Sunday, December 19, 2010

டிவிடி வீடியோக்களை யூடியூப்பிற்கு அப்லோட் செய்வது எப்படி?

திருமணம், பிறந்தநாள் போன்ற முக்கியமான விழாக்களை வீடியோ கமெரா மூலம் ரெக்காட் செய்து வைத்திருப்பீர்கள்.
அவற்றை டிவிடிகளாக ரெக்காட் செய்து வைத்திருந்தால் இந்த வீடியோக்களை எவ்வாறு நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வது. யூடியூப்பில் போட்டுவிட்டால் அனைவரும் பார்த்து ரசிக்கலாமல்ல?
யூடியூப்பிற்கு அப்லோட் செய்வதற்கான படிமுறைகள் இங்கே.


1. முதலில் டிவிடி பைல்களை கணனிக்கு காப்பி செய்துவிடுங்கள். இதற்கு VidCoder    டூலைப்பயன்படுத்தலாம்.

இதை ரன் செய்து டிவிடியை கணனியில் இட்டதும் Source   என்ற இடத்தில் டிவிடியில்  VIDEO_TS  எனும் பால்டரை தேர்வு செய்தல் வேண்டும்.

2.கன்வர்சேசனை தொடங்குவதற்கு    VidCoder  அழுத்தி அல்லது Ctrl + T   இல் எல்லா டைட்டில்களையும் தேர்வு செய்து என்கோட்டை அழுத்துங்கள். (டிவோல்ட் செட்டிங்கை மாற்ற வேண்டாம்) வீடியோவின் அளவைப்பொறுத்து என்கோட் செய்வதற்கு நேரம் எடுக்கலாம்.

3. யூடியூப்பில் வீடியோ நேரம் 15 நிமிடமே பார்க்கும் படியாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். எனவே டிவிடி வீடியோக்களையும் அதற்கேற்றால் போல ஸ்பிலிட் செய்ய வேண்டும். இதற்கு Mக4ஆணிது என்ற மென்பொருளை பயன்படுத்துங்கள்.

4. இனி வீடியோக்களை யூடியுப்பிற்கு அப்லோட் செய்ய ஜாவா மூலம் இயங்கும் டூலை பயன்படுத்தினால் வீடியோக்களை பிரித்து தரவேற்ற வசதியாக இருக்கும். யூடியூப்பின் அப்லோட் பக்கத்திற்கு சென்று  upload video  என்பதை கிளிக் செய்யுங்கள்

5. தனித்தனியாக 15 நிமிடங்கள் கொண்ட வீடியோக்களை தொடர்ச்சியாக பார்ப்பதற்கு யூடியூப்பின் அனோட்டேஷன் என்ற வசதியை பயன்படுத்தலாம்.  முதலாவது வீடியோவை தேர்வு செய்து அனோட்டஷன் எடிட்டரில் கடைசியில் ஸ்கோரல் செய்து வீடியோ நிறைவு பெறும் இடத்தில்
speech bubble   மூலமாக இரண்டாவது வீடியோவின் இணைப்பை தர வேண்டும். இவ்வாறு எல்லா கிளிப்புகளுக்கும் செய்து விட்டால் அனைத்து வீடியோக்களும் தொடர்ச்சியாக பார்க்க முடியும்.  இதன் பிளே லிஷ்ட் வசதிமூலம் எல்லா வீடியோ இணைப்புக்களையும் ஒரே பக்கத்தில் பார்க்கும் படி செய்து விடலாம்.

No comments:

Post a Comment