Saturday, July 10, 2010

அர்ஜென்டினாவில் மரடோனாவுக்கு சிலை


ஜோகனஸ்பர்க், ஜுலை.9
எந்த ஒரு அணி தோற்றாலும் முதலில் அந்த அணியின் பயிற்சியாளரின் பதவிதான் ஊசலில் நிற்கும்.பிரேசில் தோல்வி கண்டது துங்கா ராஜினாமா செய்தார் . அர்ஜென்டினா தோல்வி கண்டது மரடோ னாவின் பதவி பறிபோகவில்லை மாறாக அவருக்கு சிலை வைக்கப்போகிறார்கள்.
உலக கோப்பை கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியிடம் அர்ஜென்டினா 40 என்ற கோல் கணக்கில் படுதோல்வி கண்டது. இந்நிலையில் தாய்நாடு திரும்பிய வீரர்களுக்கு உலக கோப்பையை வென்றது போல் பிரமாண்டமான வரவேற்பு கொடுத்தனர். அர்ஜென்டினா அதிபர் வீரர்களை தனது மாளிகைக்கு விருந்துக்கு அழைத்தார். அர்ஜென்டினா கால்பந்து சங்கத் தலைவர் ஜுலியோ ஹம்பர்டோ கிராடனோ, ''மரடோ னா தான் நினைப்பதை செய்யலாம்'' என்றார்.
தற்போது அர்ஜென்டினா எம்.பி ஜுவான் கபான்டி மரடோ னாவுக்கு சிலை வைக்க வேண்டும் என்ற புதிய கோரிக்கையை வைத்துள்ளார். இதை எல்லாம் நிச்சயமாக அர்ஜென்டினா வீரர்கள் எதிர்பார்க்கவில்லை.தோல்விக்கு தண்டனையாக பதவி நீக்கப்படும் என்று எதிர்பார்த்தால், சிலை வைக்கப்போறாங்களா? மரடோனாவுக்கே இது சற்று ஆச்சரியாமாத்தான் இருந்திருக்கும்.
மரடோ னாவுக்கு சிலை வைப்பது பற்றி ஜுவான் கபான்டி கூறியதவது, ''உலக கோப்பையில் அர்ஜென்டினா தோல்வி கண்ட பின்னரும் மரடோ னாவுக்கு உள்ள மவுசு குறையவில்லை. பியூனஸ் அயர்சில் அர்ஜென்டினா வீரர்கள் வந்திறங்கிய போது அவர்களை வரவேற்க திரண்ட கூட்டமே இதற்கு சாட்சி. மரடோ னா அர்ஜென்டினாவின் சொத்து. அர்ஜென்டினா என்றதுமே அவரது பெயர்தான் உலகத்தாருக்கு நினைவுக்கு வரும். எனவே அவரை கவுரவிக்கும் வகையில் பியூனஸ் அயர்சில் சிலை வைக்க வேண்டும்'' என்றார்.
ஏற்கனவே போகாஜுனியர்ஸ் அணிக்கு சொந்தமான பொம்பரானா ஸ்டேடியத்தில் மரடோ னாவுக்கு 300 கிலோ எடையில் 3 அடி வெண்கல சிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment