Tuesday, July 6, 2010

விம்பிள்டன் டென்னிஸ் பட்டம் வென்றது பயஸ் ஜோடி


லண்டன், ஜூலை. 6
விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியில் இந்திய வீரர் லியாண்டர் பெயஸ் ஜிம்பாப்வே வீராங்கனை காராபிளாக் ஜோடி தென்னாப்பிரிக்காவின் வெஸ்லே ரூடிலிசா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி, ஜிம்பாப்வேயின் வெஸ்லே மூடி, அமெரிக்காவின் லிசா ரேமண்ட் ஜோடியை சந்தித்தது.
இந்த போட்டியின் முதல் செட்டை 64 என, பயஸ் ஜோடி கைப்பற்றியது. ஆனால் இரண்டாவது செட்டில் வெற்றி பெற கடும் போட்டியை சந்திக்க நேர்ந்தது . "டை பிரேக்கர்' வரை நீடித்த இந்த செட்டை பயஸ் ஜோடி 76 என்ற கணக்கில் வென்றது. இறுதியில் பயஸ், பிளாக் ஜோடி 64, 76 என்ற நேர்செட்களில் வெற்றிபெற்ற கோப்பை கைப்பற்றியது.
மகேஸ் சாதனையை முறியடித்த பயஸ்
இது விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ் பெறும் மூன்றாவது பட்டம்.இதன் மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம்(12) வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை பயஸ் படைத்தார். ஆண்கள் இரட்டையரில் 6, கலப்பு இரட்டையரில் 6 என, மொத்தம் 12 பட்டம் வென்று, இந்திய வீரர்களில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற புதிய சாதனையை பயஸ் படைத்தார். இவர், மற்றொரு இந்திய வீரரான மகேஷ் பூபதி சாதனையை(11 கிராண்ட்ஸ்லாம் பட்டம்) முறியடித்தார்.

No comments:

Post a Comment