சென்னை, பிப். 28
"பார்முலா1'' கார் பந்தய போட்டிகளில் முதன்மை வாய்ந்தது ஆகும். கடந்த 2005ம் ஆண்டு நடந்த ""பார்முலா1'' கார் பந்தய போட்டியில் இந்தியாவின் சார்பில் நரேன் கார்த்திகேயன் பங்கேற்றார். இதன் மூலம் கார் பந்தய போட்டியில் கலந்து கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் ""பார்முலா1'' கார் பந்தய போட்டியில் சென்னையைச் சேர்ந்த கருண் சந்தோக் பங்கேற்க இருக்கிறார் .இது தொடர்பாக புதிய அணியான கேம்பஸ் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கருண் ரூ.50 கோடிக்கான ஸ்பான்சரை உத்தரவாதம் அளித்து உள்ளார். இதன் முலம் டெல்லியில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பார்முலா1 கார் பந்தய போட்டியில் கருண் பங்கேற்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என்று தெரிகிறது. இதன் மூலம் ""பார்முலா1'' கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கும் 2வது இந்தியர் என்ற பெருமையை கருண் சந்தோக் பெறுவார். இந்த ஆண்டிற்க்கான ""பார்முலா1'' கார் பந்தயத்தின் முதல் சுற்று வரும் மார்ச் 14ந் தேதி பக்ரைனில் நடக்கிறது
No comments:
Post a Comment