60 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு சென்றது ஸ்பெயின்
ஜோகன்னஸ்பர்க், ஜூலை 5
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் 19வது உலக கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி போட்டியில் பராகுவே அணியை 10 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு சென்றது .ஸ்பெயின் அணி கடைசியாக 1950ல் பிரேசிலில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறி நான்காவது இடம் பிடித்திருந்தது. 60 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த <உலக கோப்பை கால்பந்து போட்டியின் கடைசி காலிறுதி போட்டியில் ஐரோப்பிய சாம்பியன் அணியும் , உலகின் "நம்பர்2' அணியான ஸ்பெயின் அணி உலக கால்பந்து தரவரிசையில் 31வது இடத்திலுள்ள பராகுவே அணியை சந்தித்தது.
கோல் எதுவுமில்லை
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ஸ்பெயின் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது அபாரமான தாக்குதல் ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் பராகுவே வீரர்கள் திணறினார்கள்.
டொரஸ், டேவிட் வில்லா, ஷவி இனெஸ்டா ஆகியோர் தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பல வாய்ப்புகளை வீணடித்தனர்.41வது நிமிடத்தில் கார்டஜோ, பராகுவே அணிக்கு முதல் கோல் அடித்தார். ஆனால் இது நடுவரால் "ஆப்சைடு' கோல் என அறிவிக்கப்பட, முதல் பாதி கோல் எதுவுமின்றி சமமாக (00) முடிந்தது.
இகர் அசத்தல்
மேலும் 2வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு "பெனால்டி கிக்' வாய்ப்பு கிடைத்தது. ஸ்பெயின் வீரர் சுலோனசா அந்த வாய்ப்பை தவறவிட்டார்.ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் ஸ்பெயினின் ஜெரார்டு பிக்யூ, பராகுவே வீரர் கார்டஜோவை, கையை பிடித்து இழுக்க, நடுவர் "எல்லோ கார்டு' கொடுத்து எச்சரித்தார். தவிர, பராகுவேக்கு "பெனால்டிகிக்' வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கார்டஜோ அடித்த இந்த பந்தை, ஸ்பெயின் கோல் கீப்பர் இகர் கேசில்லாஸ் அருமையாக தடுக்க, "சூப்பர்' வாய்ப்பு கைவிட்டு போனது.
அதிக கோல் அடித்த வீரர்
ஆட்டம் முடிய 7 நிமிடங்கள் இருந்த போது ஸ்பெயின் அணி கோல் அடித்தது.அல்காரஸ், ஸ்பெயினின் டேவிட் வில்லாவை பிடித்து தள்ளிவிட்டு, "எல்லோ கார்டு' பெற்றார். இதற்காக ஸ்பெயினுக்கு "பெனால்டிகிக்' கிடைத்தது இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்ட ஸ்பெயின் அணி வீரர்
இனெஸ்டா அதை பெட்ரோவுக்கு தட்டிக் கொடுக்க பெட்ரோஷா கோலடிக்கும் ஆர்வத்தில் அடித்த அந்த பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பியது. அப்போது அங்கிருந்த டேவிட் வில்லா, மீண்டும் திருப்பி அடித்தார். ஆனால் இம்முறை பந்து கோல் போஸ்ட்டில் பட்டு, கோலாக மாற, ஸ்பெயின் முன்னிலை பெற்றது. இது டேவிட் வில்லா இத்தொடரில் அடித்த ஐந்தாவது கோல் ஆகும்.
இந்த உலக கோப்பையில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை டேவிட் வில்லா பெற்றுள்ளார். பதில் கோல் அடிக்க பராகுவே அணி கடுமையாக போராடியது. ஆனால் பலன் இல்லை. இறுதியில் ஸ்பெயின் 10 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணி வரும் 7ம் தேதி டர்பனில் நடக்கும் அரையிறுதியில் 3 முறை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி அணியைச் சந்திக்கிறது. ஸ்பெயின் அணி ஜெர்மனியை வீழ்த்தி தான் 2008ம் ஆண்டு ஐரோப்பியக் கோப்பையைக் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்து
.
ஆரூடம் பலித்தது!
அர்ஜென்டினாவுக்கு எதிராக ஜெர்மனிக்கு ஜெயிக்கும் என ஆக்டோபஸ் கணித்தது நடந்து விட்டது.
பெர்லினில் உள்ள மீன்கள் அருங்காட்சியகத்தில் உள்ள பால் என்ற ஆக்டோபஸ், கால்பந்து போட்டிகளின் முடிவுகளை சரியாக சொல்லி பிரமிக்க வைத்து வருகிறது. தொட்டிக்குள் 2 சிறிய பெட்டிகள் ஆக்டோபஸுக்கு பிடித்த உணவுகளுடன் இறக்கப்படுகின்றன. அதோடு பெட்டியில் கால்பந்து போட்டியில் மோதும் அணிகளின் நாட்டுக் கொடியும் வைக்கப்படுகிறது. ஆக்டோபஸ் எந்த பெட்டிக்குள் போகிறதோ, அந்த அணிதான் வெற்றி பெறுகிறது. லீக், ரவுண்ட் 16 சுற்றுகளின்போது ஆக்டோபஸ் கூறியது போல் ஜெர்மனி அணியின் முடிவு இருந்தது.
இந்த நிலையில் அர்ஜென்டினாவுடனான காலிறுதி போட்டிக்கு முன்பு ஜெர்மனி கொடி வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கு சென்று அர்ஜென்டினாவை காலிறுதியில் ஜெர்மனி ஜெயிக்கும் என கணித்தது. அதுவும் சரியாக நடந்து விட்டது. தொடர்ந்து ஜெர்மனியை சரியாகக் கணித்து வரும் ஆக்டோபஸ் அரை இறுதியின் போது என்ன சொல்லப் போகிறதோ என்று ஜெர்மனி ரசிகர்கள் ஏங்கித் தவிக்கிறார்கள்.
No comments:
Post a Comment