Saturday, July 10, 2010

டென்னிஸ் போட்டியில் புதிய உலக சாதனை

பிரசேலிஸ்,ஜுலை.10
அமெரிக்காவின் செரினா வில்லியம்சும் பெல்ஜியத்தின் கிம் கிலிஸ்டர்சும் 35 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் நடைபெற்ற காட்சி டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் பெல்ஜியத்தின் கிம் கிலிஸ்டர்சை எதிர்கொண்டார். 35 ஆயிரம் ரசிகர்களின் உற்சாக முழக்கங்களுக்கு இடையே இரண்டு வீராங்கனைகளும் பதற்றம் இன்றி விளையாடினர். இதில் கிம் கிலிஸ்டர்ஸ் 63,62 என்ற செட் கணக்கில் செரினாவை வீழ்த்தினார். பெல்ஜியம் நாட்டில் அமைக்கப்பட்ட இந்த காட்சிப் போட்டியின் மூலம் கிடைத்த வருவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment