Wednesday, June 30, 2010

தவறான தீர்ப்பு கொடுத்த நடுவர்கள் நீக்கம் பிபா அதிரடி


ஜோஹன்னஸ்பர்க் ,ஜுலை.1
தவறான தீர்ப்புகள் கொடுத்த இங்கிலாந்து,மெக்ஸிகோ அணிகளின் வெற்றியை தடுத்து விட்டதாக குற்றச்சாட்டுக்குள்ளான நடுவர்கள் ஜார்ஜ் லாரியோன்டா மற்றும் ராபர்டோ ரொசட்டி ஆகிய இருவரையும் நடுவர் பட்டியலிலிருந்து பிபா நீக்கியுள்ளது. வரும் போட்டிகளில் இவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அணியின் லாம்பார்ட் போட்ட அழகான கோலை இல்லை என்று கூறி இங்கிலாந்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியவர் லாரியோன்டா.
அதேபோல அர்ஜென்டினா அணியின் கார்லோஸ் தவேஸ், மெக்சிகோவுக்கு எதிராக கோல் போட்டபோது அது ஆப்சைடாக இருந்தது வீடியோ காட்சிகளில் தெரிய வந்தது. ஆனால் அந்த கோலை அனுமதித்தார் ரொசட்டி.
இந்த குழப்பங்களைத் தொடர்ந்து தற்போது இருவரையும் 19 நடுவர்கள் கொண்ட பட்டியலிலிருந்து நீக்கப்ட்டுள்ளதாகவும், வரும் போட்டிகளில் இவர்கள் பணியாற்ற மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்காலத்தில் பல்வேறு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப் போவதாகவும் கால்பந்து சம்மேளனம் (பிபா)அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment