ஜோகனஸ்பர்க், ஜுலை.9
உலக கோப்பையில் அரையிறுதி ஆட்டங்கள் வரை அதிக கோல் அடித்த வீரர்களில் ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லாவும் நெதர்லாந்து வீரர் வெஸ்லி ஸ்னைடரும் முதலிடத்தை பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் தலா 5 கோல்கள் அடித்துள்ளனர். இன்னமும் ஒரே ஒரு போட்டி இருவருக்கும் பாக்கியுள்ளது. அது இறுதி போட்டி.
இறுதி போட்டியில் கோல் அடிப்பவருக்கு தங்ககாலணி கிடைக்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் ஜெர்மனியின் மிராஸ்லாவ் குளோசும் தாமஸ்முல்லரும் தலா 4 கோல்கள் அடித்துள்ளனர். உருகுவே அணிக்கு எதிரான 3 இடத்துக்கான ஆட்டத்தில் இவர்களில் யாராவது அதிக கோல் அடித்தால் தங்ககாலணி கால் மாறி விடக் கூடும். உருகுவே கேப்டன் டீகோ போர்லானும் 4 கோல்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பையில் அதிக கோல் அடித்த முதல் 10 வீரர்கள்.
1.டேவிட் வில்லாஸ்பெயின்பார்சிலோனா5 கோல்கள்
2.வெஸ்லி ஸ்னைடர்நெதர்லாந்துஇன்டர்மிலான்5 கோல்கள்
3.ஹீகுவான்அர்ஜென்டினாரியல்மாட்ரிட்4 கோல்கள்
4.மிராஸ்லாவ் குளோஸ்ஜெர்மனிபேயர்ன்மியூனிச்4 கோல்கள்
5.தாமஸ் முல்லர்ஜெர்மனிபேயர்ன்மியூனிச்4 கோல்கள்
6.ராபர்ட் விர்டேக்சுலோவேகியாஅங்காராகு4 கோல்கள்
7.டீகோ போர்லான்உருகுவேஅத்லெடிக் மாட்ரிட்4 கோல்கள்
8.டோ னாவன்அமெரிக்காலாஸ்ஏஞ்சல்ஸ் கேலக்சி3 கோல்கள்
9.பேபியானோபிரேசில்செவில்லா3 கோல்கள்
10.சாரஸ்உருகுவேஏஜாக்ஸ்3 கோல்கள்
No comments:
Post a Comment