Thursday, July 8, 2010

32 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிபோட்டியில் நெதர்லாந்து!


கேப்டவுன்,ஜுலை.8
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியில் 32என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது நெதர்லாந்து. இதன் மூலம் உலககோப்பை அரங்கில் 32 ஆண்டுகளுக்குப் பின் பைனலுக்கு முன்னேறி அசத்தியுள்ளது நெதர்லாந்து அணி. இதற்கு முன் கடந்த 1978 ம் ஆண்டு அர்ஜென்டினாவில் நடந்த உலககோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியிருந்தது நெதர்லாந்து.
உலக கோப்பை கால்பந்து
கேப்டவுனில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் அமெரிக்கா கண்டத்தை சேர்ந்த உருகுவே அணி ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த நெதர்லாந்து அணியை சந்தித்தது. உருகுவே நட்சத்திர வீரர் சாரஸ் கால்யிறுதியில் சிவப்பு அட்டை பெற்றதால் இந்த போட்டியில் விளையாடவில்லை. நெதர்லாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை.
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே நெதர்லாந்து வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அவர்களது தாக்குதல் ஆட்டத்தினால் உருகுவே வீரர்கள் திணறினர்.
அற்புத கோல்
ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் நெதர்லாந்து அணித் தலைவர் பிரான்க்ஹர்ஸ்ட்
உருகுவேயின் டிக்கு வெளியே பெற்ற பந்தை, உருகுவேயின் டிக்குள் நுழைந்து கோலடிக்க முடியாது என்று உணர்ந்து, 30 அடி தூரத்திலிருந்து கோலை நோக்கி பலமாக அடித்தார். இதனை சற்றும் எதிர்பாராத கோலி மஸ்லேரா பாய்ந்து தடுத்திட முயன்றார். பந்து அவருடைய இடது கை விரல்களை உரசிக் கொண்டு சென்று, கோல் கம்பத்தின் உட்பகுதியில் பட்டு கோலிற்குள் புகுந்தது. இந்த உலகக் கோப்பையில் இதுவரை அடிக்கப்பட்டதில் மிகச் சிறந்த கோலாக இதுவே இருக்க முடியும்.இந்த உலக கோப்பையில் பிரான்க்ஹர்ஸ்ட்அடித்த முதல் கோல் இதுதான்.ஆட்டத்தின் 21 வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ராபனை கீழே தள்ளி முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்ட உருகுவே வீரர் பெரைரா "எல்லோ கார்டு' பெற்றார். இதேபோல் ஆட்டத்தின் 28 வது நிமிடத்தில் பந்தை "கிக்' செய்ய முற்பட்ட உருகுவே வீரர், கேசரஸ், நெதர்லாந்து வீரர் டி ஜீவின் முகத்தை பதம் பார்த்தார். இதனையடுத்து இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் தாக்க முற்பட்டனர். நெதர்லாந்தின் ஸ்னைஜ்டர், உருகுவேயின் கேசரஸ் "எல்லோ கார்டு' பெற்றனர்.
பதிலடி கொடுத்த உருகுவே
நெதர்லாந்து அடித்த கோலுக்கு பதில் கோல் அடிக்க உருகுவே போராடியது. ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் நெதர்லாந்து கேப்டன் அடித்த கோலுக்கு பதிலடி கொடுத்தார் உருகுவே கேப்டன் போர்லான். சுமார் 25 அடி தொலைவில் இருந்து போர்லானால் உதைக்கப்பட்ட பந்து நெதர்லாந்து கோல்கீப்பர் ஜபுலானி கைக்குள் சிக்காமல் அழகாக வளைந்து கோலுக்குள் சென்றது.
இந்த உலக கோப்பையில் போர்லான் அடித்த 4வது கோல் இதுவாகும்.இதன் மூலம் முதல் பாதியில் 11 என்று ஆட்டம் சமநிலையில் இருந்தது.
நெதர்லாந்து ஆதிக்கம்
2வது பகுதி ஆட்டத்தில் நெதர்லாந்தின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அவர்கள் தொடர்ந்து முன்னேறி தாக்குதலில் ஈடுபட்டனர்.ஆட்ட்த்தின் 70வது நிமிடத்தில் உருகுவே தடுப்பாட்டக்காரர் பெரேராவின் தொடையில் பட்டு வந்த பந்தை வந்த வேகத்தில் கோலை நோக்கி அடித்தார் ஸ்னைடர்.
5வது கோல்
கோலி மஸ்லேராவிற்கு முன்னால் இருந்த நெதர்லாந்து வீரரால் மறைக்கப்பட பந்து கோலிற்குள் புகுந்தது.இதற்கு நடுவர் ஆஃப் சைட் கோல் என்று தீர்ப்பு கொடுத்திருக்க வேண்டும்.ஆனால் அப்படி கொடுக்கவில்லை.இந்த உலககோப்பை போட்டியில் சினைடர் அடித்த 5வது கோல் இதுவாகும்.இந்த கோல் மூலம் நெதர்லாந்து 21 என்ற கணக் கில் முன்னிலை பெற்றது. இதனையடுத்து 73 வது நிமிடத்தில் தலையால் முட்டி ராபன் ஒரு கோலடிக்க, நெதர்லாந்து அணி, வெற்றியை நோக்கி முன்னேறியது
அந்த அணியின் மற்றொரு முன்னனி வீரரான ரோபன் இந்த கோலை அடித்தார். இது அவருக்கு 2வது கோல் ஆகும். இதன் மூலம் நெதர்லாந்து 31 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து அடிக்கப்பட்ட இரு கோல்களால் உருகுவே வீரர்கள் நிலைகுலைந்து போனார்கள். ஆனாலும் போராட்டத்தை கைவிடவில்லை.
கடைசிகட்ட பரபரப்பு
ஆட்டம் முடியும் தருவாயில் டிக்கு வெளியே கிடைத்த ஒரு பௌல் வாய்ப்பை பயன்படுத்தி பந்தைப் பெற்ற பெரேரா, அதனை அப்படியே கோலை நோக்கித் அடித்தார். அந்த பந்தினை நெதர்லாந்து கோலி ஜபுலானி வேடிக்கை பார்க்க பந்து கோலிற்குள் சென்றது.
அதிர்ந்து போன நெதர்லாந்து அச்சுறுத்தலை உணர்ந்தது. 32 என்ற கோல் நிலை, பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்து தீவிர தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. மேற்கொண்டு கோல் அடிக்க உருகுவே அணிக்கு நேரம் இல்லை. இதனால் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்ட நேரயிறுதியில் 32 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

No comments:

Post a Comment