Monday, June 28, 2010

பிபா மீது பேபியோ கெபேலோ கடும் தாக்கு

ஜோகனஸ்பர்க், ஜுன்.29
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததற்கு கோல்லைன் டெக்னாலஜி இல்லாததே காரணம் என்று அந்த அணியின் பயிற்சியளார் பேபியோ கெபேலோ கூறியுள்ளார்.உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஜெர்மனியிடம் 41 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
இந்த தோல்வி குறித்து இங்கிலாந்து பயிற்சியாளர் கூறியதாவது:
உலக கோப்பை கால்பந்து போட்டியின் போது கோல்லைன் டெக்னாலஜியை பயன்படுத்த தவறுவது ஒரு முட்டாள்தனமான செயலாகும் . கோல் அல்லது கோல் இல்லை என்பதை தீர்மானிக்க நடுவர்களுக்கு இது உதவும்.ஆனால் 'பிபா' இந்த விஷயத்தில் ஏன் இவ்வளவு தயங்குகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.பிராங்க் லேம்பர்டு அடித்த கோல் ஏற்கப்பட்டிருந்தால் பிற்பாதியில் எங்களது ஆட்டமும் மாறி இருக்கும்.நடுவர்கள் மட்டுமல்ல ,எங்களது வீரர்களும் பல தவறுகளை தொடர்ந்து செய்தனர்.இதுவே தோல்விக்கு காரணம். ஜெர்மனி இந்த வெற்றிக்கு தகுதியானது , திறமையாகவும் விளையாடியது என்றார்.
முதல் பாதியில் ஜெர்மனி 21 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்த போது இங்கிலாந்து வீரர் பிராங்க் லேம்பர்டு அடித்த பந்து கோல் கம்பத்தில் மோதி கோல் லைனை தாண்டியது. ஆனால் இதனை பார்க்காத நடுவர் அதனை கோல் என்று அறிவிக்கவில்லை.இந்த கோல் ஏற்கப்பட்டிருந்தால் ஆட்டம் 22 என்று சமநிலை கண்டு பிற்பாதி ஆட்டத்தின் போக்கு ஒருவேளை மாறியிருக்கலாம்.

No comments:

Post a Comment