Wednesday, June 2, 2010

இந்திய கிரிக்கெட் வாரியம் பணத்தை தான் விரும்புகிறது ஒலிம்பிக் சங்கம்

மும்பை, ஜூன். 3
இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல் போன்ற வர்த்தக ரீதியான விளையாட்டுப் போட்டிகளைத்தான் விரும்புகிறது என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றில் முதன் முதறையாக கிரிக்கெட் போட்டி இப்பொழுது தான் முதன் முறையாக சேர்க்கப்பட்டிருந்து.இந்நிலையில் சீனாவில் உள்ள குவாங்த் நகரில் 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி நவம்பர் 12ந் தேதி தொடங்கி 27ந்தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் இந்திய ஆண்கள் ,பெண்கள் கிரிக்கெட் அணிகள் பங்கேற்காது என பி.சி.சி.ஐ நேற்றுமுன்தினம் அறிவித்தது.
கிரிக்கெட் வாரியத்தின் முடிவு குறித்து ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (ஒ.சி.ஏ.) பொதுச்செயலாளர் ரந்தீர் சிங் கூறும்போது, ""ஆசிய விளையாட்டில் கிரிக்கெட்டை சேர்க்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கடும் முயற்சி எடுத்தது. இப்படிபட்ட நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் பங்கேற்க இயலாது அறிவித்துள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இது குறித்து அதிகாரப் பூர்வமான தகவல் எதுவும் எங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.
இந்தியஒலிம்பிக் சங்கம் கண்டனம்
இந்த முடிவு குறித்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் கல்மாடி கூறும்போது, இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசுத் தொகை வாங்குகின்ற தொடர்களை தான் விரும்புகிறதே தவிர பதக்கம் வாங்குகின்ற தொடர்களை விரும்புவதில்லை என தெரிவித்தார்.

No comments:

Post a Comment