Wednesday, June 2, 2010

ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்திய அணி வீரர்கள் தேர்வு


மும்பை, மே. 31
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்களை ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வு குழுவினர் வருகின்ற ஜுன் 7ம் தேதி டெல்லியில் கூடி தேர்வு செய்கின்றனர்.
ஆசிய கோப்பை அறிமுகம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியானது சர்வதேச தரத்திலான விளையாட்டுப் போட்டியாகும்.1983 ம் ஆண்டு ஆசிய கண்டத்திலுள்ள நாடுகளுக்கிடையே ஆரோக்கியமான சூழ்நிலை நிலவுவதற்காக உருவாக்கப்பட்ட போட்டித் தொடராகும்.இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த தொடரில் 6 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
தொடரில் இடம் பெற்றுள்ள நாடுகள்
ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ்,இலங்கை, ஹாங்ஹாங், அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.இந்த தொடரில் இதுவரை அதிகபட்சமாக இந்தியா,இலங்கையும் 4முறை கோப்பையை வென்றுள்ளன.நடப்பு சாம்பியனாக இலங்கை அணி உள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியானது ஜூன் 15ந்தேதி முதல் 24ந்தேதி வரை இலங்கையில் நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் போட்டிகளின் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இறுதி போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.90 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
சரியான உடல் தகுதி இல்லாமல் இருக்கும் யுவராஜ்சிங் , ஜாகீர்கான்ஆகியோர் இந்த தொடரிலிருந்து நீக்கப்படலாம் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்றபடி ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரிலிருந்து மட்டும் ஓய்வு கொடுக்கப்பட்ட சீனியர் வீரர்கள் ஆசிய கோப்பை போட்டியில் இடம் பெறுவார்கள்.
டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் ஆசிய கோப்பையை வெல்ல சிறந்த வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் தேர்வு குழுவினருக்கு உள்ளது.

ஆசிய கோப்பை போட்டி அட்டவனை

தேதி அணிகள்

ஜின் 15 இலங்கைபாக்.
ஜின் 16 பங்களாதேஷ்இந்தியா
ஜின் 18 இலங்கைபங்களாதேஷ்
ஜின் 19 இந்தியாபாக்.
ஜின் 21 பங்களாதேஷ்பாக்
ஜின் 22 இலங்கைஇந்தியா
ஜின் 24 இறுதி போட்டி

No comments:

Post a Comment