Wednesday, June 30, 2010

ஒரு கோல் அடித்து காலிறுதியில் நுழைந்தது ஸ்பெயின்



ஜோகன்ஸ்பர்க், ஜூலை.1
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2வது சுற்றின் கடைசி ஆட்டத்தில் 10 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஸ்பெயின்.
கோல் எதுவுமில்லை
தென்னாப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் கேப்டவுனில் நடைபெற்ற "ரவுண்ட்16' சுற்று போட்டியில் "யூரோ' சாம்பியன் அணியும், உலக கால்பந்து தரவரிசையில் 2ம் இடத்திலுள்ள ஸ்பெயின் அணி , உலக கால்பந்து தரவரிசையில் 3ம் இடத்திலுள்ள போர்ச்சுகல் அணியை எதிர்கொண்டது.இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்பெயின் அணியே அதிகமாக ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழவில்லை.
வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டது
ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில் டோரஸ் அடித்த பந்தை, போர்ச்சுகல் கோல் கீப்பர் எட்வார்டோ துடிப்பாக தடுத்தார். இதற்கு பின் மற்றொரு ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி மிரட்டினார். போர்ச்சுக்கல் சேர்ந்த உலகின் முன்னணி வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த பந்தை ஸ்பெயின் கோல் கீப்பரும், கேப்டனுமான கேசிலாஸ் அற்புதமாக தடுத்தார்.22வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு கிடைத்த வாய்ப்பை டியாகோ கோட்டை விட்டார். 28வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ "பிரீகிக்' வாய்ப்பை வீணாக்கினார். பின் 38வது நிமிடத்தில் ரொனால்டோ பந்தை அருமையாக "பாஸ்' செய்தார். ஆனால், அல்மீடா தலையால் முட்டி கோல் அடிக்க தவறினார். இப்படியாக இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கப்படாமல் முதல் பாதி முடிந்தது.
ஸ்பியின் ஆதிக்கம்
2வது பகுதி ஆட்டத்திலும் ஸ்பெயின் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். ஆட்டத்தில் 55ஆவது நிமிடத்தில் ரொனால்டோ கொடுத்த ஒரு கிராஸ் பந்தினை ஸ்பெயின் கோல்கீப்பர் கேசிலாஸ் முன்னேறி வந்து தட்டி விட்டதால் ஸ்பெயின் அணி கோல் வாங்காமல் தப்பித்தது. 63வது நிமிடத்தில் அந்த அணி கோல் அடித்தது. ஷவி தட்டிக்கொடுத்த பந்தை டேவிட் வில்லா அடித்தார்.
இதை போர்ச்சுகல் கோல் கீப்பர் எடுடர்டோ கடுமையாக போராடி தடுத்தார். இருந்தாலும் பந்து அவரது கையில் பட்டு வெளியே வர டேவிட் வில்லா கோலாக்கினார். இந்த கோலால் ஸ்பெயின் அணி 10 என்று முன்னிலை பெற்றது .
துடிப்பான கீப்பர்
இந்த உலக கோப்பையில் டேவிட் வில்லா அடித்த 4வது கோல் இதுவாகும்.தொடர்ந்து ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. 69வது நிமிடத்தில் செர்ஜியோ ராமோஸ் அடித்த பந்தை போர்ச்சுகல் கோல்கீப்பர் எடுவாரோ அபாராமாக தடுத்துவிட்டார். இந்த ஆட்டத்தில், போர்ச்சுகல் கோல்கீப்பர் எடுவாரா சிறப்பாக செயல்பட்டதால் ஸ்பெயின் வீரர்களின் பல கோல் வாய்ப்புகளை முறியடித்தார். இல்லையென்றால் ஸ்பெயின் அணியின் கோல் எண்ணிக்கை மேலும் கூடியிருக்கும்.
கடைசி கட்ட சோகம்
போர்ச்சுக்கல் அணிக்கும் ஒரு சில வாய்ப்புகள் கிடைத்தது. போர்ச்சுக்கல் அணியில் ரொனால்டோ தவிர யாரும் சரியாக விளையாடவில்லை. ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு பெரும் அதிர்ச்சியாக "பெனால்டி ஏரியாவில்' வைத்து ஸ்பெயின் வீரர் கேப்டெவில்லா முகத்தில் முழங்கை வைத்து முரட்டுத்தனமாக தடுத்ததாக கூறி, ரிக்கார்டோ கோஸ்டாவுக்கு "ரெட் கார்டு' காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.இதையடுத்து 10 பேருடன் போர்ச்சுகல் விளையாட நேர்ந்தது.இதேபோல் ஸ்பெயின் அணியில் அலோன்சாவும், போர்ச்சுக்கல் அணியில் டியா கோவும் மஞ்சள் அட்டை பெற்றனர்.போர்ச்சுகல் அணியால் இறுதி வரை பதில் கோல் அடிக்க இயல வில்லை.
ஆட்டத்தின் முடிவில் ஸ்பெயின் 10 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.ஆட்ட நாயகன் விருதை ஸ்பெயின் வீரர் சேவி தட்டிச் சென்றார். ஸ்பெயின் அணி தனது காலிறுதி போட்டியில் தென் அமெரிக்கா கண்டத்தை சேர்ந்த பராகுவேயுடன் மோதுகிறது. பராகுவே அணி 2வது சுற்றில் ஜப்பானை பெனால்டி ஷீட்டில் 53 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment