ஜோகனஸ்பர்க், ஜுலை.2
ஆப்பிரிக்க கண்டத்தில் முதன் முறையாக நடைபெறும் 19வது உலக கோப்பை கால்பந்து போட்டி தென்னப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பிறகு இந்த தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் காலிறுதி சுற்றின் முதல் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணியும் ,உலக கால்பந்து தரவரிசையில் 4வது இடத்திலுள்ள நெதர்லாந்து அணியும் மோதுகிறது.கடந்த மாதம் 11ந்தேதி தொடங்கிய உலக கோப்பை போட்டி தற்போது விறுவிறுப்பான நிலைக்கு சென்றுள்ளது. கடந்த 26ந்தேதி தொடங்கி 29ந்தேதி முடிவடைந்தது ரவுண்ட் 16 சுற்று .
காலிறுதி அணிகள்
இந்த சுற்று போட்டிகளின் முடிவில் உருகுவே, கானா, ஜெர்மனி, அர்ஜென்டினா, நெதர்லாந்து, பிரேசில், பராகுவே, ஸ்பெயின் ஆகிய 8 நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.இதுவரை நடந்த 18 உலக கோப்பை
போட்டிக்கும் தகுதி பெற்ற ஒரே அணி பிரேசில் . அந்த அணி 1958, 1962, 1970, 1994, 2002 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பையை கைப்பற்றியது. தற்போது 6வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.இதற்கு வலுவாக பிரேசில் அணியில் பேபினோ, ரோபினோ, ககா, மயக்கான் ஜூயன் போன்ற உலகின் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர்.
அந்த அணியின் கோல்கீப்பர் ஜூலியோ சீசர் சிறப்பாக செயல்படுகிறார்.இந்நிலையில் சிறந்த நடுகள வீரரான இலனோ காயம் அடைந்துள்ளது பிரேசில் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.இதனால் அவர் நெதர்லாந்துக்கு எதிராக ஆடமாட்டார் என்று தெரிகிறது அவர் ஏற்கனவே 2 கோல்கள் அடித்துள்ளார். இதேபோல் பிரேசில் அணிக்கு எல்லா வகையிலும் சவால் விடும் அணியாக நெதர்லாந்து கருதப்படுகிறது.அந்த அணியில் வெஸ்லி சினைடர், ரோபின் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.
இதுவரை....
இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய போட்டியில் பிரேசில் 3 ஆட்டத்திலும், நெதர்லாந்து 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றன. 4 ஆட்டம் ""டிரா'' ஆகியுள்ளது.
சுற்று போட்டிகள்
நெதர்லாந்து அணி லீக் போட்டியில் தோல்வி எதையும் சந்திக்காமல் காலிறுதியில் நுழைந்து உள்ளது. அந்த அணி ""லீக்'' ஆட்டத்தில் டென்மார்க்கையும் (20), ஜப்பானையும் (10), கேமரூனையும் (21) தோற்கடித்தது.
2வது சுற்றில் 21 என்ற கணக்கில் சுலோவாக்கியாவை வீழ்த்தியது.
பிரேசில் அணி லீக் ஆட்டத்தில் வடகொரியாவையும் (21), ஐவேரிகோஸ்டையும் (31) வென்றது. போர்ச்சுக்கலுடன் (00) ""டிரா'' செய்தது. 2வது சுற்றில் சிலியை (30) வென்று காலிறுதி சுற்றுக்கு நுழைந்தது.
No comments:
Post a Comment