Wednesday, June 2, 2010

பிரெஞ்சு டென்னிஸ்ஸில் பெடரர் அதிர்ச்சி தோல்வி

பாரீஸ், ஜூன். 2
பிரெஞ்சு ஒபன் டென்னிஸ் போட்டியில் சுவிடன் நாட்டு வீரரான சோடர்லிங்கிடம் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
நடப்பு சாம்பியன் தோல்வி
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஒரு காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 5ம் நிலை வீரரான ராபின் சோடர்லிங் (சுவீடன்) மோதினார்கள்.
இதில் யாருமே எதிர் பார்க்காத வகையில் பெடரர் அதிர்ச்சிகரமாக தோற்றார். சோடர்லிங் 36, 63, 75, 64 என்ற செட் கணக்கில் பெடரரை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.
கடந்த ஆண்டு நடந்த போட்டியில் பெடரர் இறுதி ஆட்டத்தில் சோடர்லிங்கை வீழ்த்தி முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 15ம் நிலை வீரரான தாமஸ் பெர்ட்ச் (செக்குடியரசு) 63, 63, 62 என்ற நேர் செட் கணக்கில் 11ம் நிலை வீரரான மைக்கேல் யூஜினியை (ரஷியா) தோற்கடித்தார். அவர் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் அரை இறுதியில் நுழைந்துள்ளார்.
தாமஸ் அரை இறுதி ஆட்டத்தில் சோடர்லிங்கை சந்திக்கிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெறும் ஒரு அரை இறுதி ஆட்டத்தில் 5ம் நிலை வீராங்கனையான எலீனா டெமண்டி எவா (ரஷியா) பிரான்செஸ்கா (இத்தாலி) மோதுகிறார்கள்.
எலீனா டெமண்டி எவா கால் இறுதியில் 26, 62, 60 என்ற கணக்கில் நாடியா பெட்ரோவாவையும் (ரஷியா) பிரான்செஸ்கா 62, 63 என்ற கணக்கில் கரோலினை (டென்மார்க்) தோற்கடித்தார்.


No comments:

Post a Comment