Wednesday, June 2, 2010

அர்ஜென்டினா கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் : மரடோனா

போன்ஸ் ஏர்ஸ், மே. 28
தென்னாப்பிரிக்காவில் நடக்கவிருக்கின்ற 19வது உலககோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று அணியின் பயிற்சியாளர் மரடோனா கூறியுள்ளார். உலககோப்பை கால்பந்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக அர்ஜென்டினா அணி திகழ்கிறது. இந்த அணி ஏற்கனவே 1978,1986 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பிபா உலககோப்பை கால்பந்து போட்டிகளில் கோப்பை வென்றுள்ளது. அர்ஜென்டினா அணியின் தற்போதைய பயிற்சியாளராக கால்பந்து ஜாம்பவான் என்றழைக்கப்படும் முன்னாள் வீரர் மரடோனா உள்ளார்.

நூற்றாண்டின் சிறந்த வீரர்

1976ம் ஆண்டு தன்னுடைய 16 வயதில் அர்ஜென்டினா ஜுனியர் அணிக்காக தன்னுடைய கால்பந்து வாழ்க்கையை ஆரம்பித்தவர் 1986 ம் ஆண்டு அர்ஜென்டினா அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று அணிக்கு இரண்டாவது முறையாக கோப்பை பெற்று தந்தார்.கோப்பை பெற்று தந்ததோடு மட்டுமில்லாமல் அந்த தொடருக்கான சிறந்த வீரருக்காக கொடுக்கப்படும் விருதான கோல்டன் பால் விருதையும் பெற்றார்.சர்வதேச அளவில் 1982லிருந்து 1992வரை பிபா உலககோப்பையில் பங்கேற்றுள்ளவர் 34 கோல்களை அடித்துள்ளார்.1986ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டுடன் நடந்த காலிறுதி போட்டியில் இவர் அடித்த 2 கோல்கள் கால்பந்து விளையாட்டு தெரிந்த எவராலும் மறக்கமுடியாத ஒன்றாகும்.ஏனெனில் அவர் அடித்த கோல்களில் ஒன்று இங்கிலாந்து 6 வீரர்களை கொண்டு அமைத்திருந்த தடுப்பையையும் தாண்டி கோலாக மாறியது.இந்த கோல்தான் 20ம் நூற்றாண்டுக்கான கோல் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளபட்டது. இந்த நூற்றாண்டுக்கான சிறந்த வீரராக உலகளவில் இணையத்தளம் முலம் நடந்த தேர்வில் பிலோவுடன் சேர்ந்து தேர்ந்தேடுக்கபட்டார். சர்வதேச அணியில் விளையாடியுள்ளதோடு மட்டுமில்லாமல் அர்ஜென்டினா ஜுனியர்,போக ஜுனியர்ஸ்,பார்சிலோனா,சிவில்லா,நேவாலி ஆகிய உள்ளூர் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.
மரடோனா நடக்கவிருக்கும் உலககோப்பை பற்றி கூறியதாவது:
கனடாவுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தில் 5 கோல்கள் அடித்து அர்ஜென்டினா வெற்றி பெற்று இருப்பது அணி சிறப்பான இடத்தில் இருப்பதை காட்டுகிறது.
உலக கோப்பையை இந்த தடவை நிச்சயம் அர்ஜென்டினா வெல்லும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி வெற்றி பெற்றால் போன்ஸ் ஏர்ஸ் நகர மையப்பகுதியில் நான் நிர்வாணமாக ஓடுவேன்.
கனடாவுடன் நடந்த போட்டியில் முன்னணி வீரர் லியோனல் மெகியை ஆட நாங்கள் அனுமதிக்கவில்லை. போட்டியில் அவருக்கு காயம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே அவரை ஆடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக கூறினார்.

No comments:

Post a Comment