ஜோகன்ஸ்பர்க்,ஜூலை.10
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியில் எந்தவித மாற்றமும் இருக்காதென அந்த அணியின் பயிற்சியாளர் டெல்பாஸ்கியூக் கூறியுள்ளார்.உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் 19வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டி நாளை தென்னாப்பிரிக்காவிலுள்ள சாக்கர் சிட்டி மைதானத்தில் நடக்கவிருக்கிறது.இதில் ஐரோப்பிய சாம்பியனும்,
உலக தர வரிசையில் 2வது இடத்திலுமுள்ள ஸ்பெயின் அணி ,உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணியை சந்திக்கிறது.நெதர்லாந்து அணி இதுவரை இரண்டு முறை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது.1974ம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடமும், 1978ம் ஆண்டு அர்ஜென்டினாவிடமும் தோற்றது.
தற்போது முதல்முறையாக கோப்பையை கைப்பற்றும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.இறுதிப் போட்டியில் மோதும் இரு அணிகளுமே ஐரோப்பா கண்டத்தை சார்ந்த அணிகள்,இதுவரை கோப்பையை வாங்காத அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஸ்பெயின் அணி பயிற்சியாளர் டெல்பாஸ்கியூக் கூறியதாவது:
நெதர்லாந்து அணியை வீழ்த்த கூடிய அனைத்து திறமைகளும் எங்களுக்குள்ளது.நெதர்லாந்துடனான இறுதி போட்டிக்காக எங்கள் அணியில் பெரிய மாற்றம் எதுவும் செய்ய நினைக்கவில்லை.அரையிறுதியில் ஜெர்மனிக்கு எதிராக களமிறங்கப்பட்ட பெட்ரோ ரோட்ரிக்ஸ் மிகவும் சிறப்பாக ஆடினார்.அவர்ஜெர்மனியின் பின்கள வீரர் லாமை ஏமாற்றி அவர் பந்தை அருமையாக பாஸ் செய்தார். அவருக்கு இது 5வது ஆட்டமாக இருந்தாலும் அவரது ஆட்டம் பாராட்டும்படி இருந்தது என்று கூறினார்.
அணியில் மாற்றம் எதுவுமில்லை ஸ்பெயின் பயிற்சியாளரின் முடிவு 11 பேர் கொண்ட அணியில் டொரசுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை.
No comments:
Post a Comment