Thursday, March 4, 2010

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது நியூஸீலாந்து

நேப்பியர்,மார்ச் 4
நேப்பியரில் ஆஸ்திரேலியா நியுஸிலாந்துக்கு இடையே நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸீலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது.
இப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வாட்ஸன் ,ஹேடின் முறையே 45 ரன்கள், 12 ரன்கள் எடுத்தனர்.இரண்டாம் கட்ட வீரர்களாக அணித்தலைவர் பாண்டிங் 44 ரன்களும், மைக்கேல் கிளார்க் 22 ரன்களும் எடுத்தனர்.பிறகு களமிறங்கிய கிரேக் ஒயிட் 33 ரன்கள், மைக்கேல் ஹஸ்ஸி 59 ரன்கள், ஹோப்ஸ் 33 ரன்கள், மிட்செல் ஜான்சன் 21 ரன்கள் எடுத்தனர்.
நியூஸீலாந்து அணியின் தரப்பில் டேரல் டஃபி 3 விக்கெட்டுகளும், ஷேன் பாண்ட் 2 விக்கெட்டுகளும், சௌத்தீ, ஓரம், ஃப்ராங்ளின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
வெற்றி பெற 276 ரன்கள் தேவையன்ற நிலையில் களமிறங்கிய நியூஸீலாந்து அணி யின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி அந்த அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.துவக்க வீரர்களாக களமிறங்கிய இங்ராம் 41 ரன்னும், பிரென்டன் மெக்குல்லம் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு களமிறங்கிய குப்டில் 9 ரன்னில் வெளியேறினர். இந்நிலையில் நியுஸிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன் எடுத்திருந்த நிலையில் இறங்கிய நியுஸிலாந்து அணியின்
ரோஸ் டெய்லரின் அபார ஆட்டத்தால் நியூஸீலாந்து அணி வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியது. டெய்லர் 70 ரன்களுக்கு ஆட்டமிழக்க நியூஸீலாந்து அணி 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 11 ஓவர்களில் வெற்றி பெற 72 ரன்கள் தேவை என்ற பரப்பான நிலையில் நியூஸீலாந்து அணியிக்கு பேரிடியாக அந்த அணியின் கடைசி கட்ட விக்கெட்டுகள் சரிந்ததால் நியூஸீலாந்து தோல்வியை நோக்கிச் சென்றது.
எனினும் 5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்காட் ஸ்டைரிஸ் 34 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து நியூஸீலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். மறுமுனையில் ஸ்டைரிஸ்க்கு பக்கபலமாக ஷேன் பாண்ட் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய தரப்பில் போலிங்கர் 2 விக்கெட்டும், ஹாரிஸ், ஜான்சன், ஜேம்ஸ் ஹோப்ஸ், வாட்ஸன், ஆகியோர் தங்கள் பங்குக்கு தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள். இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய நியூஸீலாந்து வீரர் ரோஸ் டெய்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment