லண்டன்,ஜுலை. 2
ஆஸ்திரேலியா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது.பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகளுக்கு இடையேயான 5 ஒரு நாள் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணி முதல் 3 போட்டியிலும் வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி ஓவலில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக மைக்கேல் கிளார்க் ஆட்டம் இழக்காமல் 106 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் எடுத்தார். ரிக்கி பாண்டிங் 93 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 92 ரன் எடுத்தார்.இந்த ரன்களின் உதவியுடன் பாண்டிங் ஒருநாள் போட்டியில் 13 ஆயிரம் ரன்னை கடந்தார்.
பின்னர் 291 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 42.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் ஆஸ்திரேலியா 78 ரன்னில் அபார வெற்றி பெற்றது. யார்டி அதிகபட்சமாக 57 ரன்னும், மார்கன் 47 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய வீரர் ஹாரிஸ் 32 ரன் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார்.
5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் வென்றுள்ளது.
No comments:
Post a Comment