சென்னை,ஜுலை.9
டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் இன்று சென்னையிலிருந்து இலங்கை செல்கிறார்கள். சென்னையில் இருந்து கொழும்புக்கு மதியம் 12 மணிக்கு வீரர்கள் புறப்படுகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்டில் விளையாடுகிறது. இந்தியாஇலங்கை மோதும் முதல் டெஸ்ட் வருகிற 18ந் தேதி காலேயில் தொடங்குகிறது. 2வது டெஸ்ட் 2630ந் தேதி வரை கொழும்பிலும், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆகஸ்ட் 37ந்தேதி வரை கொழும்பிலும் நடக்கிறது.
கேப்டன் டோனி இன்று சென்னை வருகிறார். சென்னை எம்.சி.சி. சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். அவருக்கு கவுரவ உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறது.
நாளை காலை அவர் இலங்கை செல்கிறார்.
No comments:
Post a Comment