Saturday, July 10, 2010

இறுதி போட்டியை காண தென்னாப்பிரிக்கா செல்லும் நடால்

ஜோகனஸ்பர்க், ஜுலை.10
உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தை காண விம்பிள்டன் சாம்பியன் ரபேல் நடால் தென்னாப்பிரிக்கா செல்கிறார்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாளை இறுதி ஆட்டம் ஜோகன்ஸ்பர்க்கிலுள்ள சாக்கர்சிட்டியில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியை காண ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால் தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு நடால் விம்பிள்டன் பட்டத்தை முதல்முறையாக கைப்பற்றினார். அப்போது ஸ்பெயின் 2008ம் ஆண்டு ஐரோப்பிய கோப்பையை வென்றது. இரு வருடங்கள் கழித்து இப்போது விம்பிள்டனில் இரண்டாவது முறையாக நடால் சாம்பியன் ஆகியுள்ளார். இதனால் இந்த உலக கோப்பையையும் ஸ்பெயின் வெல்லும் என்று ஸ்பெயின் மக்கள் நம்புகின்றனர்.
தென்னாப்பிரிக்கா செல்வது குறித்து நடால் தனது இணையதளத்தில் கூறியுள்ளதாவது, எனக்கு ஸ்பெயின் அணியில் ஏராளமான நண்பர்கள் உள்ளனர். எனது நண்பர்கள் உலக கோப்பையை வெல்லும் சமயத்தில் நான் அங்கே இருக்க வேண்டுமென்று எனது நண்பர்கள் விரும்புகிறார்கள்'' என்று கூறியுள்ளார். 24 வயது நடால் ரியல் மாட்ரிட்டின் தீவிர ரசிகர் ஆவார்.

No comments:

Post a Comment