Saturday, July 3, 2010

வரலாறு படைக்குமா கானா?

ஜோகன்ஸ்பர்க், ஜூலை 2
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதில் 2வது காலிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது.
இந்த போட்டியில் உலக தர வரிசையில் 16வது இடத்திலுள்ள உருகுவே அணியும் கானா அணியும் மோதவுள்ளது .இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும்
தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள உருகுவே ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கானா அணிகள் மோதுவதால் ரசிகர்ளிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய வரலாறு
அதோடு மட்டுமில்லாமல் ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள எந்த ஒரு அணியும் இதுவரை அரையிறுதிக்கு நுழைந்தது இல்லை . இதுவரை 1990ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் கேமரூனும் , 2002ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் செனகல் அணியும் தான் காலிறுதி வரை நுழைந்துள்ளன.இந்த வரலாற்றை உடைத்து கானா அணி புதிய வரலாறு படைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் அசமா ஜியான், கெவன் பிரின்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.கானா அணி தனது லீக் ஆட்டத்தில் செர்பியாவை 10 என்ற கணக்கில் வென்றது. ஆஸ்திரேலி யாவுடன் 11 என்ற நிலையில் டிரா'' செய்தது.வலிமை வாய்ந்த ஜெர்மனியிடம் 01 என்ற கணக்கில் தோற்றது . ரவுண்ட் 16 சுற்று போட்டியில் கூடுதல் நேரத்தை பயன்படுத்தி 21 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்தது.
இதேபோல் 2 முறை உலக கோப்பையை வென்ற (19301934) உருகுவே அணியில் லூயிஸ் சுராஸ், டிகோ போர்லான் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளதால் அந்த அணியும் அரையிறுதிக்கு நுழையும் ஆர்வத்திலுள்ளது. அந்த அணி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவையும் (30), மெக்சிகோவையும் (10) என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது . பிரான்சுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. ரவுண்ட் 16 சுற்று ஆட்டத்தில் 21 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வென்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment