Sunday, July 11, 2010

முதன் முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் ஸ்பெயின்நெதர்லாந்து இன்று இறுதி போட்டி


ஜோகன்னஸ்பர்க், ஜூலை. 11
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு ஜோகன்னஸ்பர்க் சாக்கர்சிட்டி மைதானத்தில் நடக்கிறது.இதில் முதன் முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் ஐரோப்பிய கண்டத்திலுள்ள ஸ்பெயின்நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இரு அணிகளுமே முன்னணி நாடுகளை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு நுழைந்துள்ளன.ஸ்பெயின், நெதர்லாந்து அணிகளில் உலகின் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். இரு அணிகளுமே முதல் முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளன.
ஐரோப்பிய கோப்பையை1964, 2001 ம் ஆண்டுகளில் வென்ற ஸ்பெயின் அணியில் ஷவி ஹொனாண்டஸ் டொரஸ், பெட்ரோ, இனெஸ்டா, ஷபி அலோன்சா செர்ஜியோ ரமோஸ் போன்ற உலகின் சிறந்த வீரர்கள் உள்ளனர்.
கேப்டனும், கோல் கீப்பரு மான இகேர் கேசிலாஸ் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளார். அவர் உலகின் தலைசிறந்த கோல்கீப்பர் ஆவார். ஜெர்மனி அணிக்கு எதிரான அரைஇறுதியில் கோல் வாய்ப்பை 2 முறை தடுத்தார்.
இதேபோல் ஐரோப்பிய கோப்பையை 1988ம் ஆண்டு வென்ற நெதர்லாந்து தோல்வி எதையும் சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு நுழைந்து உள்ளது.
அந்த அணியில் ரோபன், டிர்க்கியூட், ராபின் வான்பெர்சி, கேப்டன் ஜிலோனி வானபிரோன் ஹோஸ்ட், மார்க் வான பொம்மல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
32 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டியில் நுழைந்துள்ள நெதர்லாந்து இந்த முறை கோப்பையை நழுவவிட்டு விடக்கூடாது என்ற நோக்கில் உள்ளது.ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணியும் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்திலுள்ளது.
ஸ்பெயின் அணி நடுகளத்திலும், பின் களத்திலும் வலுவாக உள்ளது. நெதர்லாந்து அணி முன்களத்திலும், நடுகளத்திலும் பலமாக உள்ளது. இரு அணிகளுமே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடும் என்று கருதப்படுகிது.
இந்திய நேரப்படி நள் ளிரவு 12 மணிக்கு இறுதிப் போட்டி நடக்கிறது.
கோல்டன் ஷ
டேவிட் வில்லா வும் (ஸ்பெயின்), வெஸ்லி ஸ்னைடரும் (நெதர்லாந்து)இருவரும் தலா 5 கோல்கள் அடித்து முன்னிலையில் உள்ளனர். இன்றைய போட்டியில் கோலடித்து தங்க ஷûவைப் பெறுவதில் இருவரும் முனைப்புடன் உள்ளனர்.
உலக கோப்பை சுவாரஸ்ய தகவல்கள்
1.ஸ்பெயின்,நெதர்லாந்து இந்த இரண்டில் எந்த அணி வெற்றி பெற்றாலும் தங்கள் கண்டத்துக்கு வெளியே நடந்த உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற 2வது அணி என்ற பெருமையை பெறும். இதற்கு முன் சுவீடனில் 1954ம் ஆண்டு போட்டியிலும் 1994ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த போட்டியிலும் பிரேசில் கோப்பையை வென்றுள்ளது. தங்கள் கண்டத்துக்கு வெளியே கோப்பையை வென்ற ஒரே அணி பிரேசில் மட்டுமே.
2.இந்த உலக கோப்பை போட்டியில் நெதர்லாந்து தோல்வி கண்டால் இறுதி போட்டிக்கு 3 முறை தகுதி பெற்றும் கோப்பையை வெல்லாத நாடு என்ற பட்டம் கிடைக்கும்.இதற்கு முன் யூகோஸ்லோவாகியா,ஹங்கேரி அணிகளும் இரு முறை உலக கோப்பை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றும் கோப்பையை வென்றது இல்லை.
3.ஸ்பெயின் அணி கோப்பையை வென்றால், உலக கோப்பை இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்த முதல் போட்டியிலேயே கோப்பையை வென்ற 6வது நாடு என்ற பெருமையும் அதற்கு கிடைக்கும்.இதற்கு முன் பிரான்ஸ், இத்தாலி,ஜெர்மனி,இங்கிலாந்து,உருகுவே அணிகள் முதல் இறுதி ஆட்டத்திலேயே உலக கோப்பையை கைப்பற்றியுள்ளன.
4. உலக கோப்பை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற 12வது அணி என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றுள்ளது.
5.இறுதி ஆட்டத்தில் ஐரோப்பிய அணிகள் மட்டுமே மோதுவது இது 8வது முறை ஆகும்.ஐரோப்பா கண்டத்துக்கு வெளியே இது நடப்பது முதல்முறை ஆகும்.
6. இருமுறை தொடர்ந்து உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடி கோப்பையை வெல்லாத அணிகள் பட்டியலில் 'டடீட்டல் புட்பால்' என்றழைக்கப்படும் நெதர்லாந்து அணியே முதலிடத்தில் உள்ளது. 1974 மற்றும் 1978ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டங்களில் நெதர்லாந்து தோல்வி கண்டுள்ளது.அதேபோல் மேற்கு ஜெர்மனியும் 1982 மற்றும் 1986ம் ஆண்டுகளில் இறுதி போட்டிக்கு முன்னேறி இரு முறையும் கோட்டை விட்டுள்ளது.

No comments:

Post a Comment