லாகூர், மார்ச். 11
பாகிஸ்தான் அணியின் யுனுஸ்கான்,முகம்மது யூசுப்புக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளது.சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர் போட்டிகளில் விளையாடியது. விளையாடிய அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விகளால், அணி வீரர்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதனால் தான் தோல்வி அடைய நேரிட்டதாகவும் புகார் கூறப்பட்டது.மேலும் அப்ரிடி, ரானா ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதாகவும் புகார் கூறப்பட்டது. இதனையடுத்து கமரன் அக்மல், அவரது சகோதரர் உமர் அக்மல் ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகத்துடன் மோதினார்கள். இந்த புகார் சம்பவங்கள் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் விசாரணை மேற்கொண்டது.இந்த விசாரணையில் வீரர்கள் தவறு செய்திருப்பது தெரிய வந்தது.இதனையடுத்து நேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கேப்டன் முகமது யூசுப், யூனுஸ்கான் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதித்தது.சோயிப் மாலிக், ரானா நவீத் அல்ஹசன் ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடையும்,பந்தை சேதப்படுத்திய அப்ரிடிக்கு ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் சகோதரர்களான கமரன் அக்மலுக்கு ரூ.30 லட்சமும், உமர் அக்மலுக்கு ரூ.10 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment