Wednesday, June 30, 2010

ஐ.சி.சி. துணைத் தலைவர் பதவி ஹோவார்டுக்கு தென்னாப்பிரிக்கா எதிர்ப்பு



துபாய், ஜுலை.1
ஐ.சி.சி. துணைத் தலைவராக ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஜான் ஹோவார்டை நியமிக்க கூடாதென தென்னாப்பிரிக்கா ,ஜிம்பாப்வே நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த மாதம் ஐ.சி.சி.அமைப்பின் தலைவராக சரத் பவார் பதவியேற்கையில் துணைத் தலைவர் பொறுப்பிற்கு முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவார்ட் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இப்போது 6 நாடுகள் அவர் அந்தப்பொறுப்பிற்கு வருவதை விரும்பவில்லை என்ற நிலைமை எழுந்துள்ளது.
ஜான் ஹோவார்ட் ஆஸ்திரேலிய பிரதமராக இருந்தபோது ஜிம்பாப்வேயின் கிரிக்கெட்டை அழித்தவர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். மேலும் அவர் ஜிம்பாப்வேயிற்கு ஆஸ்திரேலிய அணி செல்லக்கூடாது என்று தடை விதித்திருந்தார்.
தற்போது ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே தென்னாப்பிரிக்காவை முன்னிறுத்தி ஜான் ஹோவார்டை எதிர்த்துவருகிறது.
ஆஸ்திரேலியா, நியூசீலாந்து, இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களே ஹோவார்ட் துணைத் தலைவராக வர ஆதரவு அளித்து வருகிறது.
இது குறித்த உறுதியான முடிவு இன்னமும் வரவில்லை.

No comments:

Post a Comment