Thursday, July 8, 2010

இலங்கை டெஸ்ட் தொடர் ஜாகீர்கான் விலகல்


மும்பை,ஜுலை.8
இலங்கை எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தோள்பட்டை காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் விலகியுள்ளார்.
இந்தத் தொடரில் 3 டெஸ்ட் போட்டிகள் தவிர இலங்கை, நியூஸீலாந்து அணிகளுடனான முத்தரப்பு ஒருநாள் தொடரும் உள்ள நிலையில் இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இலங்கை அணிக்கு எதிராக வேகப்பந்து பொறுப்பை இஷாந்த் ஷர்மாவும், ஸ்ரீசாந்த்தும் ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜாகீர்கானுக்கு பதிலாக கர்நாடகாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வருகிற ஜுலை 18ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

No comments:

Post a Comment