பர்மிங்ஹாம்,ஜுலை.8
அஸ்திரேலியாபாகிஸ்தானிடையேயான 2வது 20ஒவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்ட்ரேலியாவை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 20 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்.முதலில் போட்டிங் செய்ய ஆரம்பித்த பாக் அணியனர் சரியாக விளையாடவில்லையென்றாலும் கடைசி கட்டத்தில் உமர் அக்மலும், அஃப்ரீடியும் இணைந்து 3 ஓவர்களில் 30 ரன்கள் சேர்த்தனர். அக்மல் 25 ரன்களுக்கும் அஃப்ரீடி 18 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
கடைசியில் மொகமட் ஆமீர் 1 பவுண்டரி 2 சிக்சர் சகிதம் 21 ரன்களை விளாசினார். இவர்களின் உதவியுடன் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
இதன் பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்கமும் சிறப்பாக விளையாடவில்லை.டேவிட் வார்னரை முதலில் கழற்றினார் ஆமீர். அதன் பிறகு மைக்கேல் கிளார்க் 6 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் விளாசி ஆமீர் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தக் கொண்டாட்டத்தில் ஆமீர் மைக்கேல் கிளார்க் மீது மோதிக் கொண்டார்.
ஜேம்ஸ் ஹோப்ஸ் (30), டேவிட் ஹஸ்சி (33) ஆகியோர் அச்சுறுத்தலாகத் திகழ்ந்தனர். ஆனால் இருவரையும் முறையே சயீத் அஜ்மலும், அஃப்ரீடியும் வீழ்த்தினர்.
கடைசியில் 18 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற நிலையில் மைக் ஹஸ்ஸி, உமர் குல் வீசிய இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அதன் பிறகு அவரே வீழ்த்தினார். 14 பந்துகளில் 25 ரன்களுக்கு மைக் ஹஸ்சி அவுட்.
3 விக்கெட்டுகளைக் கைப்ப்ற்றியதோடு 21 ரன்களையும் அடித்த மொகமட் ஆமீர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த வாரம் லார்ட்சில் தொடங்குகிறது.கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து எதிராக அனைத்து கிரிக்கெட்டிலும் போட்டிகளாக தோற்ற வந்த பாகிஸ்தான் இந்த வெற்றியின் மூலம் பழி தீர்த்துக் கொணடது.
No comments:
Post a Comment