சிட்னி,மார்ச் 3.
நாட்டுக்காக கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் போதுஅரசியலில் நுழையக் கூடாது என்று ஜெயசூர்யாவுக்கு ,ரணதுங்கா கண்டனம் தெரிவித்துள்ளார்.இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜெயசூர்யா. 40 வயதான இவர் 2007ம் ஆண்டு, டெஸ்ட் போட்டியிலிருந்து ஒய்வு பெற்றார். ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டியில் ஆடி வருகிறார். வரும் 2011ம் ஆண்டு உலககோப்பைக்கு பிறகு அவர் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.இந்நிலையில் இவர் தனது ஒய்வுக்கான முன்னோட்டமாக வரும் இலங்கை பாராளுமன்ற தேர்தலில் தமிழின படுகொலைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிபர் ராஜபக்சேயின் சுதந்திரா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவர் தனது சொந்த ஊரான மதரா தொகுதியில் போட்டியிடுகிறார். இது குறித்து ரணதுங்கா கூறும் போது ஜெயசூர்யா தாரளாமாக அரசியலுக்கு வரலாம் என்றும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது அரசியலில் நுழையக் கூடாது என்றும் ஆளும்கட்சிக்காரர் என்பதற்காக அணிக்கு வீரர்களை தேர்வு செய்யக்கூடாது என்று கூறினார்.இவர் 19932003ம் ஆண்டு வரை இலங்கை அணியின் கேப்டனாக பணியாற்றினார். மோசமான ஆட்டம் காரணமாக 2006ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டவர் ராஜபக்சேயின் வற்புறுத்தலினால் தனது முடிவை மாற்றிக் கொண்டு தற்போது கிரிக்கெட் விளையாடி வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஜெயசூர்யா கூறும்போது விளையாட்டு வீரர்கள் அரசியலில் நுழையக்கூடாது என்று சொல்லும் இலங்கை அரசியலமைப்புச் சட்டம் எதுவும் இல்லை என்றார்.
No comments:
Post a Comment