Wednesday, June 30, 2010

ஐ.சி.சி. துணைத் தலைவர் பதவி ஹோவார்டுக்கு தென்னாப்பிரிக்கா எதிர்ப்பு



துபாய், ஜுலை.1
ஐ.சி.சி. துணைத் தலைவராக ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஜான் ஹோவார்டை நியமிக்க கூடாதென தென்னாப்பிரிக்கா ,ஜிம்பாப்வே நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த மாதம் ஐ.சி.சி.அமைப்பின் தலைவராக சரத் பவார் பதவியேற்கையில் துணைத் தலைவர் பொறுப்பிற்கு முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவார்ட் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இப்போது 6 நாடுகள் அவர் அந்தப்பொறுப்பிற்கு வருவதை விரும்பவில்லை என்ற நிலைமை எழுந்துள்ளது.
ஜான் ஹோவார்ட் ஆஸ்திரேலிய பிரதமராக இருந்தபோது ஜிம்பாப்வேயின் கிரிக்கெட்டை அழித்தவர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். மேலும் அவர் ஜிம்பாப்வேயிற்கு ஆஸ்திரேலிய அணி செல்லக்கூடாது என்று தடை விதித்திருந்தார்.
தற்போது ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே தென்னாப்பிரிக்காவை முன்னிறுத்தி ஜான் ஹோவார்டை எதிர்த்துவருகிறது.
ஆஸ்திரேலியா, நியூசீலாந்து, இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களே ஹோவார்ட் துணைத் தலைவராக வர ஆதரவு அளித்து வருகிறது.
இது குறித்த உறுதியான முடிவு இன்னமும் வரவில்லை.

ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ரொனால்டோ


ஸ்பெயினுக்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தோல்வியடைந்த போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னைப் பின்தொடர்ந்த கேமரா மேன் மீது எச்சில் துப்பியதாக புகார் எழுந்துள்ளது.
ரொனால்டோவைப் பொறுத்தவரை இது அவரது ஆட்டத்திறனுக்கு ஒரு மோசமான உலகக் கோப்பையாக அமைந்தது. 4 ஆட்டங்களில் 3 ஆட்டங்கள் போர்ச்சுக்கல் அணி கோலே போடவில்லை.
ஸ்பெயின் அனியுடன் தோல்வியடைந்த ஆட்டம் முடிந்த பிறகு கேமரா மேன் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முகபாவனையை படம் பிடிக்க அவரை பின் தொடர்ந்தார்.
இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ரொனால்டோ எச்சிலைத் திரட்டி துப்பினார். அது கேமரா மேன் காலருகில் சென்று விழுந்தது.
இதனை அவர் வேண்டுமென்றே செய்தாரா என்பது தெரியவில்லை. இந்த செயல் அவரது ஆளுமையின் மீது கறை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கோல் அடித்து காலிறுதியில் நுழைந்தது ஸ்பெயின்



ஜோகன்ஸ்பர்க், ஜூலை.1
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2வது சுற்றின் கடைசி ஆட்டத்தில் 10 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஸ்பெயின்.
கோல் எதுவுமில்லை
தென்னாப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் கேப்டவுனில் நடைபெற்ற "ரவுண்ட்16' சுற்று போட்டியில் "யூரோ' சாம்பியன் அணியும், உலக கால்பந்து தரவரிசையில் 2ம் இடத்திலுள்ள ஸ்பெயின் அணி , உலக கால்பந்து தரவரிசையில் 3ம் இடத்திலுள்ள போர்ச்சுகல் அணியை எதிர்கொண்டது.இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்பெயின் அணியே அதிகமாக ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழவில்லை.
வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டது
ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில் டோரஸ் அடித்த பந்தை, போர்ச்சுகல் கோல் கீப்பர் எட்வார்டோ துடிப்பாக தடுத்தார். இதற்கு பின் மற்றொரு ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி மிரட்டினார். போர்ச்சுக்கல் சேர்ந்த உலகின் முன்னணி வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த பந்தை ஸ்பெயின் கோல் கீப்பரும், கேப்டனுமான கேசிலாஸ் அற்புதமாக தடுத்தார்.22வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு கிடைத்த வாய்ப்பை டியாகோ கோட்டை விட்டார். 28வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ "பிரீகிக்' வாய்ப்பை வீணாக்கினார். பின் 38வது நிமிடத்தில் ரொனால்டோ பந்தை அருமையாக "பாஸ்' செய்தார். ஆனால், அல்மீடா தலையால் முட்டி கோல் அடிக்க தவறினார். இப்படியாக இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கப்படாமல் முதல் பாதி முடிந்தது.
ஸ்பியின் ஆதிக்கம்
2வது பகுதி ஆட்டத்திலும் ஸ்பெயின் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். ஆட்டத்தில் 55ஆவது நிமிடத்தில் ரொனால்டோ கொடுத்த ஒரு கிராஸ் பந்தினை ஸ்பெயின் கோல்கீப்பர் கேசிலாஸ் முன்னேறி வந்து தட்டி விட்டதால் ஸ்பெயின் அணி கோல் வாங்காமல் தப்பித்தது. 63வது நிமிடத்தில் அந்த அணி கோல் அடித்தது. ஷவி தட்டிக்கொடுத்த பந்தை டேவிட் வில்லா அடித்தார்.
இதை போர்ச்சுகல் கோல் கீப்பர் எடுடர்டோ கடுமையாக போராடி தடுத்தார். இருந்தாலும் பந்து அவரது கையில் பட்டு வெளியே வர டேவிட் வில்லா கோலாக்கினார். இந்த கோலால் ஸ்பெயின் அணி 10 என்று முன்னிலை பெற்றது .
துடிப்பான கீப்பர்
இந்த உலக கோப்பையில் டேவிட் வில்லா அடித்த 4வது கோல் இதுவாகும்.தொடர்ந்து ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. 69வது நிமிடத்தில் செர்ஜியோ ராமோஸ் அடித்த பந்தை போர்ச்சுகல் கோல்கீப்பர் எடுவாரோ அபாராமாக தடுத்துவிட்டார். இந்த ஆட்டத்தில், போர்ச்சுகல் கோல்கீப்பர் எடுவாரா சிறப்பாக செயல்பட்டதால் ஸ்பெயின் வீரர்களின் பல கோல் வாய்ப்புகளை முறியடித்தார். இல்லையென்றால் ஸ்பெயின் அணியின் கோல் எண்ணிக்கை மேலும் கூடியிருக்கும்.
கடைசி கட்ட சோகம்
போர்ச்சுக்கல் அணிக்கும் ஒரு சில வாய்ப்புகள் கிடைத்தது. போர்ச்சுக்கல் அணியில் ரொனால்டோ தவிர யாரும் சரியாக விளையாடவில்லை. ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு பெரும் அதிர்ச்சியாக "பெனால்டி ஏரியாவில்' வைத்து ஸ்பெயின் வீரர் கேப்டெவில்லா முகத்தில் முழங்கை வைத்து முரட்டுத்தனமாக தடுத்ததாக கூறி, ரிக்கார்டோ கோஸ்டாவுக்கு "ரெட் கார்டு' காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.இதையடுத்து 10 பேருடன் போர்ச்சுகல் விளையாட நேர்ந்தது.இதேபோல் ஸ்பெயின் அணியில் அலோன்சாவும், போர்ச்சுக்கல் அணியில் டியா கோவும் மஞ்சள் அட்டை பெற்றனர்.போர்ச்சுகல் அணியால் இறுதி வரை பதில் கோல் அடிக்க இயல வில்லை.
ஆட்டத்தின் முடிவில் ஸ்பெயின் 10 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.ஆட்ட நாயகன் விருதை ஸ்பெயின் வீரர் சேவி தட்டிச் சென்றார். ஸ்பெயின் அணி தனது காலிறுதி போட்டியில் தென் அமெரிக்கா கண்டத்தை சேர்ந்த பராகுவேயுடன் மோதுகிறது. பராகுவே அணி 2வது சுற்றில் ஜப்பானை பெனால்டி ஷீட்டில் 53 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தவறான தீர்ப்பு கொடுத்த நடுவர்கள் நீக்கம் பிபா அதிரடி


ஜோஹன்னஸ்பர்க் ,ஜுலை.1
தவறான தீர்ப்புகள் கொடுத்த இங்கிலாந்து,மெக்ஸிகோ அணிகளின் வெற்றியை தடுத்து விட்டதாக குற்றச்சாட்டுக்குள்ளான நடுவர்கள் ஜார்ஜ் லாரியோன்டா மற்றும் ராபர்டோ ரொசட்டி ஆகிய இருவரையும் நடுவர் பட்டியலிலிருந்து பிபா நீக்கியுள்ளது. வரும் போட்டிகளில் இவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அணியின் லாம்பார்ட் போட்ட அழகான கோலை இல்லை என்று கூறி இங்கிலாந்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியவர் லாரியோன்டா.
அதேபோல அர்ஜென்டினா அணியின் கார்லோஸ் தவேஸ், மெக்சிகோவுக்கு எதிராக கோல் போட்டபோது அது ஆப்சைடாக இருந்தது வீடியோ காட்சிகளில் தெரிய வந்தது. ஆனால் அந்த கோலை அனுமதித்தார் ரொசட்டி.
இந்த குழப்பங்களைத் தொடர்ந்து தற்போது இருவரையும் 19 நடுவர்கள் கொண்ட பட்டியலிலிருந்து நீக்கப்ட்டுள்ளதாகவும், வரும் போட்டிகளில் இவர்கள் பணியாற்ற மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்காலத்தில் பல்வேறு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப் போவதாகவும் கால்பந்து சம்மேளனம் (பிபா)அறிவித்துள்ளது.

ஜெர்மனியை வீழ்த்துவோம் மரடோனா


லண்டன், ஜூலை. 1
19 வது உலககோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி போட்டியில் பரம்பரை எதிரிகளான அர்ஜென்டினா ஜெர்மனி அணிகள் மோதுகின்றது. இந்த ஆட்டம் உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜெர்மனியை காலிறுதியில் தோற்கடிப்போம் என்று அர்ஜென்டினா பயிற்சியாளர் மரடோனா நம்பிக்கை தெரி வித்துள்ளார். இது பற்றி கூறும் போது; மெக்சிகோவை போல ஜெர்மனி அணியை கருத மாட்டோம். ஜெர்மனியை தோற்கடிக்க புதிய வியூகம் வைத்து உள்ளோம் .
ஜெர்மனிக்கு எதிராக அர்ஜென்டினா 433 அல்லது 4221 என்ற ஆட்ட வியூகத்தில் விளையாடும் என்று கூறினார். அர்ஜென்டினா அணி முதல் சுற்றுப் போட்டிகளில் தோல்வி எதையும் சந்திக்காமல் காலிறுதியில் நுழைந்துள்ளது. ஆனால் ஜெர்மனி அணி ""லீக்'' ஆட்டத்தில் செர்பியாவிடம் தோற்றது. அர்ஜென்டினா அணி லீக் ஆட்டத்தில் 10 என்ற கணக்கில் நைஜீரியாவையும், தென் கொரியாவை 41 என்ற கணக்கிலும், கிரீசை 20 என்ற கணக்கிலும், 2வது சுற்றில் மெக்சிகோவை 31 என்ற கணக்கிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Monday, June 28, 2010

பழைய பாதையில் அர்ஜென்டினா


அர்ஜென்டினா அணி கடந்த உலக கோப்பை 2வது சுற்றிலும் மெக்சிகோ அணியை வீழ்த்தியிருந்தது. இந்த முறையும் மெக்சிகோ அணி அர்ஜென்டினாவிடம் தோற்று தொடரைவிட்டு வெளியேறியுள்ளது.
இதேபோல் கடந்த உலகக்கோப்பை போட்டித் தொடரின் காலிறுதியில் ஜெர்மனியுடன்மோதியது அர்ஜென்டினா அணி.அந்தப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் மூலம் 42 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.எனவே இந்த காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி தன்னுடைய பழைய பாதையில் பயணிக்குமா அல்லது ஜெர்மனி அணியை பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மெக்ஸிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு சென்றது அர்ஜென்டினா

ஜோகன்ஸ்பர்க், ஜூன். 29
உலக கோப்பை கால்பந்து தொடரின் "ரவுண்ட்16' சுற்று போட்டியில், பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி மெக்ஸிகோ அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
உலக கோப்பை கால்பந்து
19வது உலக கோப்பை கால்பந்து போட்டி தென்னாப்பிரிக்காவில் நடை பெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டன.இந்த 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன. 32 அணிகளில் லீக் போட்டிகளின் முடிவில் உருகுவே, மெக்சிகோ, அர்ஜென்டினா, தென்கொரியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கானா, நெதர்லாந்து, ஜப்பான், பராகுவே, சுலோவாக்கியா, பிரேசில், போர்ச்சுக்கல், ஸ்பெயின், சிலி, ஆகிய 16 நாடுகள் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றன.
இதேபோல் 2வது சுற்றுக்கு தகுதி பெறமுடியாமல் பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா, கிரீஸ், நைஜீரியா, சுலோவெனியா, அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, செர்பியா, டென்மார்க், கேமரூன், நியூசிலாந்து, இத்தாலி, ஐவேரிகோஸ்ட், வடகொரியா, சுவிட்சர்லாந்து, ஹோண்டுராஸ் ஆகிய 16 நாடுகள் வெளியேற்றப்பட்டன.இந்த வரிசையில் தற்போது காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறமுடியாமல் இங்கிலாந்து,அமெரிக்கா,தென்கொரியா ஆகிய அணிகள் வெளியேறியுள்ளன.
ஆக்ரோஷமான ஆட்டம்
ஜோகனஸ்பர்க்கில் உள்ள "சாக்கர் சிட்டி' மைதானத்தில் நடந்த "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கான போட்டியில், உலக கால்பந்து தரவரிசை பட்டியலில் 7வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா அணியும் , உலக கால்பந்து தரவரிசை பட்டியலில் 17வது இடத்திலுள்ள மெக்சிகோ அணியும் மோதின.
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்களும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இரு அணி வீரர்களும் தங்களுக்கு கிடைத்த ஒரு சில வாய்ப்புகளை வீணடித்தனர்.மெக்சிகோவின் பின்களம் மிகவும் பலமாக இருந்ததால் அர்ஜென்டினா வீரர்களால் தொடக்கத்தில் கோல் ஏரியாவை நோக்கி முன்னேற இயலவில்லை.
அர்ஜென்டீனா பலமாக அணியாக இருந்தாலும், மெக்சிகோ வீரர் சால்சிடோ 8வது நிமிடத்தில் அர்ஜென்டீன கோலை நோக்கி ஒரு ஷாட் அடித்தார்.அது மட்டும் கோலாகியிருந்தால் இந்த உலகக் கோப்பையின் சிறந்த கோலாகியிருக்கும்.
பந்து துரதிர்ஷ்டவசமாக கோல் கம்பத்தின் மேலுள்ள கம்பியில் பட்டு வெளியே சென்றது. 9வது நிமிடத்திலும் மெக்சிகோ அசத்தியது. குவார்டாடோ அடித்த ஷாட் கோலிலிருந்து விலகிச் சென்றது.
மெக்ஸிகோவைப் போலவே ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் நடு மைதானத்திலிருந்து மெஸ்ஸி பல மெக்சிகோ வீரர்களை ஏமாற்றிக்கொண்டு வந்த பந்தை கோலை நோக்கி அடித்தார்.ஆனால் அவரது ஷாட் பலவீனமாக அமைய மெக்சிகோ கோல் கீப்பர் அதனை பிடித்தார்.
சர்ச்சையான கோல்
இதனிடையே ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி முதல் கோலை அடித்தது. மெஸ்சி தட்டிக்கொடுத்த பந்தை சார்லேர்ஸ் டெவஸ் தலையால் முட்டி கோலாக்கினார்.இந்த கோல் சர்ச்சையை ஏற்படுத்தியது. டெவஸ் ஆப்சைடில் இருந்தது டெலிவிசன் ரிப்ளேயில் நன்றாக தெரிந்தது. ஆனால் லைன் நடுவர் இதை கவனிக்க தவறிவிட்டார். இந்த கோலுக்கு மெக்சிகோ வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நடுவர் அதை கோல்தான் என்று அறிவித்தார்.இந்த ஆப்சைடு கோல் சர்ச்சையால் இரு அணி வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மெக்சிகோவுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வண்ணமாக முதல் கோல் அடித்த பிறகு அடுத்த 7வது நிமிடத்தில் அர்ஜென்டினா 2வது கோலை அடித்தது . மெக்சிகோ பின்கள வீரர் ரிக்கார்டோ செய்த தவறை சோன்சாலா ஹிகுயின் சரியாக பயன்படுத்திக் கொண்டு கோல் கீப்பரையும் ஏமாற்றி கோல் அடித்தார். இந்த உலக கோப்பையில் சோன்சாலா ஹிகுயின் அடித்த 4வது கோலாகும்.
இதனால் முதல்பாதி ஆட்டத்தில் அர்ஜென்டினா 20 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருந்தது.
அர்ஜென்டினா ஆதிக்கம்
2வது பகுதி ஆட்டத்திலும் அர்ஜென்டினா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது.
ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் டெவஸ் அருமையான கோல் ஒன்றை அடித்தார். டெவேஸ் கோலுக்கு அப்பால் 30 அடியிலிருந்து வெறித்தனமாக பந்தை தூக்கி அடித்து கோலாக்கினார்.இந்த ஆட்டத்தில் அவர் அடித்த 2வது கோலாகும். இதன் மூலம் அர்ஜென்டினா 30 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.பின்னர் சுதாரித்துக் கொண்ட மெக்சிகோ அணிக்கு, ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் ஹெர்ணான்டஸ் ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார். இருப்பினும் மெக்சிகோ அணியினரால் அடுத்தடுத்து கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் அர்ஜென்டினா 31 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.ஆட்ட நாயகனாக அர்ஜென்டினாவின் கார்லோஸ் டெவேஸ் தேர்வு செய்யப்பட்டார்.இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பை கால்பந்து போட்டியில் 8வது முறையாக காலிறுதிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையையும் தக்கவைத்துக்கொண்டது அர்ஜென்டினா. இதனிடையேவரும் ஜூலை 3ம் தேதி டர்பனில் நடக்கும் காலிறுதியில் அர்ஜென்டினா அணி, ஜெர்மனி அணியை சந்திக்கிறது எனபது குறிப்பிடத்தக்கது.

பிபா மீது பேபியோ கெபேலோ கடும் தாக்கு

ஜோகனஸ்பர்க், ஜுன்.29
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததற்கு கோல்லைன் டெக்னாலஜி இல்லாததே காரணம் என்று அந்த அணியின் பயிற்சியளார் பேபியோ கெபேலோ கூறியுள்ளார்.உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஜெர்மனியிடம் 41 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
இந்த தோல்வி குறித்து இங்கிலாந்து பயிற்சியாளர் கூறியதாவது:
உலக கோப்பை கால்பந்து போட்டியின் போது கோல்லைன் டெக்னாலஜியை பயன்படுத்த தவறுவது ஒரு முட்டாள்தனமான செயலாகும் . கோல் அல்லது கோல் இல்லை என்பதை தீர்மானிக்க நடுவர்களுக்கு இது உதவும்.ஆனால் 'பிபா' இந்த விஷயத்தில் ஏன் இவ்வளவு தயங்குகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.பிராங்க் லேம்பர்டு அடித்த கோல் ஏற்கப்பட்டிருந்தால் பிற்பாதியில் எங்களது ஆட்டமும் மாறி இருக்கும்.நடுவர்கள் மட்டுமல்ல ,எங்களது வீரர்களும் பல தவறுகளை தொடர்ந்து செய்தனர்.இதுவே தோல்விக்கு காரணம். ஜெர்மனி இந்த வெற்றிக்கு தகுதியானது , திறமையாகவும் விளையாடியது என்றார்.
முதல் பாதியில் ஜெர்மனி 21 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்த போது இங்கிலாந்து வீரர் பிராங்க் லேம்பர்டு அடித்த பந்து கோல் கம்பத்தில் மோதி கோல் லைனை தாண்டியது. ஆனால் இதனை பார்க்காத நடுவர் அதனை கோல் என்று அறிவிக்கவில்லை.இந்த கோல் ஏற்கப்பட்டிருந்தால் ஆட்டம் 22 என்று சமநிலை கண்டு பிற்பாதி ஆட்டத்தின் போக்கு ஒருவேளை மாறியிருக்கலாம்.

இந்தேனேஷியா ஒபன் பேட்மின்டன் சாய்னா சாம்பியன்

ஜகார்தா,ஜுன்.28
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் நடந்த பெண்களுக்கான ஒற்றையர் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் உலகின் "நம்பர்3 வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவல், தொடர்ந்து இரண்டாவது முறையாக, சாம்பியன் பட்டம் கைப்பற்றினார். இந்தோனேஷியா ஓபன் சூப்பர் தொடர் இறகுப்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை சகாயோ சாடோயும் இந்திய நட்சத்திர பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவாலும் மோதிக்கொண்டனர்.
இந்த போட்டியின் முதல் செட்டில் 2119 என்ற கணக்கில், சாய்னா வென்றார். பின் இரண்டாவது செட்டில் பதிலடி கொடுத்த ஜப்பான் வீராங்கனை, 2113 என கைப்பற்றினார்.இறுதி செட்டில் 2111 என்ற கணக்கில் சாய்னா வெற்றிபெற்றார்.இதனால் 2119, 1321, 2111 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.
கடந்த இரு வாரத்துக்கு முன் இந்தியாவில் நடந்த, இந்திய ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் இதேபோல் கடந்த வாரம் நடந்த சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் ஆகிய இரண்டு தொடரிலும் கோப்பை வென்று அசத்தி இருந்தார்.தற்போது இந்தோனேஷியா ஒபன் பேட்மிண்டன் பட்டத்தை கைப்பற்றியதின் மூலம் சாய்னா ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
2009ஆம் ஆண்டில் நடந்த இந்தோனேஷியா ஒபன் பேட்டியிலும் சாய்னா பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

முதன் முறையாக காலிறுதியில் கானா

ரஸ்டன்பர்க், ஜூன். 28
ஆப்பிரிக்க கண்டத்தில் முதல் முறையாக நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு ஆப்பிரிக்க நாடான கானா அணி தகுதி பெற்றுள்ளது.
உலக கோப்பை கால்பந்து
19வது உலக கோப்பை கால்பந்து போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன.
காலிறுதிக்கு தகுதி பெறவேண்டிய "ரவுண்டு16' சுற்று போட்டிகள் நடக்கின்றன.ரவுண்ட 16 சுற்றுக்கு லீக் போட்டிகளின் முடிவில் உருகுவே, மெக்சிகோ, அர்ஜென்டினா, தென்கொரியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கானா, நெதர்லாந்து, ஜப்பான், பராகுவே, சுலோவாக்கியா, பிரேசில், போர்ச்சுக்கல், ஸ்பெயின், சிலி, ஆகிய 16 நாடுகள் தகுதி பெற்றன.
கெவினின் சூப்பர் கோல்
இதில் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கானா அமெரிக்கா அணிகள் மோதிய போட்டி ரஸ்டன்பர்க் நகரில் நடந்தது. இதில் வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு செல்லும் என்பதால் இரு அணிகளும் துவக்கத்தில் இருந்தே கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தின.ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் கானா கோல் அடித்து அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. அமெரிக்க தற்காப்பு பகுதியில் திடீரென தனி ஆளாக நுழைந்த கானா வீரர் கெவின் பிரின்ஸ், 18 மீட்டர் தொலைவில் இருந்து பந்தை, கோல் போஸ்ட்டை நோக்கி அடித்தார். இது கோல் கீப்பரை ஏமாற்றி, "சூப்பர்' கோலாக மாறியது. ரிக் கார்டோ கிளார்க் தட்டிக் கொடுத்த பந்தை பெற்று கெவின் அருமையாக கோலாக்கினார்.
கோல் விழுந்த அதிர்ச்சி யில் அமெரிக்க வீரர்கள் முன்னேறி தாக்கினார்கள். ஆட்டத்தின் 23 வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில் அமெரிக்க வீரர் டொனோவன் அடித்த பந்து வீணானது . இதனால் முதல் பாதி ஆட்டத்தில் கானா 10 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருந்தது.
சமநிலை
2வது பகுதி ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்ய அமெரிக்க அணிக்கு கிடைத்த வாய்ப்பை, பெய்ஹபர் வீணாக்கினார். 53வது நிமிடத்தில் கானாவின் கியான், கோல் போஸ்ட்டை நோக்கி அடித்த பந்து, வெளியே சென்றது.இந்நிலையில் 2வது பகுதி ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் தங்கள் கோல் ஏரியாவுக்குள் வைத்து அமெரிக்காவின் கிளின்ட் டெம்ப்சியை கானா வீரர் ஜோனாதன் பவுல் செய்து "எல்லோ கார்டு' பெற்றார். இதனால் அமெரிக்காவுக்கு ""பெனால்டி'' வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு அந்த அணி வீரர் டோனவன் கோல் அடித்தார். இதனால் 11 என்ற சமநிலை ஏற்பட்டது.
தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோல் போட கடுமையாக போராடினார்கள். ஆனால் கோல் எதுவும் விழவில்லை. ஆட்டத்தின் முடிவில் 11 என்ற சமநிலை ஏற்பட்டது. கூடுதல் நேரம்
போட்டி சமநிலையில் முடிந்ததால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கூடுதல் நேரம் கடைபிடிக்கப்பட்டது.
இதன் முதன் பாதி ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே அதாவது 93வது நிமிடத்தில் கானா அணி தனது 2வது கோலை அடித்தது. அந்த அணியின் முன்கள வீரர் அசமா ஜியான் இடது காலால் மிகவும் அற்புதமாக அடித்து இந்த கோலை போட்டார். பதில் கோல் அடித்து சமநிலை ஏற்படுத்த கடுமையாக முயன்ற அமெரிக்க வீரர்களால் கோல் எதுவும் போட முடியவில்லை.
இறுதியில் கானா 21 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.
கானா அணி தனது காலிறுதி சுற்றில் உருகுவே அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி வருகிற 2ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது.
முன்னதாக ரவுண்ட் 16 சுற்றில் உருகுவே அணி 21 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது.
இந்த தோல்விகளின் மூலம் அமெரிக்கா, தென் கொரியா அணிகள் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டன.
காலிறுதியில் முதன் முறையாக...
உலக கோப்பை போட்டியில் காலிறுதிக்கு நுழைந்த 3வது ஆப்பிரிக்க நாடு கானா ஆகும். இதற்கு முன்பு 1990ம் ஆண்டு கேமரூனும், 2002ம் ஆண்டு செனகலும் காலிறுதியில் நுழைந்து இருந்தன.அதோடு கடந்த 2006 ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் தான் கானா அணி முதன் முறையாக பங்கேற்றது. அதில் "ரவுண்டு16' சுற்றுடன் வெளியேறியது. தற்போது இரண்டாவது முறையாக இத்தொடரில் பங்கேற்ற கானா அணி, முதன் முறையாக காலிறுதிக்குள் நுழைந்து அசத்தியுள்ளது.

Wednesday, June 2, 2010

ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்திய அணி வீரர்கள் தேர்வு


மும்பை, மே. 31
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்களை ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வு குழுவினர் வருகின்ற ஜுன் 7ம் தேதி டெல்லியில் கூடி தேர்வு செய்கின்றனர்.
ஆசிய கோப்பை அறிமுகம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியானது சர்வதேச தரத்திலான விளையாட்டுப் போட்டியாகும்.1983 ம் ஆண்டு ஆசிய கண்டத்திலுள்ள நாடுகளுக்கிடையே ஆரோக்கியமான சூழ்நிலை நிலவுவதற்காக உருவாக்கப்பட்ட போட்டித் தொடராகும்.இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த தொடரில் 6 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
தொடரில் இடம் பெற்றுள்ள நாடுகள்
ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ்,இலங்கை, ஹாங்ஹாங், அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.இந்த தொடரில் இதுவரை அதிகபட்சமாக இந்தியா,இலங்கையும் 4முறை கோப்பையை வென்றுள்ளன.நடப்பு சாம்பியனாக இலங்கை அணி உள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியானது ஜூன் 15ந்தேதி முதல் 24ந்தேதி வரை இலங்கையில் நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் போட்டிகளின் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இறுதி போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.90 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
சரியான உடல் தகுதி இல்லாமல் இருக்கும் யுவராஜ்சிங் , ஜாகீர்கான்ஆகியோர் இந்த தொடரிலிருந்து நீக்கப்படலாம் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்றபடி ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரிலிருந்து மட்டும் ஓய்வு கொடுக்கப்பட்ட சீனியர் வீரர்கள் ஆசிய கோப்பை போட்டியில் இடம் பெறுவார்கள்.
டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் ஆசிய கோப்பையை வெல்ல சிறந்த வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் தேர்வு குழுவினருக்கு உள்ளது.

ஆசிய கோப்பை போட்டி அட்டவனை

தேதி அணிகள்

ஜின் 15 இலங்கைபாக்.
ஜின் 16 பங்களாதேஷ்இந்தியா
ஜின் 18 இலங்கைபங்களாதேஷ்
ஜின் 19 இந்தியாபாக்.
ஜின் 21 பங்களாதேஷ்பாக்
ஜின் 22 இலங்கைஇந்தியா
ஜின் 24 இறுதி போட்டி

ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்திய அணி வீரர்கள் தேர்வு


மும்பை, மே. 31
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்களை ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வு குழுவினர் வருகின்ற ஜுன் 7ம் தேதி டெல்லியில் கூடி தேர்வு செய்கின்றனர்.
ஆசிய கோப்பை அறிமுகம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியானது சர்வதேச தரத்திலான விளையாட்டுப் போட்டியாகும்.1983 ம் ஆண்டு ஆசிய கண்டத்திலுள்ள நாடுகளுக்கிடையே ஆரோக்கியமான சூழ்நிலை நிலவுவதற்காக உருவாக்கப்பட்ட போட்டித் தொடராகும்.இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த தொடரில் 6 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
தொடரில் இடம் பெற்றுள்ள நாடுகள்
ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ்,இலங்கை, ஹாங்ஹாங், அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.இந்த தொடரில் இதுவரை அதிகபட்சமாக இந்தியா,இலங்கையும் 4முறை கோப்பையை வென்றுள்ளன.நடப்பு சாம்பியனாக இலங்கை அணி உள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியானது ஜூன் 15ந்தேதி முதல் 24ந்தேதி வரை இலங்கையில் நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் போட்டிகளின் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இறுதி போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.90 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
சரியான உடல் தகுதி இல்லாமல் இருக்கும் யுவராஜ்சிங் , ஜாகீர்கான்ஆகியோர் இந்த தொடரிலிருந்து நீக்கப்படலாம் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்றபடி ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரிலிருந்து மட்டும் ஓய்வு கொடுக்கப்பட்ட சீனியர் வீரர்கள் ஆசிய கோப்பை போட்டியில் இடம் பெறுவார்கள்.
டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் ஆசிய கோப்பையை வெல்ல சிறந்த வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் தேர்வு குழுவினருக்கு உள்ளது.

ஆசிய கோப்பை போட்டி அட்டவனை

தேதி அணிகள்

ஜின் 15 இலங்கைபாக்.
ஜின் 16 பங்களாதேஷ்இந்தியா
ஜின் 18 இலங்கைபங்களாதேஷ்
ஜின் 19 இந்தியாபாக்.
ஜின் 21 பங்களாதேஷ்பாக்
ஜின் 22 இலங்கைஇந்தியா
ஜின் 24 இறுதி போட்டி

பந்துவீச்சின் மூலம் சாதிக்க முடியவில்லை இர்பான் பதான்


மொகாலி, மே. 29

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவிச்சாளராக விளங்கிய இர்பான் பதான் பந்துவீச்சின் மூலம் என்னால் இந்திய அணியில் சாதிக்கமுடியவில்லை. இதனால் பேட்ஸ்மேனாக புதிய அவதாரம் எடுக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார்.
இது குறித்து இர்பான் பதான் கூறியதாவது:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு
அணியின் முக்கிய பந்துவீச்சாளராக வீரராக திகழ்ந்த நான், ஐ.பி.எல். போட்டிகளுக்கு பின் முழு அளவில் பேட்ஸ்மேனாக விரும்புகிறேன். சமிப காலமாக பந்துவீச்சில் என்னால் பெரிய அளவில் சாதிக்கமுடியவில்லை என்பதால் பேட்டிங்திறன் கொண்ட ஒரு ஆல்ரவுண்டராக விளங்க வேண்டும்மென்று விரும்புகிறேன்.
அதன் மூலம் இந்திய அணியின் முக்கிய இடதை பிடிக்க விரும்புகிறேன்.
என்னுடைய பந்து வீச்சை விட பேட்டிங் தற்போது கைகொடுக்கும் நிலையில் இந்திய அணியில் பேட்ஸ்மேனாக வளர்ச்சிகாணவே விரும்புகிறேன். அத்துடன் ஐ.பி.எல். அணியும் என்னை பேட்ஸ்மேனாக ஏற்கத்தான் தயாராக உள்ளது. மேலும் எந்த அணியிலும் பொருந்தக் கூடிய சிறந்த பேட்ஸ்மேனாக, பந்துவீச்சாளராக மற்றும் சிறந்த ஆல்ரவுண்டராக என்னை உருவாக்கிக் கொள்ளவே விரும்புகிறேன்.
என்னை பொறுத்தவரை இந்தியர்களின் மனஉணர்வை நன்கு உணர்ந்த யுவராஜ்சிங் தலைமையிலான அணியில் ஆடுவதையே விரும்புகிறேன். சங்ககாரா அனைத்து வீரர்களையும் திருப்திபடுத்தும் வகையில் செயல்பட விரும்பும்குணம் கொண்டவர். எனவே இருவரும் சிறந்த கேப்டன்கள் தான்.
தற்போது நான் இந்திய அணியில் இல்லாததால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை கைநழுவிப் போனதாக நான் கருதவில்லை மீண்டும் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று தெரிவித்தார்.

அர்ஜென்டினா கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் : மரடோனா

போன்ஸ் ஏர்ஸ், மே. 28
தென்னாப்பிரிக்காவில் நடக்கவிருக்கின்ற 19வது உலககோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று அணியின் பயிற்சியாளர் மரடோனா கூறியுள்ளார். உலககோப்பை கால்பந்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக அர்ஜென்டினா அணி திகழ்கிறது. இந்த அணி ஏற்கனவே 1978,1986 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பிபா உலககோப்பை கால்பந்து போட்டிகளில் கோப்பை வென்றுள்ளது. அர்ஜென்டினா அணியின் தற்போதைய பயிற்சியாளராக கால்பந்து ஜாம்பவான் என்றழைக்கப்படும் முன்னாள் வீரர் மரடோனா உள்ளார்.

நூற்றாண்டின் சிறந்த வீரர்

1976ம் ஆண்டு தன்னுடைய 16 வயதில் அர்ஜென்டினா ஜுனியர் அணிக்காக தன்னுடைய கால்பந்து வாழ்க்கையை ஆரம்பித்தவர் 1986 ம் ஆண்டு அர்ஜென்டினா அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று அணிக்கு இரண்டாவது முறையாக கோப்பை பெற்று தந்தார்.கோப்பை பெற்று தந்ததோடு மட்டுமில்லாமல் அந்த தொடருக்கான சிறந்த வீரருக்காக கொடுக்கப்படும் விருதான கோல்டன் பால் விருதையும் பெற்றார்.சர்வதேச அளவில் 1982லிருந்து 1992வரை பிபா உலககோப்பையில் பங்கேற்றுள்ளவர் 34 கோல்களை அடித்துள்ளார்.1986ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டுடன் நடந்த காலிறுதி போட்டியில் இவர் அடித்த 2 கோல்கள் கால்பந்து விளையாட்டு தெரிந்த எவராலும் மறக்கமுடியாத ஒன்றாகும்.ஏனெனில் அவர் அடித்த கோல்களில் ஒன்று இங்கிலாந்து 6 வீரர்களை கொண்டு அமைத்திருந்த தடுப்பையையும் தாண்டி கோலாக மாறியது.இந்த கோல்தான் 20ம் நூற்றாண்டுக்கான கோல் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளபட்டது. இந்த நூற்றாண்டுக்கான சிறந்த வீரராக உலகளவில் இணையத்தளம் முலம் நடந்த தேர்வில் பிலோவுடன் சேர்ந்து தேர்ந்தேடுக்கபட்டார். சர்வதேச அணியில் விளையாடியுள்ளதோடு மட்டுமில்லாமல் அர்ஜென்டினா ஜுனியர்,போக ஜுனியர்ஸ்,பார்சிலோனா,சிவில்லா,நேவாலி ஆகிய உள்ளூர் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.
மரடோனா நடக்கவிருக்கும் உலககோப்பை பற்றி கூறியதாவது:
கனடாவுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தில் 5 கோல்கள் அடித்து அர்ஜென்டினா வெற்றி பெற்று இருப்பது அணி சிறப்பான இடத்தில் இருப்பதை காட்டுகிறது.
உலக கோப்பையை இந்த தடவை நிச்சயம் அர்ஜென்டினா வெல்லும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி வெற்றி பெற்றால் போன்ஸ் ஏர்ஸ் நகர மையப்பகுதியில் நான் நிர்வாணமாக ஓடுவேன்.
கனடாவுடன் நடந்த போட்டியில் முன்னணி வீரர் லியோனல் மெகியை ஆட நாங்கள் அனுமதிக்கவில்லை. போட்டியில் அவருக்கு காயம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே அவரை ஆடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக கூறினார்.

ஐ.பி.எல் முறைகேடு நடுநிலையான குழுவேண்டும்லலித்மோடி

மும்பை, மே. 27
ஐ.பி.எல் புகார் குறித்து மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென்று இந்திய கிரிக்கெட் சங்கம் உத்தரவிட்டிருந்த நிலையில்
ஐ.பி.எல். புகாரை விசாரணை செய்ய நடுநிலையான குழு ஒன்றை அமைக்க வேண்டுமென்று லலித்மோடி கூறியுள்ளார். ஊழல் புகார் வெளிவந்த பாதை
நடந்து முடிந்த ஐ.பி.எல்லால் ஏகப்பட்ட குழப்பங்களும், ஒரு மத்திய அமைச்சர் தன் பதவியையே ராஜினாமா செய்ய வேண்டிய நிலைமைக்கு கொண்டு சென்றது.அதோடு மட்டுமில்லாமல் சில அமைச்சர்களின் பதவிக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு கொண்டு சென்றது. இதற்கெல்லாம் முதன்மை காரணமாக இருந்தவர் ஐ.பி.எல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி தான். இவர் தான் முதன் முதலில் ஐ.பி.எல் ஏலத்தின் போது கொச்சி அணிக்காக தன்னை மத்திய அமைச்சர் சசி தருர் நிர்பந்தபடுத்தியதாக கூறி பரபரப்பான ஒரு குற்றசாட்டை தொடங்கிவைத்தார்.இதனை தொடந்து மோடியின் மீதும் பல ஊழல் புகார்கள் கூறப்பட்டுள்ளன.தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியாக கூறி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட தன்னுடைய பதவியை இழந்தார் சசி தருர் .இதேபோல் பணபரிவர்த்தனை ,ஊழல் புகார் என பல குற்றசாட்டுகளுக்குள்ளாகி அமைப்பின் தலைவர் பதவியை இழந்தார் மோடி.
ஐ.பி.எல். தலைவராக இருந்த லலித்மோடி பல்வேறு முறைகேடுகளை செய்ததாக வந்த புகாரை அடுத்து அவர் ஐ.பி.எல். தலைவர் பதவியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
வாரிய விசாரணை வேண்டாம்

கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை குறித்து மோடி குறியதாவது:
வாரியம் ஐ.பி.எல் புகார் குறித்து விளக்கம் கேட்டதால் 160 பக்கம் கொண்ட விளக்க கடிதமும், 15 ஆயிரம் பக்க ஆவணங்களையும் அனுப்பியிருந்தேன்.
இது தொடர்பாக கிரிக்கெட் சங்கத்துக்கு கடிதம் ஒன்று எழுதி யுள்ளேன் என்றும்அதில், ஐ.பி.எல். முறைகேடு குறித்து விசாரணை நடத்த சுதந்திரமான நடுநிலைக்குழுவை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிவித்தார்.

பிரெஞ்சு டென்னிஸ்ஸில் பெடரர் அதிர்ச்சி தோல்வி

பாரீஸ், ஜூன். 2
பிரெஞ்சு ஒபன் டென்னிஸ் போட்டியில் சுவிடன் நாட்டு வீரரான சோடர்லிங்கிடம் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
நடப்பு சாம்பியன் தோல்வி
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஒரு காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 5ம் நிலை வீரரான ராபின் சோடர்லிங் (சுவீடன்) மோதினார்கள்.
இதில் யாருமே எதிர் பார்க்காத வகையில் பெடரர் அதிர்ச்சிகரமாக தோற்றார். சோடர்லிங் 36, 63, 75, 64 என்ற செட் கணக்கில் பெடரரை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.
கடந்த ஆண்டு நடந்த போட்டியில் பெடரர் இறுதி ஆட்டத்தில் சோடர்லிங்கை வீழ்த்தி முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 15ம் நிலை வீரரான தாமஸ் பெர்ட்ச் (செக்குடியரசு) 63, 63, 62 என்ற நேர் செட் கணக்கில் 11ம் நிலை வீரரான மைக்கேல் யூஜினியை (ரஷியா) தோற்கடித்தார். அவர் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் அரை இறுதியில் நுழைந்துள்ளார்.
தாமஸ் அரை இறுதி ஆட்டத்தில் சோடர்லிங்கை சந்திக்கிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெறும் ஒரு அரை இறுதி ஆட்டத்தில் 5ம் நிலை வீராங்கனையான எலீனா டெமண்டி எவா (ரஷியா) பிரான்செஸ்கா (இத்தாலி) மோதுகிறார்கள்.
எலீனா டெமண்டி எவா கால் இறுதியில் 26, 62, 60 என்ற கணக்கில் நாடியா பெட்ரோவாவையும் (ரஷியா) பிரான்செஸ்கா 62, 63 என்ற கணக்கில் கரோலினை (டென்மார்க்) தோற்கடித்தார்.


முத்தரப்பு கிரிக்கெட் இன்று இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதல்

புலவாயோ, ஜூன். 3
ஜிம்பாவேயில் நடந்துவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஜிம்பாப்வே, இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றது.தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன்ஏற்பட்ட தோல்விக்கு பிறகு இன்று இந்திய அணி ஜிம்பாவேயை சந்திக்கிறது.ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
3 அணிகளும் தலா ஒரு வெற்றியும், ஒரு தோல்வியும் பெற்றுள்ள நிலையில்
4வது லீக் ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் இந்தியாஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி ஏற்கனவே ஜிம்பாப்வேயிடம் தோற்றதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலையிலுள்ளது. அதோடு இறுதிப்போட்டிக்கு நுழைய நாளை ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நெருக்கடியும் உள்ளது.
280 ரன்னுக்கு மேல் இலக்கை எடுத்து ஜிம்பாப்வே வெற்றி பெற்றதால் இந்திய வீரர்கள் மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும்.
இந்திய அணியின் பேட்டிங்கில் ரோகித் சர்மா மிகவும் நல்ல நிலையில் உள்ளார். தொடர்ந்து 2 சதம் அடித்து முத்திரை பதித்தார். ""ஹாட்ரிக்'' சதம் அடிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

உலக கோப்பை கால்பந்து இங்கிலாந்து அணி அறிவிப்பு

லண்டன் , ஜூன். 3
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலககோப்பை கால்பந்து போட்டி இந்த மாதம் 11ந் தேதி தென் ஆப்பிரிக்கா வில் தொடங்குகிறது. உலகின் 2வது மிகப் பெரிய விளையாட்டு திருவிழா உலககோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன.

கடைசி நாளில் அணிகள் அறிவிப்பு

உலக கோப்பையில் விளையாடும் பெரும்பாலான நாட்டு அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் நேற்றைய முன்தினம் மட்டும் 9 நாட்டு அணிகள் அறிவிக்கப்பட்டன.இதில் இங்கிலாந்து ,இத்தாலி அணிகள் முக்கியமானவை ஆகும்.உலககோப்பை போட்டிக்கான அணி வீரர்களை அறிவிக்க நேற்றுமுன்தினம் தான் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணி வீரர்கள்

கோல் கீப்பர்:

டேவிட் ஜேம்ஸ்,ரோபர்ட் கீரின்,ஜோ கார்ட்

தடுப்பட்ட வீரர்கள்

ஜேமி கார்கர்,அஸ்லி கோல்,ரீயோ பெர்னன்டு,கிளன் ஜான்சன்,லெட்லி கிங்,ஜான் டெரி,மேத்யு அப்சன்,ஸ்டீபன் வார்னாக்
நடுகள வீரர்கள்

கேரத் பாரி,மைக்கேல் காரிக்,ஜோ கோல்,ஸ்டீவன் கேராடு,பிராங் லம்போர்டு,ஆரோன் லெனான்,ஜேம்ஸ் மில்னர்,வான்ரைட் பிலிப்ஸ்

முன்கள வீரர்கள்

வெய்னி ரூனி,எமைல் ஹெஸ்கி,பீட்டர் கிரவுசர்,ஜெர்மைன் பிபோ ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

பயிற்சி முகாமில் இடம் பெற்ற வீரர்களில் 7 பேர் இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இதில் வால்காட்டும் ஒருவர். பயிற்சியாளர் பேபியோ கேப்லோ எடுத்த இந்த முடிவு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இங்கிலாந்து அணி இடம் பெற்றுள்ள""சி'' பிரிவில் அமெரிக்கா, அல்ஜீரியா, சுலோவெனியா ஆகிய நாடுகளும் இடம் பெற்று உள்ளன. இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவை வரும் 12ந்தேதி சந்திக்கிறது.

உலக கோப்பை கால்பந்து இங்கிலாந்து அணி அறிவிப்பு

லண்டன் , ஜூன். 3
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலககோப்பை கால்பந்து போட்டி இந்த மாதம் 11ந் தேதி தென் ஆப்பிரிக்கா வில் தொடங்குகிறது. உலகின் 2வது மிகப் பெரிய விளையாட்டு திருவிழா உலககோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன.

கடைசி நாளில் அணிகள் அறிவிப்பு

உலக கோப்பையில் விளையாடும் பெரும்பாலான நாட்டு அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் நேற்றைய முன்தினம் மட்டும் 9 நாட்டு அணிகள் அறிவிக்கப்பட்டன.இதில் இங்கிலாந்து ,இத்தாலி அணிகள் முக்கியமானவை ஆகும்.உலககோப்பை போட்டிக்கான அணி வீரர்களை அறிவிக்க நேற்றுமுன்தினம் தான் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணி வீரர்கள்

கோல் கீப்பர்:

டேவிட் ஜேம்ஸ்,ரோபர்ட் கீரின்,ஜோ கார்ட்

தடுப்பட்ட வீரர்கள்

ஜேமி கார்கர்,அஸ்லி கோல்,ரீயோ பெர்னன்டு,கிளன் ஜான்சன்,லெட்லி கிங்,ஜான் டெரி,மேத்யு அப்சன்,ஸ்டீபன் வார்னாக்
நடுகள வீரர்கள்

கேரத் பாரி,மைக்கேல் காரிக்,ஜோ கோல்,ஸ்டீவன் கேராடு,பிராங் லம்போர்டு,ஆரோன் லெனான்,ஜேம்ஸ் மில்னர்,வான்ரைட் பிலிப்ஸ்

முன்கள வீரர்கள்

வெய்னி ரூனி,எமைல் ஹெஸ்கி,பீட்டர் கிரவுசர்,ஜெர்மைன் பிபோ ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

பயிற்சி முகாமில் இடம் பெற்ற வீரர்களில் 7 பேர் இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இதில் வால்காட்டும் ஒருவர். பயிற்சியாளர் பேபியோ கேப்லோ எடுத்த இந்த முடிவு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இங்கிலாந்து அணி இடம் பெற்றுள்ள""சி'' பிரிவில் அமெரிக்கா, அல்ஜீரியா, சுலோவெனியா ஆகிய நாடுகளும் இடம் பெற்று உள்ளன. இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவை வரும் 12ந்தேதி சந்திக்கிறது.

இந்திய கிரிக்கெட் வாரியம் பணத்தை தான் விரும்புகிறது ஒலிம்பிக் சங்கம்

மும்பை, ஜூன். 3
இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல் போன்ற வர்த்தக ரீதியான விளையாட்டுப் போட்டிகளைத்தான் விரும்புகிறது என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றில் முதன் முதறையாக கிரிக்கெட் போட்டி இப்பொழுது தான் முதன் முறையாக சேர்க்கப்பட்டிருந்து.இந்நிலையில் சீனாவில் உள்ள குவாங்த் நகரில் 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி நவம்பர் 12ந் தேதி தொடங்கி 27ந்தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் இந்திய ஆண்கள் ,பெண்கள் கிரிக்கெட் அணிகள் பங்கேற்காது என பி.சி.சி.ஐ நேற்றுமுன்தினம் அறிவித்தது.
கிரிக்கெட் வாரியத்தின் முடிவு குறித்து ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (ஒ.சி.ஏ.) பொதுச்செயலாளர் ரந்தீர் சிங் கூறும்போது, ""ஆசிய விளையாட்டில் கிரிக்கெட்டை சேர்க்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கடும் முயற்சி எடுத்தது. இப்படிபட்ட நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் பங்கேற்க இயலாது அறிவித்துள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இது குறித்து அதிகாரப் பூர்வமான தகவல் எதுவும் எங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.
இந்தியஒலிம்பிக் சங்கம் கண்டனம்
இந்த முடிவு குறித்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் கல்மாடி கூறும்போது, இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசுத் தொகை வாங்குகின்ற தொடர்களை தான் விரும்புகிறதே தவிர பதக்கம் வாங்குகின்ற தொடர்களை விரும்புவதில்லை என தெரிவித்தார்.

முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கை இன்று மோதல்

புலவாயோ, மே. 29
முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு இன்று இந்தியா இலங்கை அணியை எதிர்கொள்ளகிறது.
நேற்று முன்தினம் இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயில் தொடங்கியது.
தொடரின் முதல் ஆட்டத்தில் ஜிம்பாவே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.2வது ""லீக்'' ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணியை சந்திக்கின்றது.இந்த 3 நாடுகள் போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
ஜிம்பாப்வே அணியிடம் தோற்றுள்ளதால் இலங்கையுடனான இந்தப் போட்டியில் வென்றால் சிக்கலில்லாமல் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி செல்லும்.
சீனியர் வீரர்கள் இல்லாத இந்திய அணி இலங்கையை வெல்ல கடுமையாக போராட வேண்டும்.

பந்துவீச்சே தோல்விக்கு காரணம்: ரெய்னா
ஜிம்பாப்வே அணியுடனான தோல்வி குறித்து ரெய்னா கூறியதாவது:
இந்திய அணி285 ரன்கள் குவித்தும் ஜிம்பாப்வேயிடம் தோற்றதை தோற்றதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. சில பவுலர்களுக்கு இதுதான் முதல் ஆட்டமென்பதால் அவர்களின் அனுபவமில்லாத பந்துவீச்சே தோல்விக்கு காரணம். புதுமுக பவுலர்கள் தாங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். ஜடேஜா, மிஸ்ரா மட்டுமே சிறப்பாக பந்து வீசினார்கள்.
ஜிம்பாவேயுடனான எங்களது பேட்டிங் சிறப்பாக இருந்தது. இன்று நடக்கும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் ,பீல்டிங், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்று கூறினார்.