Saturday, July 10, 2010

நெதர்லாந்தும் ஸ்பெயினும் எனக்கு இரு கண்கள்பிரேசில் ஜாம்பவான்

ஜோகனஸ்பர்க், ஜுலை.10
நெதர்லாந்தும் ஸ்பெயினும் எனக்கு இரு கண்கள் இதனால் யாருக்கு ஆதரவளிப்பது என்பதில் நான் குழப்பமடைந்து உள்ளேன் என்று பிரேசில் முன்னாள் ஜாம்பவான் ரொமாரியோ கூறியுள்ளார்.
பிரேசில் ஜாம்பவான் ரொமாரியோ நெதர்லாந்தின் பி.எஸ்.வி.என்டோ வன் அணிக்காக 5 வருடங்கள் ஆடியுள்ளார். அதன்பின்னர் ஸ்பெயினுக்கு இடம் பெயர்ந்த அவர் பார்சிலோனாவில் இணைந்தார். அப்போது பார்சிலோனாவின் பயிற்சியாளராக இருந்தவர் நெதர்லாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோகன் கிரைப். பார்சிலோனாவை தொடர்ந்து வாலன்சியாவில் இணைந்த ரொமாரியோ 1994ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலக கோப்பையில் பிரேசில் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்.இந்த உலக கோப்பை இறுதி ஆட்டத்தில், அவர் 10 வருடங்களுக்கு மேல் வாழ்ந்த நெதர்லாந்தும் ஸ்பெயினும் மோதுகின்றன. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு அவர் பதிலளித்த போது, ''இரு அணிகளுமே எனக்கு இரு கண்கள் போன்றவை சமபலம் வாய்ந்தவை.யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்க முடியாது.எனக்கு யாருக்கு சப்போர்ட் செய்யவென்று குழப்பமான மனநிலை உள்ளது. யார் வென்றாலும் என் தாய்நாடு பிரேசில் வென்றது போல்தான் மகிழ்ச்சியடைவேன்.அடுத்த உலக கோப்பை பிரேசிலில் நடக்கிறது. அதில் பிரேசில் நிச்சயம் கோப்பையை வெல்லும் என்றும் நம்பிக்கை'' தெரிவித்தார்.

No comments:

Post a Comment