Saturday, July 10, 2010

தென்னாப்பிரிக்கவிலுள்ள மைதானங்கள் சிறப்பானவை 'பிபா' தலைவர்


ஜோகனஸ்பர்க், ஜுலை.10
ஐரோப்பாவில் உள்ள மைதானங்களை காட்டிலும் தென்னாப்பிரிக்க மைதானங்கள் சிறப்பானவை என்று 'பிபா' தலைவர் செப் பிளேட்டர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
உலக கோப்பை போட்டிக்காக தென்னாப்பிரிக்கா உருவாக்கிய மைதானங்களின் கட்டுமானம் பிரமிப்பாக இருக்கிறது. மைதானத்தின் எந்த பகுதியில் இருந்து போட்டியை ரசித்தாலும் மைதானத்தின் அனைத்து பகுதிகளையும் பார்க்க முடியும் என்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் கூட இதுபோன்ற மைதானங்களை கொண்ட நாடுகள் கிடையாது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் 10 மைதானங்கள் உள்ளன. இந்த உலக கோப்பை வெற்றி பெற்றதற்கு மைதானங்களும் ஒரு வகை காரணம்.
உலக கோப்பை இறுதி ஆட்டத்தை காண நெல்சன் மண்டேலா வருவார்.ஆனால் இறுதி வரை இருந்து போட்டியை ரசிப்பாரா? என்று என்னால் உறுதி சொல்ல முடியாது. வெற்றி பெறும் அணிக்கு அவரது கையால் உலக கோப்பையை வழங்கும் ஆசை எனக்குள்ளது.
மேலும் ''இந்த உலக கோப்பை போட்டியில், மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டை பெறும் வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இதனால் வீரர்கள், எதிர் அணி வீரர்களை மதிக்க கற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment