Saturday, July 10, 2010

முதல் ஒருநாள் போட்டி வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து


டிரெண்ட்பிரிட்ஜ்,ஜுலை.10
இங்கிலாந்துவங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 10 என்று முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து.
முதலில் பேட் செய்த வங்கதேச அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினார்.
அந்த அணியின் ராகிபுல் ஹசனின் 76 ரன்கள் எடுத்தார். ஷாகிப் 20 ரன்கள் எடுத்து சோபிக்காமல் போனார். ஜுனைத் சித்திக்கி 51 ரன்கள் எடுத்தார்.முடிவில் வங்கதேசம் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து தரப்பில்ஜேம்ஸ் ஆண்டர்சன் 10 ஓவர்களில் 74 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் பிரெஸ்னன், பிராட் ஆகியோர் சிறப்பாகவும் சிக்கனமாகவும் வீசி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இங்கிலாந்து தன் இன்னிங்சை துவங்கியபோது ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் படு வேகமாக ஆடத் துவங்கினார். கிரெய்க் கெய்ஸ்வெட்டரும் இவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக வேகமாக 75 ரன்கள் சேர்த்தனர். ஸ்ட்ராஸ் 7 பவுண்டரிகளுடன் 37 பந்துகளில் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார்.
அப்துர் ரசாக் பந்தை சிக்சருக்கு விரட்டிய கெய்ஸ்வெட்டர், 32 ரன்களில் ஷாகிப் பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்று ஆட்டமிழந்தார்.
காலிங்வுட்டும், பெல்லும் இணைந்து 100 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்தனர். காலிங்வுட்டும் ஷாகிபிடம் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.சிறப்பாக விளையாடிய பெல் தன் 16வது அரைசதத்தை எடுக்க இங்கிலாந்து வெற்றி பெற்றது.முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

No comments:

Post a Comment