
டேராடூன், ஜூலை 5
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கும் அவரது நீண்ட கால பள்ளித் தோழியான சாக்ஷி ராவத்துக்கும் டேராடூனில் உள்ள ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. டோனியையும் பிரபல நடிகைகளையும் இணைத்து பல தகவல்கள் முன்பு வெளியாகி இருந்தது. இதனால் நடிகை யாரையாவது தான் டோனி திருமணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் டோனிக்கு நேற்றுமுன்தினம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பள்ளிக்கூட தோழியான சாக்ஷி சிங் ராவத்துடன் ஜார்க்கண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஓட்டலில் இந்த நிச்சயதார்த்தம் நடந்தது. சாக்ஷியும், டோனியும் ராஞ்சியில் ஒன்றாக ஒரே பள்ளியில் படித்தவர்கள். பள்ளி காலத்தில் இருந்தே இருவரும் நண்பர்கள். டோனி மற்றும் சாக்ஷி ஆகியோரின் தந்தைகள் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். சாக்ஷியின் தந்தை ஓய்வு பெற்ற பின் அவர்களது குடும்பம் டேராடூனுக்கு இடம்பெயர்ந்து விட்டனர் எனபது குறிப்பிடத்தக்கது .
மாலை 6.30 மணிக்கு நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் டோனியும், சாக்ஷியும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். கிரிக்கெட் வீரர்கள் ஆசிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங் மற்றும் அவருக்கு நெருங்கிய உறவினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment