Tuesday, July 6, 2010

சேவாக்கின் ரசிகன் நான் ஹெய்ன்ஸ்


துபார், ஜுலை.6
இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக்கின் ரசிகன் நானென்று மேற்கிந்திய அணியின் முன்னாள் வீரர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் கூறியுள்ளார்.
இது குறித்து துபாயில் செய்தியாளர்களிடம் ஹெய்ன்ஸ் கூறியபோது:
நான் சேவாக் விசிறி, அவர் பேட்டிங் செய்வதை எப்படியாவது பார்த்து விடுவேன்.
இப்போது சேவாக்கிற்கு பந்து வீச்சாளர்கள் அவரது உடலுக்கு பந்து வீசத் துவங்கியுள்ளனர். அதனால் அவர் தன் உடலிலிருந்து ஷாட்களை ஆடத் துவங்கவேண்டும்.
அதே போல் யுவ்ராஜ் சிங் பேட்டிங்கையும் பாராட்டிய ஹெய்ன்ஸ் அவர் விரைவில் இந்திய அணிக்குத் திரும்பவேண்டும் என்றார்.இந்தியாவின் சுனில் கவாஸ்கர்தான் இதுவரை விளையாடிய துவக்க வீரர்களில் சிறந்தவர், அதே போல் நியூஸீலாந்தின் ரிச்சர்ட் ஹேட்லி மிகச்சிறந்த வீச்சாளர் என்றார். ஹேட்லி பற்றி குறிப்பிடுகையில், "மணிக்கு 100 மைல்கள் வீசும் பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆனால் இவர்கள் தங்களது அனைத்துப் பந்துகளையும் நாம் விளையாடுமாறு வீச மாட்டார்கள், ஆனால் ரிச்சர்ட் ஹேட்லி எப்பவும் உங்கள் விக்கெட் குறித்த பயத்தை எழுப்பிக் கொண்டேயிருப்பார்."

No comments:

Post a Comment