Tuesday, July 6, 2010

தடுப்பாட்ட வீரர்கள் இல்லாததால் அர்ஜென்டினா தோல்விபூட்டியா


ஜோகன்ஸ்பர்க், ஜூலை.6
அர்ஜென்டினா அணியின் தோல்விக்கு அந்த அணியில் தடுப்பாட்ட வீரர்கள் இல்லாததே காரணம் என்று பிரபல இந்திய கால்பந்து வீரர் பூட்டியா கூறியுள்ளார்.
அர்ஜென்டினாவின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அர்ஜென்டினா முன்னாள் வீரர் ஏஸ்வால்டோ : அர்ஜென்டினா அணி தனிப்பட்ட வீரர்களை நம்பி இருந்தது. ஜெர்மனி இளம் வீரர்களை கொண்ட ஒருங்கிணைந்த அணியை தான் நம்பியிருந்தது. எனவேதான் அந்த அணிக்கு வெற்றி கிடைத்தது என்று கூறினார்.
அர்ஜென்டினா, பிரேசில் இரு அணிகளின் தோல்விக்கு அந்த அணிகளில் சரியான தடுப்பாட்ட வீரர்கள் இல்லாததே காரணம் என்று பல நிபுணர்களும் கருத்து கூறியுள்ளனர். உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா, பிரேசில் அணிகள் காலிறுறுதி வெளியேறியது அந்த நாட்டு ரசிகர்களை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

No comments:

Post a Comment