
போர்ட்எலிசபெத், ஜூலை 12
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3வது இடத்திற்கு நடந்த போட்டியில், உருகுவே அணியை 32 கோல் கணக்கில் வென்று ஜெர்மனி அணி 3வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றியது. மூன்றாவது இடம்
அரையிறுதி போட்டியில் நெதர்லாந்திடம் 32 என்ற கோல் கணக்கில் உருகுவே தோல்வி கண்டிருந்தது.ஜெர்மனி ஸ்பெயினிடம் 10 என்ற கோல் கணக்கில் வெற்றியை கோட்டை விட்டது. எனவே 3வது இடத்தையாவது தக்க வைத்துக் கொள்ள இந்த இரு அணி வீரர்களும் கடும் போராட்டம் நடத்தவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜெர்மனியின் மிராஸ்லாவ் குளோஸ் முதுகு வலி காரணமாக ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் உலக கோப்பை வரலாற்றில் ரொனால்டோ அடித்துள்ள 15 கோல்கள் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. அது போல் புளு காய்ச்சலால் அவதிப்பட்ட ஜெர்மனி கேப்டன் பிலிப் லாம், புடோ ஸ்கி ஆகியோரும் இந்த போட்டியில் களம் இறங்கவில்லை. அரையிறுதி போட்டியில் தடை காரணமாக கரையில் இருந்த தமாஸ் முல்லர் உருகுவேக்கு எதிராக களமிறங்கினார்.அதுபோல் கானா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை கையால் தொட்டதால் அரையிறுதியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த உருகுவே வீரர் சாரசும் இந்த ஆட்டத்தில் விளையாடினார்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் அரையிறுதி போட்டியில் தோல்வியுற்ற ஜெர்மனி, உருகுவே அணிகள் 3வது இடத்தை பிடிக்க போர்ட் எலிசபெத்தில் மோதின.
ஜெர்மனி ஆதிக்கம்
போட்டி தொடங்கியதில் இருந்தே ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் இந்த அணியின் ஓசில் அடித்த பந்து இலக்கு தவறி பறந்தது. பின்னர் 19வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் தாமஸ் முல்லர் முதல் கோல் அடித்தார்.கேப்டன் ஸ்கிவன்ஸ்டீகர் அடித்த பந்தை உருகுவே கோல்கீப்பர் முஸ்லேரா பிடித்து வெளியே தள்ளினார். அதனை சாமர்த்தியமாக அப்படியே கோல்போஸ்டுக்குள் அடித்தார் முல்லர். இது இத்தொடரில் இவர் அடிக்கும் 5வது கோல். இதன் மூலம் ஜெர்மனி 10 என முன்னிலை பெற்றது.
உருகுவே பதிலடி
ஜெர்மனி அடித்த கோலுக்கு அடுத்த 10 நிமிடத்திற்கு உருகுவே பதிலடி கொடுத்தது. ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் உருகுவே வீரர் கவானி கோல் அடித்தார். முதல் பாதியில் இரு அணிகளும் 11 என்று சமநிலையிலிருந்தது. பிற்பாதி ஆட்டத்தில் உருகுவே வீரர்கள் தொடர்ந்து ஜெர்மனி கோல்கம்பத்தை முற்றுகையிட்டனர். இதற்கு பலன் 51வது நிமிடத்தில் கிடைத்தது. ஆர்வாலோ கிராஸ் செய்த பந்தை 'வாலிஷார்ட்' அடித்து கோலுக்குள் அடித்தார் போர்லன். இதனால் உருகுவே 21 என்று முன்னிலை பெற்றது. இந்த உலக கோப்பையில் போர்லான் அடிக்கும் 5வது கோல் இது.
மீண்டும் சமநிலை
இரண்டாவது கோல் அடிக்கப்பட்டதால் ஜெர்மனி வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.அதனால் அவர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 56வது நிமிடத்தில் ஜெர்மனியும் இரண்டாவது கோலை அடித்தது. ஜெரோம் போடங் கிராஸ் செய்த பந்தை தலையால் முட்டி ஜென்சன் இந்த கோலை அடித்தார். இதனால் ஆட்டம் மீண்டும் 22 என்று டிரா ஆனது. எனவே போட்டி மீண்டும் பரபரப்படைந்தது. வெற்றி பெற இரு அணி வீரர்களும் கடுமையாக உழைத்தார்கள்.
அதன் பிறகு நீண்ட நேரம் யாரும் கோல் போடா மல் ஆட்டம் நீடித்து கொண்டிருந்தது. இதனால் யார் வெற்றி பெறுவார் என்று கூற முடியாத அளவுக்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது.
கார்னர் கிக்கால் வெற்றி
இந்நிலையில் 82வது நிமிடத்தில் "கார்னர் கிக்' வாய்ப்பில் ஓசில் பந்தை அடித்தார். இதனை உருகுவே தற்காப்பு பகுதி வீரர்கள் முறையாக தடுக்க தவறினர். இந்த நேரத்தில் பந்தை அப்படியே தலையால் முட்டி ஜெர்மனியின் கதிரா ஒரு கோல் அடித்து அசத்தினார். கடைசி கட்டத்தில் உருகுவே வீரர் போர்லான் அடித்த பந்து "பாரில்' பட்டுச் செல்ல வெற்றி கனவு தகர்ந்தது. இறுதியில் ஜெர்மனி அணி 32 என்ற கோல் கணக்கில் வென்று, மூன்றாவது இடத்துக்கான வெண்கலப் பதக்கத்தை பெற்றது.
ஜெர்மனி வீரர் தாமஸ் முல்லர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.உலக கோப்பை வரலாற்றில் 4வது முறையாக ஜெர்மனி 3வது இடத்தை பிடித்துள்ளது.கடந்த உலக கோப்பையிலும் ஜெர்மனிக்கு 3வது இடமே கிடைத்தது.
மஞ்சள் அட்டை
இந்த ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்கள் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 3 தடவை ஜெர்மனி வீரர்களுக்கு மஞ்சள் கார்டு காட்டப்பட்டது. உருகுவே வீரர் ஒருவர் மட்டும் மஞ்சள் கார்டு பெற்றார்.
ஆட்டத்தில் 52 சதவீத நேர பந்து ஜெர்மனி பக்கமே இருந்தது. ஜெர்மனிக்கு 12 தடவை கார்னர்கிக் வாய்ப்புகளும் உருகுவேக்கு 6 தடவை கார்னர்கிக் வாய்ப்புகள் கிடைத்தன.
ஏமாற்றாத ஆக்டோபஸ்
பால் ஆக்டோபஸ் கணித்தது போலவே இந்தமுறையும் ஜெர்மனி வெற்றி பெற்றுள்ளது.ஆக்டோபஸ் கூறியது போலவே ஜெர்மனி அணி மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் ஆக்டோபஸ் கணிப்புக்கு ஏற்றவாறு தான் ஜெர்மனிஅணி பெற்றுள்ளது.
ஏமாற்றிய குளோஸ்
பிரேசில் வீரர் ரொனால்டோ உலகக் கோப்பை போட்டிகளில் அடித்த 15 கோல்கள் தான் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச கோலாகும்.இச்சாதனையை இந்த தொடரில் 14 கோல்கள் அடித்துள்ள ஜெர்மனி வீரர் குளோஸ் சமன் செய்வார் அல்லது முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக அவர் விளையாடமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.
No comments:
Post a Comment