Sunday, July 4, 2010

விம்பிள்டன் டென்னிஸ் செரினா சாம்பியன்



ஜோகன்னஸ்பர்க், ஜூலை 5
லண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் ரஷ்ய வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.
தனது அபார சர்வ்களின் மூலமும், வேகமான ஆட்டத் திறனாலும் ரஷ்ய வீராங்கனை வேரா ஜிவோனோரீவாவை 63, 62 என்ற நேர் செட்களில் வென்று 4வது முறையாக விம்பிள்டன் சாம்பியனாகியுள்ளார் செரினா.
விம்பிள்டனில் நடந்த இறுதிப் போட்டியில், முதல் செட்டை 36 நிமிடத்திலும், இரண்டாவது செட்டை 31 நிமிடத்திலும் முடித்து தனது ஆட்டத் திறனை சிறப்பாக நிரூபித்தார் செரினா.
9 ஏஸ்களை இறக்கிய செரினா, தனது முதல் சர்வ்களில் 94 விழுக்காடு புள்ளிகளை வென்றார். கிடைத்த 7 பிரேக் பாயிண்ட் வாய்ப்புகளில் 3இல் வென்றார். இப்படி எல்லா வீழ்த்தி வேரா ஜிவோனாரேவாவை திணறடித்து தான் ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபித்து சாம்பியன் ஆகியுள்ளார் செரினா.செரினா வெல்லும் 13வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது. விம்பிள்டனில் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதற்கு முன் இவர் 2002, 2003, 2009ல் விம்பிள்டனில் கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

No comments:

Post a Comment