Saturday, July 10, 2010

முரளிதரன் ஓய்வு நிம்மதியாகவுள்ளது மைக்கேல் கிளார்க்

லண்டன்,ஜுலை.9
முரளிதரன் ஓய்வு பேட்ஸ்மேன்களுக்கு நிம்மதியளிக்கும் செய்தி என ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது பற்றி கருத்து தெரிவித்த கிளார்க்:
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் செய்தி உலக பேட்ஸ்மென்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு அளிக்கும் செய்தியாகும் .
அவர் பந்துகளை எதிரிகொள்ள வேண்டும் என்ற பயம் இனி இல்லை.
இன்னும் 8 விக்கெட்டுகள் எடுத்தால் 800 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற சாதனை இருந்தும் ஒரு டெஸ்டில் அதனை எடுத்து விடலாம் என்ற அவரது தன்னம்பிக்கை ஆச்சரியமாக இருக்கிறது.
என்னுடைய காலத்தின் சிறந்த பந்து வீச்சாளராக நான் ஷேன் வார்னைக் கருதுகிறேன் என்று கூறினார்.

No comments:

Post a Comment