ஜோகன்ஸ்பர்க், ஜூலை.6
தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 19வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.இந்த போட்டியில் உலக தர வரிசையில் 4வது இடத்திலுள்ள நெதர்லாந்து அணியும் , உலகத் தர வரிசையில் 16வது இடத்திலுள்ள உருகுவே அணியும் மோதுகின்றன .தென் அமெரிக்க நாடான உருகுவே ஏற்கனவே 2 முறை உலக கோப்பையை பெற்றுள்ளது. நெதர்லாந்து இதுவரை உலக கோப்பையை வென்றது இல்லை.ஆனாலும் தற்போதைய நிலையில் நெதர்லாந்து அணிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.இது குறித்து கருத்து தெரிவித்த நெதர்லாந்து பயிற்சியாளர் பெர்ட்வான் மார்விஜிக்:
காலிறுதியில் பிரேசில் அணியை தோற்கடித்ததற்கு எங்கள் அணியின் கூட்டு முயற்சியே காரணம் . 2 ஆண்டுகளாக நாங்கள் உழைத்ததற்கு நல்ல பலன் கிடைத்தது. வீரர்கள் அனைவருமே கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக ஆடினார்கள்.
அரையிறுதி போட்டியில் நாங்கள் சந்திக்க உள்ள உருகுவே அணியை குறைத்து மதிப்பிடவில்லை. அவர்கள் அரையிறுதி வரை வருவார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. எனவே நாங்கள் மிக எச்சரிக்கையாக இருக்கிறோம். உருகுவே அணியை பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். முக்கிய வீரர்களை கணித்து வைத்துள்ளோம். கடந்த 2 ஆண்டுகளில் எங்கள் அணி மிக சிறப்பாக ஆடி வருகிறது. முன்னாள் சாம்பியன்களான பிரான்சு, இத்தாலி அணிகளை ஏற்கனவே வீழ்த்தி இருக்கிறோம். ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து அணிகளும் எங்களிடம் வீழ்ந்து உள்ளன.
எனவே உருகுவே அணியை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு நுழைவோம் என்று கூறினார்.
No comments:
Post a Comment