
நியூபோர்ட், ஜுலை.9
ஹால் ஆப் பேம்' டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் ஒற்றையர் 2வது சுற்றுக்கு, இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் முன்னேறினார்.
அமெரிக்காவின் நியூபோர்ட் நகரில், "ஹால் ஆப் பேம்' டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், அமெரிக்காவின் கெவின் கிம்மை சந்தித்தார்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சோம்தேவ் 64, 63 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாவது சுற்றில் சோம்தேவ், மார்டி பிஷ் (அமெரிக்கா) விளையாடுகின்றனர்.
No comments:
Post a Comment