டெல்லி, பிப்.28கிரிக்கெட் உலகின் பிதாமகன் என்றழைக்கப்படும் சச்சின் இந்தியாவிற்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவரது சாதனைகளுக்கு மகுடம் சூட்டும் விதமாக இந்தியாவின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என பலமான கோரிக்கை மத்திய அரசுக்கு எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் உலகத்தில் எந்த ஒரு வீரரும் எடுக்காத இரட்டை சதத்தினை அடித்தார். இதனை மேற்கோளாகக் கொண்டும் அவருடைய சாதனைகளை கணக்கில் கொண்டும் அவருக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்று மராட்டிய மாநில அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. சச்சினுடன் சமீபத்தில் மராட்டிய மாநில பிரச்சினையில் கருத்து வேறுபாடு கொண்டுள்ள சிவசேனாவும் சச்சினுக்கு இந்த விருதை வழங்க வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புகழாரத்தில் சச்சின்
கபில்தேவ் : கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார் சச்சின். அவர் பாரதரத்னாவிருதுக்கு பொருத்தமானவர் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. அப்படி அந்த விருதைப் பெற்றால், நாங்கள் மிகவும் சந்தோஷமடைவோம் என்றும் கூறியுள்ளார்.
அஜித் வடேகர் :
கிரிக்கெட் உலகின் கோஹினூர் வைரம் சச்சின். அவரிடம் யாரும் சாதிக்க முடியாத நிறைய திறமைகள் உள்ளன.
பீட்டர் ரோபக் :
கிரிக்கெட் உலகில் முழுமையான அனைத்து திறமைகளையும் கொண்ட வீரர் என்றால் சச்சின் மட்டுமே. கடந்த 60 ஆண்டுகளில் உருவான மிகச் சிறந்த ஆட்டக்காரர். வயது அதிகரிக்க, அதிகரிக்க அவருக்கு கிரிக்கெட் மீதான மோகம் அதிகரிக்கிறது தவிர குறையவில்லை. மிகச் சிறந்த ஆட்டக்காரர்களான பாண்டிங், லாரா, காலிஸ் ஆகியோர்களை விட மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள் என்று கூறினார்.
1994 அர்ஜுனா விருது
1997 விஸ்டன் கிரிக்கெட்டின் ஆண்டு விருது
1997/98 இந்தியாவில் விளையாட்டு துறைக்கு வழங்கும் மிகச் உயர்ந்த விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது
1999 பத்மஸ்ரீ விருது
2008 பத்மவிபூஷன் விருதுமேலும் பாரதரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டால் விளையாட்டுத்துறையில் பாரதரத்னா விருது பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.
No comments:
Post a Comment