Tuesday, July 6, 2010

காகவுக்கு உடல் தகுதியில்லை



பிரேசிலியா, ஜூலை. 6
உலக கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்றிலிருந்து வெளியேறிய பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் காகா உடல் தகுதி இல்லாமலேயே அணியில் சேர்க்கப்பட்டு இருந்ததாக பிரேசில் அணியின் டாக்டர் ஜோஸ் லூயிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.இந்த உலக கோப்பையில் காகவினுடைய ஆட்டம் சரியில்லாதது கூட காலியிறுதியில் பிரேசில் அணி தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது.ரியல் மாட்ரிட் கிளப் அணியில் இடம் பெற்று இருந்த அவர் அதிலும் ஆடாமல் 6 வாரம் வரை விலகியே இருந்தார். அதன் பிறகு விளையாட வந்த அவர் காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறேன் என்று கூறியிருந்தார்.
இது குறித்து ஜோஸ் லூயிஸ் கூறியபோது :
நட்சத்திர வீரர் காகா உலக கோப்பை போட்டிக்கு முன்பு போதுமான பயிற்சி பெறவில்லை. எனவே அவர் உடல் தகுதி இல்லாமல்தான் இருந்தார். இருந்தும் அணியில் சேர்க்கப்பட்டார் .காயத்துக்கு பிறகு தேவையான அளவுக்கு போட்டிகளில் பங்கேற்கவில்லை.
அவர் சிறந்த வீரர் என்பதற்காக மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டார் என்று கூறினார்.

No comments:

Post a Comment