Saturday, July 10, 2010

வெல்லப்போவது யார் ஆக்டோபஸா-கிளியா?



பெர்லின்,ஜுலை.10
உலக கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி அணியின் முடிவுகளை மிகச் சரியாக கணித்து வந்த கடல்வாழ் உயிரினமானஆக்டோபஸ் பால் அரையிறுதி ஆட்டத்தின் முடிவில் ஜெர்மனி நாட்டு ரசிகர்களின் கோபத்துக்குள்ளாகியது.ஏனெனில் அது ஸ்பெயின் அணியுடனான அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி தோற்குமென கூறியது.இந்நிலையில் இறுதி ஆட்டத்தின் போது ஸ்பெயின் அணி தான் ஜெயிக்கும் என்று கூறி ஸ்பெயின் நாட்டு ரசிகர்களின் செல்லபிள்ளையாகிவிட்டது. ஆக்டோபஸ் பால், ஸ்பெயினே வெல்லும் என கணித்ததால் ஸ்பெயின் முழுவதும் பெரும் உற்சாகம் கரைபுரண்டோடுகிறது. 2 வயதான இந்த ஆக்டோபஸ் பால், ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து நாட்டுக் கொடிகள் அடங்கிய உணவுத் தொட்டிக்கு அருகே விடப்பட்டது. அப்போது சரியாக ஸ்பெயின் கொடி அடங்கிய தொட்டியை அது அழகாக பற்றிக் கொண்டது. 3 நிமிடத்தில் அது ஸ்பெயின் கொடி அடங்கிய தொட்டியைப் பிடித்தது.
இதுகுறித்து ஆக்டோபஸ் வைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்தின் செய்தித் தொடர்பாளர் தஞ்சா முன்ஜிக் கூறுகையில், பால் தெளிவாக கணித்துள்ளது. ஸ்பெயினே இந்தப் போட்டியில் வெற்றி பெறும் என்றார்.
மேலும் அதி விரைவாக அது ஸ்பெயின் கொடி அடங்கிய தொட்டி மீது அமர்ந்தது வியப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
சில நேரங்களில் பால், 70 நிமிடம் வரை கூட எடுத்துக் கொள்ளுமாம். ஆனால் ஸ்பெயினை தேர்ந்தெடுக்க 3 நிமிடமே ஆனது வியப்பாக உள்ளது. நிச்சயம் ஸ்பெயின்தான் வெல்லும் என்று அவர் தெரிவித்தார்.
ஒரு விலங்கின் கணிப்பை நேரடியாக டிவிகளில் ஒளிபரப்பு செய்தது இதுவே உலகில் முதல் முறை என்று கூறப்படுகிறது.
3வது இடத்தை ஜெர்மனி தான் பிடிக்குமென்று
ஆக்டோபஸ் பாலின் கணித்துள்ளது
எல்லாம் சரி, பால் சொல்லி விட்டதே என்று ஸ்பெயின் வீரர்கள் 'ஜாலியாக' ஆடினால் அவர்களது கோப்பைக் கனவுக்கு பால் ஊற்ற வேண்டியதுதான்.இந்த நிலையில் சிங்கப்பூரில் ஒரு கிளி ஜோசியர், இறுதிப் போட்டியில் நெதர்லாந்தே வெல்லும் என தனது கிளி மூலம் ஆரூடம் கூறியுள்ளார்.
தற்போது உலகக் கோப்பை சீசன் என்பதால், இறுதிப் போட்டியில் யார் வென்று கோப்பையை தட்டிச்செல்வார்கள் என்பதை தனது கிளி மூலம் ஆரூடம் கூறியுள்ளார் முனியப்பன். அதன்படி இறுதிப் போட்டியில் நுழைந்துள்ள நெதர்லாந்து, ஸ்பெயின் நாடுகளின் கொடி பதிக்கப்பட்ட சீட்டுக்களை கிளியிடம் கொடுத்தார்.
அப்போது மணி, நெதர்லாந்து கொடி பதித்த அட்டையை எடுத்துக் கொடுத்து கீ கீ என்று கத்தியது. இதையடுத்து நெதர்லாந்துதான் வெல்லும் என கிளி கூறுவதாக தெரிவித்தார் முனியப்பன்.

No comments:

Post a Comment