Thursday, July 8, 2010

பயிற்சியாளராக மாரடோனா தொடருவார் அர்ஜென்டினா கால்பந்து சங்கத் தலைவர்


ஜோகனஸ்பர்க், ஜுலை.8
மாரடோனா பயிற்சியாளராக தொடருவார் என்று அர்ஜென்டினா கால்பந்து சங்கத் தலைவர் ஜுலியோ ஹம்பர்டோ கிராடனோ கூறியுள்ளார்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா படுதோல்வியுற்றது. இதற்கு பின் மாரடோ னா பயிற்சியாளராக தொடருவாரா? மாட்டாரா? அல்லது நீக்கப்படுவாரா? அவராக நீங்குவாரா? என்று பல குழப்பங்கள்.
இதற்கிடையே அர்ஜென்டினா திரும்பியதும் மாரடோ னா அளித்த பேட்டியில், எனது நேரம் முடிந்து விட்டது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மாரடோ னாவை பதவி விலக் சொல்லி எந்த நிர்பந்தமும் செய்யவில்லை, அர்ஜென்டினாவில் கால்பந்து வளர்ச்சிக்காக 30 வருடங்களுக்கு மேல் அவர் உழைத்திருக்கிறார். மாரடோ னா ஒரு ஜாம்பவான். இன்னமும் அவர் ஒப்பந்தத்தில் இருக்கிறார். மாரடோனா எடுக்கும் முடிவை அர்ஜென்டினா கால்பந்து சங்கம் ஏற்கும். மாரடோ னா மட்டுமே அர்ஜென்டினாவில் அவர் நினைத்ததை செய்ய முடியும் என்று சொல்லப்படும் அளவுக்கு செல்வாக்குள்ள மனிதர்'' என்று அதன் தலைவர் ஜுலியோ ஹம்பர்டோ கிராடனோ கூறியுள்ளார்

No comments:

Post a Comment