Saturday, July 10, 2010

காயத்திலிருந்து மீண்டார் போல்ட்


ஜமைக்கா,ஜுலை.10
உலகின் அதிவேக மன்னனும், 100 மீ. உலக சாதனை நாயகனுமான ஜமைக்காவின் உசைன் போல்ட், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டயமண்ட் லீக் ஓட்டத்தில் 100மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.
காயம் அடைந்திருந்த உசைன் போல்ட், நேற்றுமுன்தினம் நீண்ட இடைவெளிக்குப்பிறகு இந்த பந்தயத்தில் ஓடினார்.
இவருடன் ஓடிய மற்ற 7 வீரர்களும் நெருங்க முடியாத இடைவெளியில் ஓடிய உசைன் போல்ட் 9.82 வினாடிகளில் இலக்கை எட்டினார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகான இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது என்றார் உசைன் போல்ட்.

No comments:

Post a Comment