புக் குறி –– விண்டோ இடது பக்கம் ஒதுக்கப்படும்.
விண்டோஸ் கீ +வலது அம்புக் குறி கீகளை அழுத்தினால் விண்டோ வலது பக்கம் ஒதுக்கப்படும்.
விண்டோஸ் கீ + ஹோம் கீ அழுத்த மற்ற விண்டோக்கள் அனைத்தும் மினிமைஸ் செய்யப்படும். மினிமைஸ் செய்யப்பட்டிருந்தால் மீண்டும் திறக்கப்படும்.
விண்டோஸ் கீ + ட்டி (கூ) அழுத்த டாஸ்க்பாரில் உள்ள முதல் பதிவு போகஸ் செய்யப்படும். தொடர்ந்து அழுத்தினால் அடுத்தடுத்த என்ட்ரிகள் தேர்ந்தெடுக்கப்படும்.
விண்டோஸ் கீ + ஸ்பேஸ் பார் அழுத்திப் பிடித்தபடி இருந்தால் விண்டோவின் தொடக்க நிலை காட்டப்படும்.
விண்டோஸ் கீ + ஏதேனும் ஒரு எண் (1–9) டாஸ்க் பாரில் அந்த எண் வரிசையில் உள்ள புரோகிராம் திறக்கப்படும்.
விண்டோஸ் கீ + ப்ளஸ் கீ அழுத்த விண்டோ ஸூம் செய்யப்படும்
விண்டோஸ் கீ + மைனஸ் கீ அழுத்த விண்டோஸ் ஸூம் குறைக்கப்பட்டு வழக்கமான நிலைக்கு மாறும்

Wednesday, March 10, 2010

தொடர் தோல்வியின் எதிரொலியாக யுனுஸ்கான்,முகம்மது யூசுப்புக்கு வாழ்நாள் தடை

லாகூர், மார்ச். 11
பாகிஸ்தான் அணியின் யுனுஸ்கான்,முகம்மது யூசுப்புக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளது.சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர் போட்டிகளில் விளையாடியது. விளையாடிய அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விகளால், அணி வீரர்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதனால் தான் தோல்வி அடைய நேரிட்டதாகவும் புகார் கூறப்பட்டது.மேலும் அப்ரிடி, ரானா ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதாகவும் புகார் கூறப்பட்டது. இதனையடுத்து கமரன் அக்மல், அவரது சகோதரர் உமர் அக்மல் ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகத்துடன் மோதினார்கள். இந்த புகார் சம்பவங்கள் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் விசாரணை மேற்கொண்டது.இந்த விசாரணையில் வீரர்கள் தவறு செய்திருப்பது தெரிய வந்தது.இதனையடுத்து நேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கேப்டன் முகமது யூசுப், யூனுஸ்கான் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதித்தது.சோயிப் மாலிக், ரானா நவீத் அல்ஹசன் ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடையும்,பந்தை சேதப்படுத்திய அப்ரிடிக்கு ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் சகோதரர்களான கமரன் அக்மலுக்கு ரூ.30 லட்சமும், உமர் அக்மலுக்கு ரூ.10 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.

நடனம் ,பாப் இசையுடன் வண்ணமயமாக நாளை ஐ.பி.ல் ஆரம்பம்

மும்பை,மார்ச்.11
இந்திய கிரிக்கெட்டின் சமிப கால கணடுபிடிப்பான ஐ.பி.ல்.போட்டி வண்ண வண்ண வானவேடிக்கை, நடனம் ,பாப் இசையுடன் கோலாகலமாக நாளை தொடங்குகிறது.இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஐ.பி.ல். இதுவரை நடந்த இரண்டு ஐ.பி.ல் போட்டியில் முதல் போட்டி இந்தியாவிலும், இரண்டாவது ஐ.பி.ல் போட்டி இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக தென்னாப்பிரிக்காவிலும் நடைப்பெற்றது. பயங்கரவாதிகளின் எச்சரிக்கை காரணமாக முன்றாவது ஐ.பி.ல்.போட்டி நடக்கும் இடத்தையும் மாற்ற வேண்டும் என வெளிநாட்டு வீரர்கள் பலர் கோரிக்கை விடுத்திருந்தனர் இந்நிலையில் முன்றாவது ஐ.பி.ல்.போட்டி நாளை வண்ணமயமாக தொடங்குகிறது.நாளை தொடங்கும் முன்றாவது ஐ.பி.ல். வரும் ஏப்ரல் 25ந் தேதி வரை நடக்கிறது.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், பஞ்சாப் லெவன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ் தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் மும்பை, மொகாலி, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், பெங்களூர், டெல்லி, கட்டாக், நாக்பூர், ஆகிய நகரங்களில் நடக்கிறது. போட்டியின் தொடக்க விழா நாளை மாலை 5 மணிக்கு மும்பை மைதானத்தில் நடக்கிறது.தொடக்க விழா முடிந்ததும் ஐ.பி.எல்லின் முதல் போட்டி நடைபெறும். இதில் டெக்கான் சார்ஜர்ஸ் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. அன்று ஒரு போட்டி மட்டுமே நடைபெறும். மறுநாளில் இருந்து நாள் ஒன்றுக்கு 2 போட்டிகள் நடக்கும்.தொடக்க விழாவில் மும்பை பிரபல சினிமா நட்சத்திரங்கள், பிரபல நபர்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். வானவேடிக்கை, வண்ண லேசர் ஒளிக்காட்சி போன் றவைகளுடன் தொடங்கும் இந்த விழாவில்நடிகை தீபிகாபடுகோனேவின் நடனம், லியோனல் ரிக்கி, அப்பா ரெவிவல் யூ.பி.40 இசைக்குழுவின் பாப் இசை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன என்று ஐ.பி.ல் போட்டி சேர்மன் லலித்மோடி கூறினார்.

Thursday, March 4, 2010

சச்சினை விட சிறந்தவர் கவாஸ்கர் கேரிசோபர்ஸ்

புதுடெல்லி, மார்ச்.5
39 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில்முதன் முறையாக சமிபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த போட்டியில் சச்சின் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார் .அந்த சாதனை நிகழ்த்தியது முதற்கொண்டு முன்னணி வீரர்கள் பலர் அவரை புகழ்ந்து வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.இந்நிலையில் தெண்டுல்கர், லாராவை விட கவாஸ்கர் தான் சிறந்த பேட்ஸ்மேன்என்று
வெஸ்ட் இண்டீஸ்அண்யின் முன்னாள் பிரபல வீரர் கேரி சோபர்ஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
என்னை பொறுத்த வரை கவாஸ்கர் தான் சிறந்த பேட்ஸ்மேன். 1971ம் ஆண்டுக்கு முன்பு வரை வெஸ்ட்இண்டீசு அணியின்வேகப்பந்து வீச்சை சமாளிப்பதற்கு உலக முன்னணி பேட்ஸ்மேன்களே தடுமாறுவார்கள்.ஆனால் 1971ம் ஆண்டு வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக அறிமுகமான கவாஸ்கர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிகவும் பலம் வாய்ந்ததாக வேகப்பந்து வீச்சாளர்களான மைக்கேல் ஹோல்டிங், ஆன்டி ராபர்ட்ஸ், காலின் பிரஸ்ட், ஜோல் கார்னர் ஆகியோரின் அனல் பறக்கும் பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடினார்.அவர் 1971ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 774 ரன் எடுத்து இருந்தார். அதன் சராசரி 154.80 ஆகும்.டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ரன்னை எடுத்த முதல் வீரர் கவாஸ்கர் ஆவார்.
மற்றவர்களுக்கு சச்சின் ,கவாஸ்கர்,ரிச்சர்ட்ஸ், லாரா, போன்றவர்கள் சிறந்த பேட்ஸ்மேனாக தெரியலாம்.ஆனால் என்னை பொறுத்தவரை கவாஸ்கர் தான் சிறந்த வீரர்.
மேலும் தொடக்க வீரர் ஷேவாக் கின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
என்று சோபர்ஸ் கூறினார்.
சோபர்ஸ் டெஸ்ட் போட்டியில் 8032 ரன்கள் எடுத்து உள்ளார். அதில்20 சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் உலகக்கோப்பைக்கு பின்பு ஓய்வு: முரளிதரன்

சிட்னி, புதன் 4
இந்த ஆண்டு இறுதியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளாகவும் மேலும்2011ஆம் ஆண்டு உலகப்கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் கூறியுள்ளார்,
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டெஸ்ட் தொடரில் முரளிதரன் ஓய்வு அறிவிப்பு வெளியிடுவார் எனத் தெரிகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு முரளிதரன் அளித்துள்ள பேட்டியில், ""இன்னும் ஒன்று அல்லது 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடுவேன். அதன் பின் ஓய்வு பெற்றுவிடுவேன் என்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரே நான் பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும்.
2011 உலகக்கோப்பை வரை ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதே எனது இலக்கு. எனது உடல் நலம் சிறப்பாக உள்ளதால் உலகக்கோப்பை வரை ஒருநாள் போட்டிகளில் விளையாடுவேன்'' என்றார்.
இதுவரை 132 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 792 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள முரளிதரன், 800 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தும் முதல் வீரர் என்ற வரலாற்றுப் பெருமையை பெற்றவுடன் முரளிதரன் ஓய்வு அறிவிப்பு வெளியிடவுள்ளார்.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது நியூஸீலாந்து

நேப்பியர்,மார்ச் 4
நேப்பியரில் ஆஸ்திரேலியா நியுஸிலாந்துக்கு இடையே நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸீலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது.
இப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வாட்ஸன் ,ஹேடின் முறையே 45 ரன்கள், 12 ரன்கள் எடுத்தனர்.இரண்டாம் கட்ட வீரர்களாக அணித்தலைவர் பாண்டிங் 44 ரன்களும், மைக்கேல் கிளார்க் 22 ரன்களும் எடுத்தனர்.பிறகு களமிறங்கிய கிரேக் ஒயிட் 33 ரன்கள், மைக்கேல் ஹஸ்ஸி 59 ரன்கள், ஹோப்ஸ் 33 ரன்கள், மிட்செல் ஜான்சன் 21 ரன்கள் எடுத்தனர்.
நியூஸீலாந்து அணியின் தரப்பில் டேரல் டஃபி 3 விக்கெட்டுகளும், ஷேன் பாண்ட் 2 விக்கெட்டுகளும், சௌத்தீ, ஓரம், ஃப்ராங்ளின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
வெற்றி பெற 276 ரன்கள் தேவையன்ற நிலையில் களமிறங்கிய நியூஸீலாந்து அணி யின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி அந்த அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.துவக்க வீரர்களாக களமிறங்கிய இங்ராம் 41 ரன்னும், பிரென்டன் மெக்குல்லம் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு களமிறங்கிய குப்டில் 9 ரன்னில் வெளியேறினர். இந்நிலையில் நியுஸிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன் எடுத்திருந்த நிலையில் இறங்கிய நியுஸிலாந்து அணியின்
ரோஸ் டெய்லரின் அபார ஆட்டத்தால் நியூஸீலாந்து அணி வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியது. டெய்லர் 70 ரன்களுக்கு ஆட்டமிழக்க நியூஸீலாந்து அணி 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 11 ஓவர்களில் வெற்றி பெற 72 ரன்கள் தேவை என்ற பரப்பான நிலையில் நியூஸீலாந்து அணியிக்கு பேரிடியாக அந்த அணியின் கடைசி கட்ட விக்கெட்டுகள் சரிந்ததால் நியூஸீலாந்து தோல்வியை நோக்கிச் சென்றது.
எனினும் 5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்காட் ஸ்டைரிஸ் 34 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து நியூஸீலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். மறுமுனையில் ஸ்டைரிஸ்க்கு பக்கபலமாக ஷேன் பாண்ட் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய தரப்பில் போலிங்கர் 2 விக்கெட்டும், ஹாரிஸ், ஜான்சன், ஜேம்ஸ் ஹோப்ஸ், வாட்ஸன், ஆகியோர் தங்கள் பங்குக்கு தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள். இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய நியூஸீலாந்து வீரர் ரோஸ் டெய்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பரபரப்பான ஆட்டத்தில் இன்று இந்தியாஸ்பெயின் பலப்பரீட்சை பரபரப்பான ஆட்டத்தில் இன்று இந்தியாஸ்பெயின் பலப்பரீட்சை

புதுடெல்லி, மார்ச். 4
இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியின் 12 வது உலக கோப்பை போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.இந்தியா தனது முதலாவது ஆட்டத்தில் நமது பங்காளி அணியான பாகிஸ்தான் அணியினை 41 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இந்நிலையில்
நேற்று முன்தினம் நடந்த 2வது லீக் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலிய அணியிடம் 25 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது. இந்தத் தோல்வியினால் ரசிகர்கள் மிகவும் சோர்வடைந்துள்ளனர்.
மேலும் இந்திய அணி இன்று தனது 3வது போட்டியில் ஸ்பெயின் அணியுடன் மோதவிருக்கிறது.இந்தப் போட்டியில் இந்திய அணி ஸ்பெயின் அணியினை தோற்கடித்தால் வரும் போட்டிகளை எளிதாக ஆடலாம் . ஆனால் தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்திய ஸ்பெயின் அணி தனது 2வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியுற்றனர். அவர்களும் இந்த போட்டியில் வெல்வதற்கு முனைப்பாக இருப்பனர் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
மேலும் இன்று நடைபெறும் மற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியாதென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான்இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

Wednesday, March 3, 2010

"பார்முலா 1'' கார் பந்தயத்தில் தமிழக வீரர் கருண் பங்கேற்பு

சென்னை, பிப். 28
"பார்முலா1'' கார் பந்தய போட்டிகளில் முதன்மை வாய்ந்தது ஆகும். கடந்த 2005ம் ஆண்டு நடந்த ""பார்முலா1'' கார் பந்தய போட்டியில் இந்தியாவின் சார்பில் நரேன் கார்த்திகேயன் பங்கேற்றார். இதன் மூலம் கார் பந்தய போட்டியில் கலந்து கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் ""பார்முலா1'' கார் பந்தய போட்டியில் சென்னையைச் சேர்ந்த கருண் சந்தோக் பங்கேற்க இருக்கிறார் .இது தொடர்பாக புதிய அணியான கேம்பஸ் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கருண் ரூ.50 கோடிக்கான ஸ்பான்சரை உத்தரவாதம் அளித்து உள்ளார். இதன் முலம் டெல்லியில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பார்முலா1 கார் பந்தய போட்டியில் கருண் பங்கேற்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என்று தெரிகிறது. இதன் மூலம் ""பார்முலா1'' கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கும் 2வது இந்தியர் என்ற பெருமையை கருண் சந்தோக் பெறுவார். இந்த ஆண்டிற்க்கான ""பார்முலா1'' கார் பந்தயத்தின் முதல் சுற்று வரும் மார்ச் 14ந் தேதி பக்ரைனில் நடக்கிறது

ஆசிய வாள் சண்டைப் போட்டியில் தமிழக வீராங்கனை பவானிதேவி பங்கேற்பு

சென்னை, பிப். 28
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டியான வாள் சண்டை போட்டிவருகிற 4ந்தேதி முதல் 14ந்தேதி வரை பிலிப்பைன்சில் நடக்கிறது. ஆசிய ஜூனியர் மற்றும் கேடட் வாள் சண்டை போட்டியி பிரிவில் இந்தியாவின் சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த சி.ஏ. பவானிதேவி கலந்து கொள்கிறார்.

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் வாய்ப்பை ஏற்றார்வாக்கர்

பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் வக்கார் யூனிசை 2011 உலக கோப்பை போட்டி வரை நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.இதற்கான ஒப்பந்தத்தை வக்கார் யூனிஸிற்கு அனுப்பப்பட்டது. வக்கார் தற்போது சிட்னியில் உள்ளதால்அவருடைய பதிலுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் காத்திருக்கிறது. அவர் இந்த வாய்ப்பை ஏற்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்புவதாக செய்தியாளர்களிடம் இஜாஜ் பட் தெரிவித்தார்.இது குற்த்து வாக்கர் கூறும் போது
இது நல்ல முயற்சி என்றும் தேசிய கிரிக்கெட் அணியின் மேம்பாட்டிற்காக செய்யப்படும் எந்த ஒரு முடிவையும் நான் ஆதரிக்கிறேன் என்றும் எனினும் பயிற்சியாளர் ஒப்பந்தத்தில் உள்ள சில விவரங்கள் குறித்து என்க்கு விளக்கம் தேவைப்படுவதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் கூடிப் பேசி முடிவு செய்துவிட்டு தன்னுடைய முழுமையான சம்மதத்தை தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்

சச்சினுக்கு பாரதரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை

டெல்லி, பிப்.28கிரிக்கெட் உலகின் பிதாமகன் என்றழைக்கப்படும் சச்சின் இந்தியாவிற்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவரது சாதனைகளுக்கு மகுடம் சூட்டும் விதமாக இந்தியாவின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என பலமான கோரிக்கை மத்திய அரசுக்கு எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் உலகத்தில் எந்த ஒரு வீரரும் எடுக்காத இரட்டை சதத்தினை அடித்தார். இதனை மேற்கோளாகக் கொண்டும் அவருடைய சாதனைகளை கணக்கில் கொண்டும் அவருக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்று மராட்டிய மாநில அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. சச்சினுடன் சமீபத்தில் மராட்டிய மாநில பிரச்சினையில் கருத்து வேறுபாடு கொண்டுள்ள சிவசேனாவும் சச்சினுக்கு இந்த விருதை வழங்க வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புகழாரத்தில் சச்சின்
கபில்தேவ் : கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார் சச்சின். அவர் பாரதரத்னாவிருதுக்கு பொருத்தமானவர் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. அப்படி அந்த விருதைப் பெற்றால், நாங்கள் மிகவும் சந்தோஷமடைவோம் என்றும் கூறியுள்ளார்.
அஜித் வடேகர் :
கிரிக்கெட் உலகின் கோஹினூர் வைரம் சச்சின். அவரிடம் யாரும் சாதிக்க முடியாத நிறைய திறமைகள் உள்ளன.
பீட்டர் ரோபக் :
கிரிக்கெட் உலகில் முழுமையான அனைத்து திறமைகளையும் கொண்ட வீரர் என்றால் சச்சின் மட்டுமே. கடந்த 60 ஆண்டுகளில் உருவான மிகச் சிறந்த ஆட்டக்காரர். வயது அதிகரிக்க, அதிகரிக்க அவருக்கு கிரிக்கெட் மீதான மோகம் அதிகரிக்கிறது தவிர குறையவில்லை. மிகச் சிறந்த ஆட்டக்காரர்களான பாண்டிங், லாரா, காலிஸ் ஆகியோர்களை விட மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள் என்று கூறினார்.
1994 அர்ஜுனா விருது
1997 விஸ்டன் கிரிக்கெட்டின் ஆண்டு விருது
1997/98 இந்தியாவில் விளையாட்டு துறைக்கு வழங்கும் மிகச் உயர்ந்த விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது
1999 பத்மஸ்ரீ விருது
2008 பத்மவிபூஷன் விருதுமேலும் பாரதரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டால் விளையாட்டுத்துறையில் பாரதரத்னா விருது பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.

பாரத ரத்னா கனவு எனக்கும் உண்டு சச்சின்

மும்பை,மார்ச்3
குவாலியரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதன் முதலாக இரட்டை சதம் அடித்து சச்சின் சாதனை படைத்தார். இதையடுத்து சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என கபில்தேவ்,கவாஸ்கர்,வடேகர் உள்பட பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியிருந்த நிலையில் தனக்கும் ஒவ்வொரு இந்தியரைப் போல பாரத ரத்னா விருது பெறும் கனவு உண்டு என்று சச்சின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பிறந்த எந்தவொரு குடிமகனுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய கௌரவம் பாரத ரத்னா விருதாகும். அதனால் அந்தப் பட்டியலில் தன்னுடைய பெயரும் இருக்கவேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது.பாரத ரத்னா விருது எனக்கு கிடைத்தால் அது ஒரு மிகப்பெரிய கௌரவமாகவே கருதுவேன் என்றும் இப்போதைக்கு, அது பற்றி நான் சிந்திக்கவில்லை என்றும் சச்சின் கூறினார்.

ஆடுகளத்திற்குள் அரசியல் வேண்டாம் ரணதுங்கா

சிட்னி,மார்ச் 3.
நாட்டுக்காக கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் போதுஅரசியலில் நுழையக் கூடாது என்று ஜெயசூர்யாவுக்கு ,ரணதுங்கா கண்டனம் தெரிவித்துள்ளார்.இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜெயசூர்யா. 40 வயதான இவர் 2007ம் ஆண்டு, டெஸ்ட் போட்டியிலிருந்து ஒய்வு பெற்றார். ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டியில் ஆடி வருகிறார். வரும் 2011ம் ஆண்டு உலககோப்பைக்கு பிறகு அவர் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.இந்நிலையில் இவர் தனது ஒய்வுக்கான முன்னோட்டமாக வரும் இலங்கை பாராளுமன்ற தேர்தலில் தமிழின படுகொலைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிபர் ராஜபக்சேயின் சுதந்திரா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவர் தனது சொந்த ஊரான மதரா தொகுதியில் போட்டியிடுகிறார். இது குறித்து ரணதுங்கா கூறும் போது ஜெயசூர்யா தாரளாமாக அரசியலுக்கு வரலாம் என்றும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது அரசியலில் நுழையக் கூடாது என்றும் ஆளும்கட்சிக்காரர் என்பதற்காக அணிக்கு வீரர்களை தேர்வு செய்யக்கூடாது என்று கூறினார்.இவர் 19932003ம் ஆண்டு வரை இலங்கை அணியின் கேப்டனாக பணியாற்றினார். மோசமான ஆட்டம் காரணமாக 2006ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டவர் ராஜபக்சேயின் வற்புறுத்தலினால் தனது முடிவை மாற்றிக் கொண்டு தற்போது கிரிக்கெட் விளையாடி வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஜெயசூர்யா கூறும்போது விளையாட்டு வீரர்கள் அரசியலில் நுழையக்கூடாது என்று சொல்லும் இலங்கை அரசியலமைப்புச் சட்டம் எதுவும் இல்லை என்றார்.

ஐ.பி.எல்.போட்டி பாதுகாப்பு குறித்து கவலையில்லை

சிட்னி,மார்ச் 3.
இந்தியாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.பி.எல்போட்டியில் பல வெளி நாட்டு வீரர்கள் தங்களின் பாதுகாப்புகளை மேற்கோள் காட்டி போட்டியில் பங்கேற்க தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா முன்னால் வீரர் டேமியன் மார்ட்டின் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார்.அவர் செய்தியாள்ர்களிடம் கூறியதாவது .ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்பதா வேண்டாமா என்பதை வீரர்களின் முடிவுக்கு விட்டு விடவேண்டும் என்றும் இது குறித்து அந்தந்த நாடுகள் எடுக்கும் முடிவுகளை அந்நாட்டு வீரர்கள் மீது திணிக்கக் கூடாது என்று கூறினார் மார்டின்.மேலும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட கிரிக்கெட் அமைப்பான்ஐ.சி.எல். கிரிக்கெட்டில் விளையாடிய பிறகு தற்போது ஐ.பி.எல். அணிக்காக முதன் முதலாக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.